Skip to main content

தன்மான இந்தியனாய் வாழ - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!எட்டி உதைக்கப்பட்ட ஒரு வர்க்கத்தின் கீழிருந்து நான் வருகிறேன். எனது இருப்பிடத்திலே எனக்கு அனுமதி மறுக்கப்படும். ‘நாய்களும் இந்தியர்களும் அனுமதி இல்லை’ என்று எனது நிலத்திலே எழுதப்பட்ட பலகைகள் நடப்பட்டன. செருக்கும் வீரமும் எனக்கு ஊட்டப்பட்டே வளர்க்கப்பட்டேன். நான் எனது அடையாளமாக கருதிய அனைத்தும் என் முன்னே அசிங்கப்படுத்த படுவதை கண்டேன். உள்ளுக்குள்ளே ஒரு வெறிக்கொண்டு திமிறிக்கொண்டு எழப்பார்த்தேன். என்னை சுற்றி ஒரு கூட்டம் என்னைப்போன்றே கொதித்து எழுந்தது. என்னுள் ஊசலாடிக்கொண்டிருந்த தைரியம் பீறிட்டுக்கொண்டு எழுகிறது. என்னை சுற்றி கேடயங்களும், ஈட்டிகளுமாய் மக்கள் கூட்டம் கிளம்புகிறது. ஒரு புரட்சி பிறக்க போகிறது. வடக்கும், தெற்கும், மேற்கும், கிழக்கும் ஒன்றாய் இணைந்து வரலாற்றை மாற்றி அமைக்க போகும் சமயம் எழப்போகிறது.

உயிரோடு இருந்து என்ன பயன்? அடிமையாய் வாழ்வை வாழ்ந்தொழிய எதிர்த்து நின்று நெஞ்சில் குத்துண்டு மாய்க்கப்படுவதே சிறப்பு என்று எண்ணினேன்.எதிர்த்து நின்றேன். எனக்கு இருவழி காட்டப்பட்டது. எதிர்த்து நின்று அடிவாங்கு அல்லது அடிக்கு முன்பே எதிரியை அடித்தொழி. என்னுடன் கிளம்பிய கூட்டம் இருவாரியாக பிரிந்து இரண்டு வழிகளையும் தேர்ந்தெடுத்தது. நான் இரண்டாவது வழியை பின்பற்றினேன்.

உறவுகள் கூட்டம் எனக்கு மிகுதி. அந்த மிகுதியான கூட்டத்திற்கு வாழ்விற்கு வழிவிதித்ததாய் கருதப்படுவது ஒரு கம்பேனி. ஆனால் அவர்கள், அது வாழ்வை அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியவில்லை. எனக்கான அடையாளத்தை என்னிடம் இருந்து பறித்து என்னை கழிவுகளில் புகுத்துகிறது என்று அவர்கள் உணரவில்லை. நான் அடங்க மறுத்தேன். எனக்கான பாதிப்பு என்பது எனது உணவும் உடையும் மட்டுமில்லை. எனது உரிமையும் தான்… எனக்கான அடையாளமும் தான் என்பதை என்னை சுற்றி இருக்கும் யாரும் உணரவில்லை.

பழமையான அடையாளம் எனது. உலகிற்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தது எனது முன்னோர். அங்கு உணவுக்கும் உடைக்கும் அவமானப்படுத்தப்பட்டு கிடத்தப்படும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு விதத்தில் எனது உறவே. அதை உணருகிறது என் மனம். எழுந்துவிட்டேன்.. இதோ எதிர்த்துவிட்டேன். எனது உயிர் அடுத்த நொடி மாய்க்கப்படலாம், அப்பொழுது என் ரத்தம் தெறிக்கப்படும் ஒவ்வொரு முகமும் போர்க்கொடி பிடித்து எழும்.

ஆனால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில். எனது வீரத்தால், எனது சாதூர்யத்தால் நான் உயிரோடு இருந்து எனது சுதந்திர தாய்க்கு முத்தமிடுவேனாயின் அந்த முத்தமிட்ட மறுநொடி மகிழ்வோடு என் உயிரை மாய்த்துக்கொள்வேன்.

என்னைச்சுற்றி எனது குடும்பத்தின் எதிர்காலம் நிறுத்தப்பட்டது. என் மனைவியின் தாலியும் என் குழந்தையின் அழுகையும் காட்டப்பட்டது. நான் மாய்க்கப்பெற்றால் ஒரு உன்னதம் பிறக்கும். அந்த உன்னதம் உன்னை காப்பாற்றும் கண்மணியே என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

என் தச்சில் பட்ட இடமெல்லாம் எச்சிலாய் காணப்பட்டது. மாறுப்பட்ட மாய்க்கும் வழிக்கண்டேன். கண் காணும் எதிரிகளை சுக்கு நூறாக்கி வீசி எறிந்தேன். துரத்தப்பட்டேன். பதுங்கு குழியிலும், பாலைவனத்திலும் ஓடி ஒளிந்துக்கொண்டேன். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று அவர்கள் அறியமாட்டார்கள். அவன் வெள்ளையன்.. நான் இந்தியன். மலைக்காடுகளிலும், புதர் மேடுகளிலும் புகுந்து எழுந்து ஓடினேன்.

அர்த்த ஜாமத்தில் ஓடும் நேரத்தில் பழகிய இடமொன்றில் கால் பதிக்கும் காலம் வந்தது. வளர்ந்துவிட்ட என் பிள்ளை ஈட்டி பழகிக்கொண்டிருந்தான். தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். துப்பாக்கியும், கத்தியையும் மாறி சீவி செரிங்கரித்துக்கொண்டிருந்தான். கண்ணே… மணியே…! அடுத்த போராளி கிளம்பிவிட்டான் என்னும் செருக்குக்கொண்டேன். எனை மிஞ்சும் சக்தி அவனிடத்தில் இருக்க கண்டேன்.

பிள்ளையை கண்ட மகிழ்வு தாளாமல் என்னவளை காணச்சென்றேன். ஆற்றங்கரையில் அழுக்கை போக்கி கொண்டிருந்தாள். என்னவளே என் இனியவளே என்று முகம் தழுவி போகையிலே கண்ணில் கண்ணீரை கொண்டாளே..! என்னடி என்றேன். வினவுதலின் பேராய் சொன்னாளடி காரணத்தை.

தெறிக்கும் போர் முரசாய் முற்றும் பலத்த உடம்பாய். வால் வீச்சும் வாய்ச்சொல்லும் செரிவாய் இந்தியன் என்னும் கணத்தோடும் தமிழன் என்னும் சினத்தோடும் வெகுண்டெழுந்த என் மகனை பற்றி சொன்னாள். ஏனடி கலக்கம் என்றேன்… உன் உயிர் மாயக்கப்படுவதை நினைத்தா என்றேன். இல்லை, கிடைக்கப்போகும் சுதந்திரத்தை நினைத்த ஆனந்த கண்ணீர் என்றாள். புறப்படும் முன்பு என்னுடன் தொற்றப்பெற்றான் என் இனிய செல்வந்தன்.

போர் புரிந்தோம்… இணைந்து உரிமைக்கான ஒரு போராட்டம் நிகழ்த்தினோம். சாதனை ஒன்று பிறக்கப்போகும் நம்பிக்கை உண்டானது. சாதிக்க போகிறேன் என்று மார்த்தட்டிக்கொண்டேன்.

சுற்றித்திரிந்தோம். என்னுடைய பொருள் எனக்கே கிடைக்காத போது அண்டையவனுக்கு ஏற்றுமதியும் சிறப்பு அதிகாரமும் கிடைக்க பட்டது. சினம் தலைக்கு ஏற்றப்பட்டது.

வெட்டி தெறித்திட நேரமேதுடா
சுற்றி திரியும் காற்று நாமடா..
தேகமெங்கும் கனலாய் எரியுது
காட்டிலும் மேட்டிலும் வேங்கை திரியுது…
அச்சம் ஏற்பதில்லை மனம் – எங்கும்
துச்சம் தெளித்திட திகழுது தினம்…!

காற்று சீறும் பாரதம்
எங்கும் சீக்கு மறந்த பாரதம்…
நஞ்சை வயல் கொண்ட நாடு
இங்கு நாடிவந்தவனை கொல்ல எழுந்திடு..

பிறந்த சிங்கம் நானென்று கூறு
எதிர் படையெங்கும் நாசக்கூறாய் மாற்று…

பாடிக்கொண்டே எதிர்த்தோம். ஒவ்வொரு முனையிலிருந்தும் சிறு சிறு கூருகலாய் ஈட்டிகள் எதிர்த்து வந்தது. வெட்டித்தெறித்திட வெள்ளையனை முன்னென்று கூட்டிக்கொண்டு செல்கையில், மண்ணில் வீழ்த்துப்பட்டேன். எனது உதிரம் பறக்கும் முன்னே துளிகளில் இருந்து சிறுவனாய் பெறுவனாய் பலர் புறப்பட… இந்திய தாயிற்கு என் இதழ் கொண்டு முத்தமளித்து மண்ணில் சாய்ந்தேன். சுதந்திரத்தின் கனவோடு கண்மூடிகொண்டேன்.

--
அவன் இறந்துவிட்டான். ஒரு வீருக்கொண்ட போராட்டத்தின் ஒருவரின் நிலையே இங்கு நான் சொல்லி இருக்கிறேன். அன்று ஒரு கம்பேனிக்கு கீழ் அடிமைகளாக வெகு வெளிச்சத்தில் காட்டப்பட்டிருந்த நாம். இன்று இருட்டுக்குள் பல வெளிநாட்டு கம்பேனிகளுக்கு அடிமைகளாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். உடையும், உணவும், ஆடம்பரமும் தான் வாழ்க்கை என்று அக்காலத்தில் வாழ்ந்திருந்தால் இன்று நான்கு சுவற்று கம்பேனிக்குள் அடிமைப்பட்டு கிடக்கும் நாம், நம் வீட்டிலும், தெருவிலுமே அடிமைப்பட்டு கிடந்திருப்போம். கிடைத்த சுதந்திரத்தை தன்மானத்தோடு எற்போம். என்றுமே இந்தியன் என்னும் திமிறோடு இருப்போம். உயிர் மாண்டாலும் மானம் இழக்கா மண்ணின் எதிர்காலம் நாம். நமக்கான பாடங்கள் தெருக்களில் விரிந்து கிடக்கிறது. அதை எடுத்துக்கொள்வதும் எட்டி மிதிப்பதும் நம் கைகளிலே. நமக்காக வாழ்வோம்…தன்மானத்தோடு இந்தியன் என்னும் கர்வத்தோடு இனி நாட்களையும் மனிதர்களையும் எதிர்க்கொள்வோம்.


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்….!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…