Posts

Showing posts from August, 2014

தன்மான இந்தியனாய் வாழ - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

Image
எட்டி உதைக்கப்பட்ட ஒரு வர்க்கத்தின் கீழிருந்து நான் வருகிறேன். எனது இருப்பிடத்திலே எனக்கு அனுமதி மறுக்கப்படும். ‘நாய்களும் இந்தியர்களும் அனுமதி இல்லை’ என்று எனது நிலத்திலே எழுதப்பட்ட பலகைகள் நடப்பட்டன. செருக்கும் வீரமும் எனக்கு ஊட்டப்பட்டே வளர்க்கப்பட்டேன். நான் எனது அடையாளமாக கருதிய அனைத்தும் என் முன்னே அசிங்கப்படுத்த படுவதை கண்டேன். உள்ளுக்குள்ளே ஒரு வெறிக்கொண்டு திமிறிக்கொண்டு எழப்பார்த்தேன். என்னை சுற்றி ஒரு கூட்டம் என்னைப்போன்றே கொதித்து எழுந்தது. என்னுள் ஊசலாடிக்கொண்டிருந்த தைரியம் பீறிட்டுக்கொண்டு எழுகிறது. என்னை சுற்றி கேடயங்களும், ஈட்டிகளுமாய் மக்கள் கூட்டம் கிளம்புகிறது. ஒரு புரட்சி பிறக்க போகிறது. வடக்கும், தெற்கும், மேற்கும், கிழக்கும் ஒன்றாய் இணைந்து வரலாற்றை மாற்றி அமைக்க போகும் சமயம் எழப்போகிறது.
உயிரோடு இருந்து என்ன பயன்? அடிமையாய் வாழ்வை வாழ்ந்தொழிய எதிர்த்து நின்று நெஞ்சில் குத்துண்டு மாய்க்கப்படுவதே சிறப்பு என்று எண்ணினேன்.எதிர்த்து நின்றேன். எனக்கு இருவழி காட்டப்பட்டது. எதிர்த்து நின்று அடிவாங்கு அல்லது அடிக்கு முன்பே எதிரியை அடித்தொழி. என்னுடன் கிளம்பிய கூட்டம் இரு…