Posts

Showing posts from October, 2014

என் காதல் - தோழியாகிறாள்

Image
இனி அவளிடமிருந்து ஒதுங்கியே தான் இருக்கவேண்டும் என்று எண்ணிய எனக்கு விலகி இருக்கும் நொடிகள் கிடைக்கவில்லை. அதற்கு மறுநாளே எங்களுக்கு “Induction” எனப்படும் அலுவலகத்தின் ஒவ்வொரு துறையை பற்றிய அறிமுக நிகழ்வுகள் நடந்தது. ஒவ்வொரு துறையிலும் அத்துறை சார்ந்த ஒருவர் வந்து அவர்கள் செய்யும் வேலை, அதனால் எங்களுக்கு என்ன உபயோகம் என்பன பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்.
Logistics துறையில் இருந்து வந்தார் ஒருவர். எனக்கு உங்களை பற்றி ஒரு அறிமுகம் தேவைபடுகிறது என்று சொல்லிவிட்டு அனைவரையும் பெயர், படிப்பு மற்றும் பொழுதுபோக்கை பற்றிச்சொல்ல சொன்னார். பெரும்பாலும் பலர் பொழுதுபோக்காக டிவி., பார்ப்பதையே சொன்னர். என்னுடைய முறை வருகையில் என்னை நான் அறிமுகம் செய்துவிட்டு எழுதுவதை எனது பொழுதுபோக்காய் சொன்னேன்.
‘ஓ.. வெரி குட்… என்னலாம் எழுதுவீங்க’ என்று அவர் கேட்டார்.
‘கதை.. கவிதை.. கட்டூரை… இப்படிலாம் எழுதுவேன்..’
‘அப்போ.. எங்களுக்காக ஒரு கவிதை சொல்லலாமே…!’ என்றார். நான் தயங்கி நிற்க அவர் மற்றவர்களை பார்த்து சொல்ல சொல்லுங்கள் என்று சொன்னார். அனைவரும் சொல்ல கேட்கையில் நான் எனது வழமையான ‘குழந்தை தொழிலாளி’ கவிதையை யாரையு…

என் காதல் – முதல் அறிமுகம்

Image
நான் விரும்பாத.. நான் ஏற்க துணியாத இடத்தில் நான். இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகத்தின் பிடியில் இருப்பதாய் எனக்கு தோன்றும். நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன்.? இது என் கொள்கைக்கு மாற்றான ஒரு செயல் என்று என் மூளைகள் ஓடிமுடிக்கும் முன்னே என் குடும்பத்தின் விருப்பத்திற்காக அந்த நாலு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன் நான்.
அந்த கண்ணாடி கட்டிடத்தில் நுழையும் பொழுது எனது கொள்கைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு சாதாரண பெற்றோரின் பிள்ளையாக உள்ளே நுழைந்தேன். பொதுவாக பெண்களிடம் அதிகமா பழகாத எனக்கு அங்கு ஒரு பேர் அதிர்ச்சி. எனது 30 பேர் கொண்ட ஒட்டுமொத்த குழுவில் 6 பேர் மட்டுமே ஆண்கள்.
பிடிப்பே இல்லாமல் ஒரிரூ நாட்கள் ஓடியது. அவ்வப்போது என்னுள் இருக்கும் ஒரு வேட்கை மனிதன் வெளியெழுந்து இது உன் இடமல்ல என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பெண்களாக இருந்தாலும் இவர்களோடு நான் சேர்ந்து பழக வேண்டும், எனது இயல்பான கிண்டல் கேலி பேச்சுக்களோடு இருந்தால் தான் என்னுள் இருக்கும் கொந்தளிப்பை தாண்டி வெளிவர முடியும் என்று முடிவு செய்தேன். எல்லோரிடமும் அறிமுகம் ஆனேன்.
எனது அலுவலகத்தின் மேலதிகாரி ஒவ…

இழப்பும் காத்திருப்பும்.!!

Image
முட்டை கண்விழி ஓரம் எனை முழுதாய் தொலைத்துவிட்டேன்..
காதல் பூத்த நொடிகளின் காலம் கடந்துவிட்டேன்..
உன் வாசம் மட்டும் முகர்ந்து வாழ்க்கை வாழுகின்றேன்..
நினைவுகள் சுழற்றும் மழையாய் நனைந்து கொள்கிறேன்..
மழலை பேச்சும் தென்றல் வீச்சும் காதல் சொல்லி போகுது..
தனியாய் நடையும் விரிவாய் சிரிப்பும் என்னை எனக்கே அடையாளம் காட்டுது..
மகிழ மகிழ ஒரு மலர்கேணி நெகிழ நெகிழ மனமெல்லாம் நீ நொடிகள் மறவும் சாயல் என் உணர்வுக்குள்ளே ஒரு மீறல்..!
வார்த்தைகள் வலிகளை உணர்த்துவதில்லை..
பொதுவாய்… இன்றைய கனவு
நாளை நிஜமாகும்.. காதலில்.. நேற்றைய நினைவு இன்று கனவாகும்..!
நினைவோடு ஒரு வாழ்க்கை இழந்த நொடிகளுக்கான கொண்டாட்டம்.. வலிகள் மறையும் எதிர்காலம்.. என்று வரும் என்னும் எதிர்பார்ப்பு எல்லாம் கானலாகிய தோற்றம்..!
இழப்பேன் அல்லேன்.. என்றுமே இழப்பேன்.. இழந்தேயாம் இந்நொடிகளை..!
காத்தேன் அல்லேன்.. என்றுமே காத்தலறியேன்.. காத்தேயாம் அவளுக்காக..!
நேற்றைய நொடிகளோடு நாளை வருவாளென

மாசற்ற தீப ஒளித்திருநாளை அமைப்போம்..!

Image
சில வருடங்களுக்கு முன்பு, தீபாவளி என்றால் பத்து நாளுக்கு முன்னிருந்தே மகிழ்ச்சி கொள்ளாது. ஒவ்வொரு நாட்களும் கடினமாக நகரும். பட்டாசுகள், பலகாரங்கள் என்று வீடே அமர்களப்படுத்தும். முதல் நாள் இரவு எங்கள் வீட்டில் தூக்கம் மறந்து போய் பெண்கள் அனைவரும் பலகாரம் செய்துக்கொண்டிருக்க, குழந்தைகளாக இருக்கும் நாங்கள் அவர்களுடன் உதவி செய்துக்கொண்டும், திட்டுகளை வாங்கிக்கொண்டும் மகிழ்வோம்.
நான் எழுத ஆரம்பித்தது எனது பள்ளி பருவத்தில். என்னுடைய முதல் பதிப்பு குழந்தை தொழிலாளி பற்றி. இன்றும் என்னை யாரேனும் கவிதை சொல்ல சொன்னால் எனது முதல் கவிதையை மட்டுமே சொல்வேன். அதன் முதல் வரி,
‘படிக்கும் அறையில் இல்லை – குழந்தை பட்டாசு ஆலையில் இருக்கிறது…!’
இப்படியாக எழுதினேன். எழுதியதை தவிர்த்து அந்த ஆண்டே நானும் சிறப்பாக தீபாவளி கொண்டாடி முடித்தேன். ஆனால், நான் என்ன செய்கிறேன்? சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் சீரழியும் குழந்தையின் வாழ்க்கையை நானும் ஒரு பொது ஜனமாய் காசு கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோண ஆரம்பித்தது. நான் இனி வெடி வெடிப்பதில்லை என்று அடுத்த ஆண்டே முடிவு செய்தேன். நீ வெடிக்காமல் இருந்தால…

குழந்தைகளுக்கு என்ன அவசியம்?

Image
நான் அதிகமாக வெளி சொந்தங்கள் வீட்டிற்கோ நண்பர்கள் வீட்டிற்கோ செல்வதில்லை. அப்படியே தவறிப்போய் சென்றால் அங்கு என்ன பேசுவது என்பது எனக்கு தெரியாது. ஆனால் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நான் அங்கு இருக்கும் குழந்தைகளிடமே அதிகம் கலந்துரையாடுவேன். ஆரம்பத்தில் எப்பொதும் போல வழமையான பேச்சையே தொடங்குவேன். என்ன படிக்கிறாய், எப்படி படிக்கிறாய் என்பது போல. அந்த வழமையான கேள்விகளில் ஒன்று ‘பெரியவனாகியதும் என்னவாக போகிறாய்?’ என்பது.
இதற்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இதற்கு அதிக குழந்தைகள் சொல்லும் பதில் டாக்டர், இன்ஜினியர், டீச்சர், கலெக்டர் தான். மிச்ச சொச்சங்களும், சொச்ச மிச்சங்களும் ஏதேனும் நடிகர், கிரிக்கெட்டர் என்று பதில் சொல்வார்கள். 20 வருடத்திற்கு முன்பு நானும் எனது சகோதரிகளும் இதே பதில்களை தான் சொன்னோம். சொல்லும் வாய்கள் மட்டும் தான் மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் பதில் சுத்திலும் முற்றிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
இந்த காலத்து குழந்தைகளுக்கு அறிவே இல்லைங்கனு நான் சொன்னா என்னைய கழுகம்பத்துல கட்டி வச்சி நீங்க அடிக்கலாம். குழந்தைகளுக்கு நாம என்ன சொல்லுறோமோ அது தான் கனவா அ…

வாழ்க்கை அருமையா இருக்கும் சார்…!

Image
நான் எப்பொழுதும் உறவுகளால் சூழப்பட்டவன். என்னோடு பிறந்தவர்கள் இருவர். எங்கள் வீடு எப்பொழுதும் உறவுகளால் சூழப்பட்டே இருக்கும். எனக்கு உறவுகள் ஒன்றாய் இருப்பதன் கொடுமைகள் தெரியும். அதைவிட அதில் இருக்கும் சந்தோசங்கள் பற்றி அதிகமாக தெரி்யும். இன்பங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
உறவுகள் என்ன எதிர்பார்க்கிறது. உண்மையான உறவு உங்களை மட்டுமே எதிர்பார்க்கும். சொந்த ஊரின் மீது பற்றுக்கொண்ட உங்கள் வீட்டு முதியோரை மாதம் ஒரு முறை சென்று ஊரில் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? உங்களின் நேரத்தை. பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது தெரியுமா? உங்கள் நேரத்தை. வீட்டில் வேலையெல்லாம் முடித்துவிட்டு எல்லோருக்கும் என்ன புடிக்கும் என்பதை பார்த்து செய்துவிட்டு உங்கள் வருகைக்காக காத்திருக்கும் உங்கள் மனைவி என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? உங்கள் நேரத்தை.
எல்லோருக்கும் ஏதோ பிரியமான ஒரு வட்டம் இருக்கிறது. அந்த வட்டத்தில் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என ஏதோ ஒன்று அல்ல பல சொந்தங்கள் இருக்கிற…

விதிகளும்… மீறல்களும்..!!

Image
அந்த இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு வண்டியின் கைபிடியை பிடித்து ஒன்று, இரண்டு, மூன்று என்று கியர்களை மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து மின்னல் வேகத்தில் சட்டென பறக்கையில் என்ன ஒரு ஆனந்தம். திடீரென ட்ராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் இடமும் வலமும் முட்டி மோதி சந்து பொந்துகளில் புகுந்து திரும்புகையில் என்ன ஒரு லாவகம். அவனின் பெருமையை அவனே மெச்சிக்கொள்வான்.
இவ்வாறு ஓட்டும் போது ஹீரோ போன்று தான் தெரிகிறோம், சற்று தவறவிட்டால் போட்டோவை மாட்டி அதற்கு மாலை போட்டுவிடுவார்கள் என்பதை ஏனோ மறந்து தான் போகிறோம்.
இந்த நாட்டு மக்களோடு மக்களாய் பிறக்கும் அருகதை அற்றவன் நான். காலத்தின் கொடுமை என்னை இந்த மக்களோடு வாழவிட்டு அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டது. அப்படி என்ன செய்துவிட்டேன் நான்? என்னால் அவர்களுக்கு என்ன துன்பங்கள்? கொஞ்ச நஞ்சமல்ல… தினமும் சாலையில் வண்டியில் செல்லும்போது பலரை துன்பத்திற்கு ஆளாக்குகின்றேன். பிறரின் வசைச்சொல்லிற்கு உணவாய் நான் மாறுகிறேன்.
என்னுடைய திமிர் பற்றி சொல்கிறேன். நான் மிதமான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது இருபது அல்லது முப்பது அடியில் சிக்னலில் மஞ்சள் நிறம் எரிந்தா…

போட்டோக்களும்.. இணைய கூத்தாட்டமும்..!!

Image
எங்கு பார்த்தாலும் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மயம். என் அக்காவின் இரண்டு வயது மகள் சரளமாக ஃபோனின் உள்ளே வெளியே என புகுந்து விளையாடுகிறாள். கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிக்கு அழைப்பு விடுத்தால் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ பாடல் ஒலிக்கிறது.. ஒலி அடங்கும் முன்னே ஃபோனை கையில் எடுத்து இடதிலிருந்து வலது பக்கம் ஒரு தள்ளு தள்ளி ‘அல்லோ…’ என்கிறார்.
சிறுவர்களுக்கு முதல் முதியவர்களுக்கு வரை அழையா விருந்தாளியாக இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் போய் மடியில் உட்கார்ந்துக்கொண்டது. சரி.. இவை வைத்து நமக்கு என்ன யூஸ்.? சிறியவர்களுக்கு விளையாட்டு. பெரியவர்களுக்கு ஒன்லி பெருமை. இளையோருக்கு..? அங்கு தான் எல்லாமே..!! அவர்களுக்கு தேவையான அனைத்துமே கையடகத்தில். கேம்ஸ் விளையாடுவேன். அது போர் அடித்தால் பேஸ்புக், வாட்ஸ் ஆப்.. அது போர் அடித்தால் என்ன செய்வேன்? செல்ஃபி எடுப்பேன்.
செல்ஃபியா? அது என்னடா கருமம் என்று என் பாட்டி கேட்க சட்டென என் கையில் பாட்டியை சாய்த்துக்கொண்டு மறு கையை மேலே நீட்டி அதிர்ச்சியில் வாயை பிளந்த என் பாட்டியின் முகத்தை அப்படியே க்ளிக்கிட்டேன். அந்த போட்டோவை பார்க்கும் போதெல்லாம் என் பாட்டிக்கு அள…

ஏனய்யா இந்த களேபரம்?

Image
சாலையில் சென்றுகொண்டிருந்து பேருந்தின் வழியாக எட்டிப்பார்த்தேன். ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பந்தல், கூச்சலின் இடையிலே ஒரு போராட்டம். தமிழகத்தில் இருக்கும் அனைத்து துறையும் ஒருவாரியாக ஒன்றுகூடி போராட துவங்கிவிட்டனர்.
ஒரு தீர்ப்பை விமர்சிப்பது சட்டப்படி குற்றம் என்பதை கூட அறியாத வண்ணம் தீர்ப்பை மட்டுமல்லாது தீர்ப்பை வழங்கிய நீதிபதியை கூட கொச்சையான விதத்தில் போஸ்டர் அடித்து ஒட்டுவதெல்லாம் எங்கு கொண்டுபோய் விடும் என்பது அவர் அவர்களுக்கே வெளிச்சம்.
தீர்ப்பு வந்த அதே நாளில் தீர்ப்பின் அதிர்ச்சியின் காரணமாய் மாரடைப்பில் ஒருவர் பலி, தூக்கு மாட்டி இருவர் பலி என்னும் செய்திகள் வெளியில் வந்தன. பல இடங்களில் பேருந்துகள் எரிக்கப்பட்டன, பேருந்துகளின் கண்ணாடிகளும் கல் வீச்சிற்கு பலி ஆகின. இதெல்லாம் செய்து துடிதுடித்துக்கொண்டிருக்கும் ஆதரவாள பெருமக்கள் ஏனோ அதெல்லாம் நம் வரிப்பணம் தான் என்பதை உணரவில்லை.
நடக்கும்போதே கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெரியவர் சாலையை பிரிக்க வைக்கப்பட்டிருக்கும் பெரிய பலகையை எட்டி ஒரு உதைத்துவிட்டு வீர நடைப்போட்டு வந்தார். அன்று அலுவல் முடித்து வீட்டிற்கு…

அவள் என் காதலி..!!

Image
சாலை ஓரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். எனது அலைப்பேசி மணி ஒலித்தது. என் நண்பன். அழைப்பை ஏற்று என்னடா என்றேன். என்னோடு தனியாக பேச வேண்டும் என்று சொன்னான். என்ன முக்கியமான விசயம் என்று கேட்டேன். நேரில் சொல்கிறேன் என்றான். சரி என்று என் பாதையில் இருந்த ஒரு ஜூஸ் கடைக்கு வர சொன்னேன். சிறிது நேரத்தில் வந்தவன் படபடப்பாக உள்ளே வந்தான்.
‘என்னடா.. நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா?’ என்றான் இன்னும் படபடப்பு அடங்காமல்.
‘என்னடா கேள்விபட்ட..?’ என நமட்டு சிரிப்போடு கேட்டேன்.
‘நீயும்.. அந்த பொண்ணும்…’ என்று இழுத்தான்.
‘என்னடா.. ஆமாம் டா.. நானும் அவளும் காதலிக்கிறோம்..’
‘ஆனா.. எப்படி டா.?’
‘எப்படினா.. புடிச்சிருக்குனு சொன்னேன்… அவளும் புடிச்சிருக்குனு சொன்னா..’
‘ஏ… அது இல்லடா.. அது.. எப்படி…’ என்று தயங்கினான்.
‘நீ என்ன கேட்க வர்றனு எனக்கு புரியுதுடா…’ என்றேன். என்னை மேல் பேச விடாமல் தடுத்தவன் வண்டியில் போயிக்கொண்டே பேசலாம் என்றான். நானும் சிரித்துக்கொண்டே ஒத்துக்கொண்டேன். அவனின் வண்டியில் என்னையும் ஏற்றிக்கொண்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்தோம். மீண்டும் அவனே ஆரம்பித்தான்…
‘பெரிய இவன் மாதிரி சொல்லுவ? எனக்க…