Skip to main content

குழந்தைகளுக்கு என்ன அவசியம்?நான் அதிகமாக வெளி சொந்தங்கள் வீட்டிற்கோ நண்பர்கள் வீட்டிற்கோ செல்வதில்லை. அப்படியே தவறிப்போய் சென்றால் அங்கு என்ன பேசுவது என்பது எனக்கு தெரியாது. ஆனால் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நான் அங்கு இருக்கும் குழந்தைகளிடமே அதிகம் கலந்துரையாடுவேன். ஆரம்பத்தில் எப்பொதும் போல வழமையான பேச்சையே தொடங்குவேன். என்ன படிக்கிறாய், எப்படி படிக்கிறாய் என்பது போல. அந்த வழமையான கேள்விகளில் ஒன்று ‘பெரியவனாகியதும் என்னவாக போகிறாய்?’ என்பது.

இதற்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இதற்கு அதிக குழந்தைகள் சொல்லும் பதில் டாக்டர், இன்ஜினியர், டீச்சர், கலெக்டர் தான். மிச்ச சொச்சங்களும், சொச்ச மிச்சங்களும் ஏதேனும் நடிகர், கிரிக்கெட்டர் என்று பதில் சொல்வார்கள். 20 வருடத்திற்கு முன்பு நானும் எனது சகோதரிகளும் இதே பதில்களை தான் சொன்னோம். சொல்லும் வாய்கள் மட்டும் தான் மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் பதில் சுத்திலும் முற்றிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இந்த காலத்து குழந்தைகளுக்கு அறிவே இல்லைங்கனு நான் சொன்னா என்னைய கழுகம்பத்துல கட்டி வச்சி நீங்க அடிக்கலாம். குழந்தைகளுக்கு நாம என்ன சொல்லுறோமோ அது தான் கனவா அமையும். இந்தியாவை முக்கியமா தமிழகத்தை பொருத்தமட்டில் எல்லா குழந்தையின் ஆசையும் அவர் அவரின் பெற்றோரின் கனவுகளாய் மட்டுமே இருக்கிறது. காரணம்… நாம் சொல்லிக்கொடுப்பது அப்படி தான்.

ஒரு வீட்டை கட்ட இன்ஜினியர் வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பவர்கள் அந்த வீட்டை கட்ட என்ன என்ன தேவையாகிறது அதெல்லாம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது அதில் என்ன என்ன துறைகள் அடக்கம் அதிலெல்லாம் என்னென்ன சிறப்பான வேலைகள் இருக்கிறது என்பதை சொல்வதில்லை.

நம்மை பொருத்த வரையில் ஐந்து வயது குழந்தை 1330 குறளையும் ஒப்புவித்துவிட்டால் பெரிய சாதனை. எத்தனை ஏட்டுக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு திருக்குறளின் அர்த்தம் புரிந்து அதன்படி நடக்கிறது. எது வாழ்க்கைக்கு அவசியம்? சிவனின் திருமேனியை புகழ்ந்து பாடிய பாடலை அடிபிழவாமல் இவனும் பாட வேண்டியதன் அவசியம் என்ன? மனப்பாட செய்யுள் என்று ஒன்று இருக்கிறது. அவன் அதை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் வேண்டும். இரு வார்த்தைகட்கு இடையில் இருக்கும் இடைவெளி முதல் ஒவ்வொரு வரி ஆரம்பம் முடிவு வரை அவனுக்கு சிறப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது போதுமே… அது மட்டும் நமக்கும் போதுமே. உலகில் என்ன நடக்கிறது என்பதை அவன் எதற்கு தெரிந்துக்கொள்ள வேண்டும்?

இங்கு இருக்கும் எத்தனை பேர் காலையில் செய்திதாளை படிக்கும் போது உடன் உங்கள் குழந்தையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு செய்தியையும் விளக்குகிறீர்கள். உலகில் என்ன நடக்கிறது என்பதை எத்தனை பேர் சொல்லிக்கொடுக்கிறீர்கள்? அது போல ஒரு சூழல் வருகையில் அவன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை எங்கு சொல்லிக்கொடுக்கிறீர்கள்.?

நம் நாட்டில் இருக்கும் திறமைசாலிகளில் பாதி பேர் வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டுக்கொண்டும், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு சிஸ்டமை  தட்டிக்கொண்டும் இருக்கிறார்களே, இதெல்லாம் காலத்தால் நேர்ந்த கொடுமையா? இல்லை. நீங்கள் பிஞ்சில் விதைத்த விதை தான். அதற்கென்ன என் பையன் இன்ஜினியரா அருமையா இருக்கான் என்று சொல்லும் பெற்றோர்களே உங்கள் பையன் நல்லா இல்ல… நாசமா தான் போகுறான். ஒவ்வொரு சாப்ட்வேர் துறையில் வேலை செய்யும் பையனை பார்த்து பெற்றோர் பூரிக்க கூடாது, வேதனை பட வேண்டும். ஏனென்றால் அவன் உங்களை விட்டு அவனுக்கும் தெரியாமல் உங்களுக்கும் தெரியாமல் விலகிக்கொண்டிருக்கிறான்.

தொல்பொருள் துறை ஆராய்ச்சியில் ஆள் பற்றாக்குறையாக இருக்கிறதாம், கெமிக்கல் துறையில் ஆள் பற்றாக்குறையாக இருக்கிறதாம். சோசியல் வொர், டூரிஸம், ப்யூட்டிசியஸ், ஸ்பேஸ், நேனோ டெக்னாலஜி, பயோ ரோபோடிக்ஸ் இதெல்லாம் பற்றி உங்கள் கு.ழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்களா? இல்லையா? ஏன் இல்லை? என்னால் இன்ஜினியர் ஆக முடியவில்லை என் பிள்ளையாவது ஆக வேண்டும் என்று எண்ணமா உங்களுக்கு? பலதரப்பட்ட துறைகளை பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொன்னால் அவர்களுக்கு என்று தனி விருப்பம் உண்டாகிவிடும் என்னும் பயமா? தினமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் மட்டும் தான் வீட்டுபாடம் செய்ய வேண்டுமா? ஏன் நீங்கள் செய்யக்கூடாதா? உட்காருங்கள். உங்கள் குழந்தைக்காக உட்காருங்கள். ட்ரேட் பத்தி படியுங்கள், ஸ்பேஸ், பயோ இன்பர்மேடிக்ஸ், ஆர்கிடெக்டுரல் என எல்லாவற்றை பற்றி அடிப்படையை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள்  குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு துறையையும் விளக்கி சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு துறையை விளக்கும் போது அதில் இருக்கும் பிரமிப்பை உங்கள் பேச்சில் கொண்டுவாருங்கள். குழந்தைகளுக்கு அந்த பிரமிப்பே பிடிக்கும். இவ்வாறு நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்கள் குழந்தை ஒரு துறையை சிறு வயதிலே தேர்ந்தெடுத்து அதற்கு மேலும் முயற்சி செய்யும்.

எதிர்காலத்தில் வேலைக்கு போவதற்கு மட்டும் போதுமா? வேறு எதுவும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டாமா? கண்டிப்பாக வேண்டும். என்னவெல்லாம்?

சமீபத்தில் நம்மை அதிர வைத்த சம்பவம் ஒன்று தில்லியில் நடந்தது. அவன் தடுப்பை தாண்டி, சுவரில் ஏறி புலி இருக்கும் இடத்தில் விழுந்தான் என்பதை எல்லாம் விடுங்கள். அவன் விழுந்துவிட்டான் இப்பொழுது புலியின் முன்னால் அவன். அந்த சூழலை எப்படி அவன் சமாளித்திருக்க வேண்டும்? தெரியுமா? முதலில் உங்களுக்கு தெரியுமா? அவன் தப்பிப்பதற்கான சாத்திய கூறுகள் என்னென்ன என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் மட்டுமில்லை. இங்கிருக்கும் நம்மில் பலருக்கு எதிர்பாராத சந்தர்பத்தில் என்ன செய்வது என்பது தெரியாது.

மனப்பாட செய்யுள், வரலாற்று நிகழ்வுகளை தாண்டி குழந்தைகளுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விசயங்கள் இவை. திடீரென்ன வெள்ளத்தில் சிக்கக்கொண்டால் எப்படி தப்பிக்க வேண்டும்? தீப்புண் ஏற்பட்டால்? பல அடுக்க மாடி கட்டிடத்தில் இருக்கும் போது நிலநடுக்கம் வந்துவிட்டால்? தெரு நாய்கள் துரத்தினால்? எதிர்பாராத ஒன்று நடக்கையில் என்ன செய்யவேண்டும் என்று எத்தனை பேர் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுகின்றீர்? இதல்லவா தேவையான, மிகவும் அவசியமான விசயம். இதை விடுத்து ஏட்டுக்கல்வியை பொருள் மனதில் பதியாது மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதால் என்ன பயன்?

உங்கள் குழந்தைக்கு வங்கிக்கு சென்று படிவம் பூர்த்தி செய்ய தெரியுமா? ஒரு வங்கியின் அவசியம் என்ன என்பதை சொல்லிக்கொடுத்திருக்கீர்களா? EB மீட்டர் எப்படி ஓடுகிறது என்பது அவர்களுக்கு தெரியுமா? குளிர் சாதனப்பெட்டி எப்படி குளிராகவே இருக்கிறது என்பது தெரியுமா? வாஷிங் மிஷின் எப்படி செயல்படுகிறது என்பது தெரியுமா? தற்போது நிலை அரசியல் பற்றி தெரியுமா? ஓட்டு உரிமை, எந்தெந்த புகார்களை எந்தெந்த துறையில் தருவது என்பது தெரியுமா? இதெல்லாம் சொல்லிக்கொடுக்காமல் நீங்கள் என்ன நல்ல பெற்றோர் என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்கின்றீர்கள்?

சரி இதெல்லாம் பொது அறிவுகள்.  அவனின் தனிப்பட்ட அந்தரங்கள் பற்றி இங்கு எத்தனை பெற்றோர் வெளிப்படையாக பேசுகிறீர்கள். கையால் தூக்க முடிந்த வரையே அவர்கள் குழந்தை என நினைக்காதீர்கள். குறைந்தபட்சம் கல்லூரி முடியும் வரையாவது அவர்கள் குழந்தையாக மட்டுமே இருக்கிறார்கள். உடம்பில் ஏற்படும் பருவ நிலைமாற்றம் பற்றி பெண் குழந்தைகளுக்கு சொல்வதே குறைவு, இதில் கொடுமை ஆண்களுக்கு அதுக்கூட சொல்லாமல் இருப்பதே.

ஒரு பருவ நிலைமாற்றத்தின் பிறகு பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்களை பற்றி எத்தனை பேர் முன்னரே அவர்களுக்கு விளக்கி அவர்களை அந்த மனநிலையில் தயார் படுத்தி வைத்திருக்கின்றீர்கள்.? ஒரு பருவ மாற்றத்தின் போதே அவர்களின் எதிர்பாலரின் மீது இருவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியாதா? அந்த ஈர்ப்பை பற்றியும் அது எதனால் வருகிறது என்பதை பற்றியும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறீர்களா? முதல் முதலில் உடலில் ரோமங்கள் முளைப்பது எதனால் என்பதை உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறீர்களா? முதல் முதலில் விந்து வெளிப்படும் ஒரு ஆணுக்கு அதை குறித்து அறிவில்லையென்றால் முதலில் பய உணர்வே வரும். அதை தன் பெற்றோரிடம் சொல்லலாமா கூடாதா என்று கூட அவனுக்கு தெரியாது. அதை முன்னரே களைந்து வைக்க வேண்டியது யாரின் கடமை?

அவன் பெற்றோரிடம் பேசாமல் அவன் வயது ஒத்த சிறார்களிடம் இதை பற்றி கலைந்துரையாடுகையில் அவனுக்கு சரியான வழிநடப்பு கிடைக்காமல் போகிறது. இருபாலரும் எதிர்பாலரின் கவர்ச்சியில் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். தவறான படங்களை பார்த்து மோசமான எதிர்வினைகளுக்கு வழிவகுக்கின்றனர். மோசமான படங்களும், அதன் எண்ணங்களும் எதிர்பாலரின் மீது முரட்டுத்தனத்தையே புகுத்துமே தவிற உன்னத்ததை அல்ல. உங்கள் பிள்ளை எதிர்பாலரை ஒரு உறவுக்கொள்ளும் மிஷினாக பார்ப்பதற்கு நீங்களே உதவுகிறீர்கள். சரியான வழியில் அவர்களுக்கு தரவேண்டிய சரியான செக்ஸ் கல்வி பற்றி அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அதை கடந்து வர வேண்டிய அவசியத்தை பற்றி விளக்கி கூறுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகள். உங்களுக்கே அந்த சங்கூஜம் வேண்டாம். நீங்கள் தவிர்க்கும் ஒவ்வொன்றும் ஏதோ சிறியதோ பெரியதாய் ஆபத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது பார்க்கிறோமே ஆசிட் அடித்தான், நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொன்றனர் என்பது போன்ற செய்திகள். அவை அனைத்தையும் செய்தவர்கள், அவர்கள் பெற்றோர் வழிநடத்துதல் இல்லாத பைத்தியக்கார்ரகளாகவே இருப்பார்கள். நாளை உங்கள் பிள்ளை குற்றவாளியாக நிற்கவேண்டாம். வாழ்க்கைக்கு தேவையான கல்வியை அவர்களுக்கு கற்பியுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளை நம்புவது நல்லது. அதனால் அவன் உடம்பில் உண்டாகும் இயற்கை மாற்றங்கள் நடவாமல் போகாது.

அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. உங்கள் ஆசையை அவர்களுக்கு திணிக்காதீர்கள். உலகை சொல்லிக்கொடுங்கள்.. அவர்கள் உலகை அவர்களே அமைத்துக்கொள்வார்கள். வாழ்க்கை வாழ்வதற்கு தேவைகளை, பொது அரசியலை, தனிப்பட்ட அந்தரங்களை பற்றி அவர்களுக்கு விளக்கியே வளர்த்து வாருங்கள். கண்டிப்பாக உங்கள் குழந்தை அவர்களாகவே வளர்வார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டாகும்-அந்த தனித்துவம் உங்கள் பெயரை சொல்லும். அதுவே உங்கள் சாதனை..! வாழ்த்துக்கள். நல்லதொரு இளையோர் உருவாக்கி, நல்லதோர் பாரதம் படைப்போம்.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…