இழப்பும் காத்திருப்பும்.!!முட்டை கண்விழி ஓரம்
எனை முழுதாய் தொலைத்துவிட்டேன்..

காதல் பூத்த நொடிகளின்
காலம் கடந்துவிட்டேன்..

உன் வாசம் மட்டும் முகர்ந்து
வாழ்க்கை வாழுகின்றேன்..

நினைவுகள் சுழற்றும் மழையாய்
நனைந்து கொள்கிறேன்..

மழலை பேச்சும்
தென்றல் வீச்சும்
காதல் சொல்லி போகுது..

தனியாய் நடையும்
விரிவாய் சிரிப்பும்
என்னை எனக்கே அடையாளம் காட்டுது..

மகிழ மகிழ ஒரு மலர்கேணி
நெகிழ நெகிழ மனமெல்லாம் நீ
நொடிகள் மறவும் சாயல்
என் உணர்வுக்குள்ளே ஒரு மீறல்..!

வார்த்தைகள் வலிகளை உணர்த்துவதில்லை..

பொதுவாய்…
இன்றைய கனவு
நாளை நிஜமாகும்..
காதலில்..
நேற்றைய நினைவு
இன்று கனவாகும்..!

நினைவோடு ஒரு வாழ்க்கை
இழந்த நொடிகளுக்கான கொண்டாட்டம்..
வலிகள் மறையும் எதிர்காலம்..
என்று வரும் என்னும் எதிர்பார்ப்பு
எல்லாம் கானலாகிய தோற்றம்..!

இழப்பேன் அல்லேன்.. என்றுமே இழப்பேன்..
இழந்தேயாம் இந்நொடிகளை..!

காத்தேன் அல்லேன்.. என்றுமே காத்தலறியேன்..
காத்தேயாம் அவளுக்காக..!

நேற்றைய நொடிகளோடு
நாளை வருவாளென

இன்றைய பொழுதெல்லாம் கனவுகளாக..!!

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!