அதிகரிக்கும் மின்வெட்டு மின்சார பயன்பாடு பற்றிய ஒரு அலசல்!

மின்சாரப் பற்றாக்குறை பற்றி விமர்சிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு  முறை மின் இணைப்பு போகும் போதெல்லாம் அரசினை குற்றம் சொல்லும் மக்களுக்கு தாங்களும் இந்த பாதிப்பிற்கு காரணமாணவர்கள் என்று தெரியாது.

மின்சாரப் பயன்பாடு பற்றி கூறும் இக்கட்டுரையை வாசித்து விட்டு ஒரு முடிவெடுங்கள், எப்படி எல்லாம் மின்சாரத்தை சேமிக்கலாம் என்று....


மின்சாரம்-இதை ஆற்காடு வீரசாமியிடம் போய் சொன்னால் அலறி அடித்து கூட ஓட செய்வார். போன ஆட்சியை ஆட்டி படைத்த ஒன்று இந்த மின்சாரம். இந்த முறை ஆட்சி மாற்றத்துக்கு ஒரு பெரும் பங்கு வகித்தது இந்த மின்சாரம் என்றும்  கூட சொல்லலாம். 

கடந்த ஆட்சியில் சென்னையை விடுத்து தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் இந்த மின்சாரமின்மை என்னும் கொடுமை. மின்சாரத்தை சேமிக்க நாம் சரியான வழிவகுக்கவில்லை என்பது இருந்தாலும் இந்த பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆட்டம் பெரும் ஆட்டமாகி போவது தான் இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு மெக்கானிக் ஒரு ஜெனரேட்டர் ஒன்று கண்டுபிடித்தார். அதாவது எரிப்பொருளே அற்று அது மின்சாரம் தயாரிக்க கூடியது. இதை பற்றிய செய்தி அவரை ஊக்குவிக்கும் வகையில் தினமணியில் வந்தது. ஆனால், அன்றிரவே அவருக்கு அடையாளம் அறியாத நபர் மூலம் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இதெல்லாம் எதற்காக.!? நமக்கு புத்திசாலித்தனம் இல்லாவிடில் யாருமே புத்திசாலித்தனமாக 
இருக்கக்கூடாது என்று நினைக்கும் பாங்கா.!? இல்லை. இதனால் தமது தொழிலுக்கு பாதிப்பு வந்துவிடும் என்று ஓடும் தொழிலதிபர்களும், அவருக்கு கைகூலியாக இருக்கும் நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளும் தான் காரணம். அவரின் கண்டுபிடிப்பை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது அறியாமல் இப்போது விழி பிதுங்கி இருக்கிறார் அவர்.

சரி. அவரை விடுவோம். இப்போது வங்கி உபயோகம் என்பது அளவுக்கு அதிமாகவிட்டது. வேலைக்கு செல்பவர் மாத சம்பளம் முதல் வங்கி மூலமாக மாறி காலம் பல ஆனது. எல்லோரும் வங்கியில் பணமெடுக்க உபயோகிக்கும் ஒன்று தான் ATM. வங்கிகள் இல்லாத இட்டு முடுக்குகள் எல்லா இடத்திலும் இந்த ATM சேவையை ஒவ்வொரு வங்கியும் போட்டி போட்டுக்கொண்டு ஆரம்பித்து இருக்கின்றன. அதே போல் தொடங்கிய ATM மெஷின்களுக்கு ஏசி போடுவது என்பது தவிர்க்கபடமுடியாத கட்டாயமாகி போகிறது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஏசி இயங்கினால் 1.5 யூனிட் மின்சாரம் இழுக்கிறது. இரவு பகல் பாராது ஒவ்வொரு நாளும் இயங்கிகொண்டிருக்கும் ATM சென்டரின் ஏசி எவ்வளவு மின்சாரம் இழுக்கும் என்பதை நீங்களே கணக்கு செய்து பாருங்கள். அதுவும் சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏசி.,க்கள் இருக்கின்றன. அப்படியென்றால் தமிழகம் முழுதும் எத்தனை ஏடிஎம் இருக்கின்றன. அத்தனைக்கும் ஏசி., மின்சாரம் என்ன ஆகிறது.!? கணக்கு போட்டு பார்த்தால் மலைத்தே போய்விடுகிறது. ஒரு ஏடிஎம்.,இல் ஒரு மாதத்திற்கு உபயோகிக்கப்படும் மின்சாரம் ஒரு கிராமத்தில் 20 குடும்பங்கள் உபயோகபடுத்தும் மின்சாரம் என்பதை கேட்டால் வருத்தமாக இல்லையா.!?

 
இப்படி வீணாக்குவதை நம் அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது என்று யாரும் கோபிக்க வேண்டாம்.! நம் அரசாங்கம் சட்டதிட்டங்களில் எப்போதும் கறார் பேர் வழி தான்.

தமிழகத்தில் காப்பகங்கள் அதிகமாகி கொண்டே போவது நாம் அறிந்ததே. காசுக்காக அன்றி சேவையாக எண்ணும் பலர் தம்மால் முடிந்ததை வைத்து ஆங்காங்கே காப்பகங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு வழியில் பண உதவி எதுவும் கிடையாது. மக்களின் டொனேஷன் பணத்தை கொண்டே இச்சேவை செய்யப்பட்டு வரும். 

இன்னுமொன்று இருக்கிறது. மக்களின் அவசர நிலை புரிந்தும், மக்களின் வசதிக்காகவும் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம். சுத்தமே இல்லாமல், உள்ளே செல்லும் வழிகளில் கூட கழிவுகளாக நிரப்பப்பட்ட பொதுக்கழிப்பிடத்தில் நுழையவே முடியாது, அத்தகைய அழகின் உள்ளே காலடி எடுத்து வைக்க இப்போது பல இடங்களில் நிர்ணயம் ரூபாய் 5 ஆகிவிட்டது. 

இந்த இரண்டு இடத்தையும் எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு இடத்திற்க்கும் மின்சார வசதி என்பது மிகவும் அவசியமிக்க ஒன்று.  மின்சார கட்டணம் என்பது டொமஸ்டிக் மற்றும் கமர்ஷியல் என்று இரு விதமாக வசூலிக்கப்படுகிறது. பொதுக்கழிப்பிடத்தை சேவை என்றும் அவசிய தேவை என்றும் கருதும் அரசு, பொதுக்கழிப்பிடத்திற்கு டொமஸ்டிக் விலையில் மின்சாரக்கட்டணம் வசூலிக்கிறது. மேலும், காப்பக சேவைக்கு முன்னரே கஷ்டத்தில் நடத்தும் காப்பகத்திற்கு மின்சாரம் கமர்ஷியல் விலைக்கே வழங்கபடுகிறது. மின்சாரம் மட்டுமின்றி கேஸ் சப்ளையும் கமர்ஷியல் விலைக்கே தருகிறது. அங்கும் இங்கும் வீணாக செலவிடும் மின்சாரத்தின் பயன்பாட்டில் நமது அரசாங்கம் படு கறார் என்பதை இது வைத்து நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

சரி இப்போதைய நிலை எப்படி இருக்கிறது.!? மின்சார பயன்பாடு எமக்கு அரசு ஒழுங்காக வழங்கவில்லை என்று இப்போது சென்னை மக்கள் தான் அதிகமாக கூப்பாடு போடுகின்றனர். ஆம்.! சென்னையில் மின்சார தட்டுப்பாடு நேரம் அதிகமாகி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வட சென்னையில் உள்ள வல்லூரில் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட 3 யூனிட்டுகளை அமைக்க உள்ளது.  அதனால் இனி சென்னையில் பல பகுதிகளில் நான்கு மணிநேரம் மின் துண்டிப்பு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு அடுத்த நாளே பின்வாங்கப்பட்டது. இதற்கு காரணம் மக்களுக்கு புது அரசு மேல், மேலும் மேலும் அதிருப்தி வந்துவிட கூடாது என்பது கூட இருக்கலாம். ஆனால் சென்னையில் இதுவரை இருந்த ஒருமணிநேர மின்துண்டிப்பு இப்போது இரண்டு மணிநேரமாகிவிட்டது. இது இன்னும் கொஞ்ச நாட்களில் கூடும் என்று சொல்லும் நோக்கமா.!? 

அரசை மட்டும் குற்றம் சாடி ஒன்றும் ஆகபோவதில்லை. நாம் ஒன்றாக இணைந்து மின்வாரியத்தின் கோரிக்கை படி உபயோகம் அற்ற நேரத்தில் மின்சேமிப்பை ஏற்படுத்துவோம்.!! முக்கியமாக சென்னை வாசிகள். இதனால் நாம் நமது வசதியை மேம்படுத்தலாம்.

-தம்பி கூர்மதியன்

(நன்றி: கழுகு- ஜூலை 5, 2011)

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி