Skip to main content

விழித்துக் கொள்ளுங்கள் கட்சித் தொண்டர்களே...!இரண்டு நாட்கள் முன்னர் தமிழகம் முழுவதுமே ஒருவித பரபரப்புடனே இருந்தது. காரணம் என்ன என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். மு.க.ஸ்டாலின் கைது என்ற அந்த பரபரப்பு செய்தி தேன் ஈக்கள் போல பரவ ஆங்காங்கே இருந்த தி.மு.க., ஆதரவாளர்கள் சாலை மறியல், கண்ணாடி உடைப்பு போன்ற அரும் பெரும் செயல்களை செய்து தமிழகத்தை பெருமைக்கு உள்ளாக்கினர்.

என்னதான் நடக்கிறது? இல்லை என்ன தான் நடந்தது? கடந்த ஜூலை 29.,ம் தேதி சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்த தி.மு.க., அனைத்து பள்ளி மாணவ, மாணவியரையும் அழைத்திருந்தது. ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த இந்த போராட்டம் ஆடி காத்துல பத்த வச்ச தீக்குச்சு போல தொடங்கிய நெருப்பு புஸ்ஸெனபுஸ்வாணமானது.

இருந்தாலும் 5 வருடம் தமிழகத்தையே ஆட்டி படைத்த ஒரு கட்சி சார்பில் தொடங்கப்பட்ட போராட்டம் இந்த அளவிலே முடங்கிடுமா என்ன.? திருவாரூர் மாவட்டம் கொரடச்சேரி என்னும் இடத்தில் அரசு பள்ளியை மூட சொல்லியதால் பள்ளிக்கு விடுமுறை விட்டனர். இதை தொடர்ந்து மாணவர்கள் பஸ்ஸில் பயணித்து வீடுகளுக்கு செல்ல முற்பட்ட போது ஒரு பஸ் எதிரில் வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 12வயது சிறுவன் ஒருவன் பலியானான் மேலும் 19 பள்ளி மாணவர்கள் காயத்துக்கு உள்ளாகினர்.இது நம்மில் பலருக்கு தெரிந்த விடயம் தான். தெரிந்தோ தெரியாமலோ எங்கோ ஒரு மூலையில் இந்த விபத்துக்கு இந்த போராட்டமும் ஒரு சிறிய காரணமாகி போனது.!!!

இந்த விபத்து சம்பவம் தான் ஒரு விதத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நடந்த சாலை மறியலுக்கு காரணம் என கூறலாம். இந்த சமயத்தில் மன்னார்குடி பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.க.ஸ்டாலின் கொரடச்சேரி பகுதிக்கு சென்று இறந்த மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி விட்டு திரும்பினார்.

விபத்துக்கு காரணம் பள்ளிகளை போராட்டத்துக்கு அழைத்த திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தான் காரணம் என்று போலீஸார் ஒரு அருமையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக திருத்துறை பூண்டிக்கு சென்று கொண்டிருந்த ஸ்டாலின் காரை வழிமறித்து உடனிருந்த கலைவாணனை கைது செய்ய முயற்சித்து இருக்கின்றனர். சரியான ஆதராம் இல்லாமல் கைது செய்ய விடமாட்டேன் என அதிரடியாக ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட கலைவாணனை கைது செய்யும் முன்னர் என்னையும் கைது செய்யுங்கள் என்று வாதம்செய்திருக்கிறார் . உடனே அவரையும், கலைவாணன், பழனிமாணிக்கம், ஏ.கே.எஸ்.விஜயன் முதலானோரையும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 2 மணி அளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தான் விடயம்.! இது நாம் அனைவரும் அறிந்தது.

பொதுவாக சாலை மறியல், ஒப்புமை வாங்காத போராட்டம் போன்ற செயல்கள் நடைபெற்றாலே பாதுகாப்பு காரணமாக போலீஸார் அவர்களை கைது செய்து அங்கே நிகழ இருந்த பரபரப்பு சூழலை தடுப்பர் இது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்த விடயம் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக காட்டுத்தீ போல பரவ தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்தது. சாலை மறியல் செய்யப்பட்டு பல மக்களுக்கு இது இடையூரா(றா)கி போனது.

எனக்கு ஒன்று புரியவில்லை.! திமுக மக்களுக்காக போராடுகிறது என்று கலைஞர் சொல்கிறாரே இது மக்களுக்கான போராட்டமா இல்லை அவரது கட்சிக்கான போராட்டமா.? உண்மையில் மக்கள் மீது அக்கறை இருப்பவர் என்ன செய்யவேண்டும்.? ஜெ., தான் தீராத பகை கொண்டவர் போல கலைஞரால் கொண்டு வரப்பட்டதை நான் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். பொதுநலவாதி கலைஞராவது விட்டு தரலாம் அல்லவா.? விட்டு தருவது என்றால் அவருடைய சுயத்தை இங்கு யாரும் விட்டு தர சொல்லவில்லை. போட்டி இல்லை என்றால் ஏதோ ஒரு முடிவு பிறக்கும் தானே.! போட்டி போட்டு கொண்டு ஜெ.,வும் சமச்சீர் கல்வியை விட மாட்டேன் என சொல்வதும், கலைஞரும் அதை கொண்டு வராமல் விடமாட்டேன் என துடிப்பதும் ஆஹா ஆஹா இரண்டு ஓங்கிய கைகளிலும் சரமாரியான கொட்டு ஓங்கி ஓங்கி விழுகிறது படிக்க துடிக்கும் என் மாணவன் தலையில்.

உங்கள் இருகட்சிகளின் அரசியல் போராட்டத்தில் ஏன் மாணவர்களை பலி கடா ஆக்குகிறீர்கள்?

படிக்க போகும் மாணவனை அழைத்து படிக்க போகாதே உனக்கு அருமையான படிப்பு காத்திருக்கு என்று ஆசை காட்டுகிறது ஒரு பக்கம். ஒழுங்கா படிக்க போயிடு அடுத்த வருசம் தான் உனக்கு அதெல்லாம் கிடைக்கும் என்று பயம் காட்டுகிறது இன்னொரு பக்கம்.!!! ஒன்றுமே புரியாமல் விழிபிதுங்கிய மாணவர்கள் திகைத்து போய் நிற்கின்றனர். சமச்சீர் கல்வி வருகிறதோ இல்லையோ இங்கே தமிழகத்தின் அமைதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு தான் வருகிறது. இதற்கு யாரை குறை சொல்வது என்பதே ஒரு பெரிய கேள்வி குறியாகி போகிறது...!!!

கலைஞர் போன இடத்தில் ஒய்யாரமாக அமர்ந்த ஜெ., எந்த ஒரு விமர்சனத்திற்கும் அஞ்சாமல் தெளிவாக குழப்பமான முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு யாரை குறை சொல்வது.? சமச்சீர் கல்வி ஒரு பக்கம் அமைதியை அழித்தால் இன்னொரு பக்கம் நில மோசடி போன்ற பூசல்கள். ஜெ., ஆட்சிக்கு வந்ததும் தனிக்குழு அமைத்து நில மோசடி புகார்களை கண்காணிக்க செய்யப்பட்டது நாம் அறிந்ததே.!!

அதற்கு காரணம் என்ன.? திமுக ஆட்சி காலத்தில் மிரட்டி நிலத்தை வாங்கும் செயல் தலை விரித்து ஆடியது என்பது பலருக்கு தெரியாத உண்மை. இதில் நேரடியாக திமுகவின் பெரும் புள்ளிகள் ஈடுபட்டனர். திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியை திமுக.,வின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கேட்டு மிரட்டியது முதல் சென்னைக்கு அப்பாற்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களை மிரட்டி வாங்குவது போன்ற செயல்கள் போன ஆட்சியில் குறிப்பிடப்பட வேண்டியவை.

இதை தோண்டி எடுத்தால் திமுக.,வின் பெரும் புள்ளிகள் பலரை சிறையில் அடைத்து சுகம் காணலாம் என்று ஜெ., நினைத்தார். அச்செய்கையில் சிறிய வெற்றியையும் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சமீபத்தில் இதன் விவகாரமாக கைது செய்யப்பட்டார். இதுவும் ஆங்காங்கே பதற்றம் ஏற்பட காரணம் ஆகி போனது. சரி., ஜெ., கலைஞருக்கு எதிராக செயல்பட்டாலும் இந்த விடயத்தில் ஒரு சிறப்பான செயல்பாட்டை தானே செய்கிறார் என்று உங்களுக்கு தோன்றலாம்...!!!

சமீபத்தில் அதிமுக.வின் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் அதிமுக அமைச்சர் மீது நில மோசடி புகார் அளித்துள்ளார். அதுவும் அம்மையார் ஆரம்பித்த அதே சிறப்பு குழுவிடம். இந்த மனு அப்படியே கை மாறி கை மாறி இறுதியில் திருவண்ணாமலை பார்ட்டி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கும்மு கும்முனு கும்முவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அலறி அடித்து ஓடிய திருவண்ணாமலை பார்ட்டி அங்கு சென்றதும் தெரியாமல் கேஸ் கொடுத்துவிட்டேன் என்று தலை தெறிக்க ஓடி இருக்கிறார்.

ஒரே குழப்பமாக இருக்கிறதே.!! இந்த குழு நில மோசடி காரர்களை கண்டுபிடிக்க கொண்டுவரப்பட்டதா இல்லை திமுக.,காரர்களை தாக்க கொண்டுவரப்பட்டதா.? ஒன்றுமே புரியவில்லையே.!!!

இது மாதிரி சமாச்சாரங்களை பார்த்து தமிழகத்தின் குழந்தை முதல் பெரியவர்கள் வரை கையை எடுத்து கன்னத்தில் வைத்து சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.!!!

அரசியல் செய்யும் மும்முரத்தில் தன் குழந்தைகளின் கல்வியை பாழ்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்பது இரு கழக தொண்டர்களுக்கு புரியவில்லையா என்ன.?

தொண்டனே உன் கட்சி விழிக்காது... ஆனால் நீ விழித்துக்கொள்ளலாம்..!! விழித்தெழு தொண்டனே!!! உன் கட்சியின் கொள்கையில் அவிழ்த்துவிடப்பட்ட கோவணம் போல காற்றில் பறக்கிறது. உன் கட்சியின் கோவணம் உன் குடும்பத்தாரின் கழுத்தை நெரிக்கிறது. அதன் கொள்கையை காப்பாற்ற வேண்டாம், அதன் அநியாயத்திற்கு துணை போகாமல் இரு..!!

உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் உன் குடும்பத்துக்கு தொண்டனாக இரு..!! உன் கட்சி தானாக உன் வழி தேடி வரும்... தொண்டனே மறியல்களில் ஈடுபட்டு வன்முறையில் திளைத்து மற்றவர்களையும் வன்முறைக்கு இழுக்காதே!!!!

விழித்துக்கொள் தொண்டனே!! உன் கொள்கையை சீண்டி செயல்படும் உன் கழக கட்சிகளுக்கு எதிராக குரலை எழுப்புவதற்கு கிஞ்சித்தேனும் தயங்காதே...!!!

மலரட்டும் தன்மான தமிழகம் அதில் அழிந்தொழியட்டும் சுயநல அரசியல்.

-தம்பி கூர்மதியன்

(நன்றி: கழுகு ஆகஸ்ட் 01, 2011)

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…