என் காதல் - தோழியாகிறாள்



இனி அவளிடமிருந்து ஒதுங்கியே தான் இருக்கவேண்டும் என்று எண்ணிய எனக்கு விலகி இருக்கும் நொடிகள் கிடைக்கவில்லை. அதற்கு மறுநாளே எங்களுக்கு “Induction” எனப்படும் அலுவலகத்தின் ஒவ்வொரு துறையை பற்றிய அறிமுக நிகழ்வுகள் நடந்தது. ஒவ்வொரு துறையிலும் அத்துறை சார்ந்த ஒருவர் வந்து அவர்கள் செய்யும் வேலை, அதனால் எங்களுக்கு என்ன உபயோகம் என்பன பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்.

Logistics துறையில் இருந்து வந்தார் ஒருவர். எனக்கு உங்களை பற்றி ஒரு அறிமுகம் தேவைபடுகிறது என்று சொல்லிவிட்டு அனைவரையும் பெயர், படிப்பு மற்றும் பொழுதுபோக்கை பற்றிச்சொல்ல சொன்னார். பெரும்பாலும் பலர் பொழுதுபோக்காக டிவி., பார்ப்பதையே சொன்னர். என்னுடைய முறை வருகையில் என்னை நான் அறிமுகம் செய்துவிட்டு எழுதுவதை எனது பொழுதுபோக்காய் சொன்னேன்.

‘ஓ.. வெரி குட்… என்னலாம் எழுதுவீங்க’ என்று அவர் கேட்டார்.

‘கதை.. கவிதை.. கட்டூரை… இப்படிலாம் எழுதுவேன்..’

‘அப்போ.. எங்களுக்காக ஒரு கவிதை சொல்லலாமே…!’ என்றார். நான் தயங்கி நிற்க அவர் மற்றவர்களை பார்த்து சொல்ல சொல்லுங்கள் என்று சொன்னார். அனைவரும் சொல்ல கேட்கையில் நான் எனது வழமையான ‘குழந்தை தொழிலாளி’ கவிதையை யாரையும் பார்க்காமல் கனீர் என்ற குரலில் சொல்லி முடித்தேன். சொல்லி முடித்த பிறகு மற்றவர்களை பார்த்தேன். அனைவரும் பலத்த கரகோஷங்கள் எழுப்பினர். என் பார்வை என்னை அறியாமல் அவளின் பக்கம் திரும்பியது. கைகளை வேகமாக தட்டிக்கொண்டு, புன்னகை சிரிதும் மறையாமல், பெருமித கண்களோடு அவள் என்னை பார்த்து நிற்காமல் கைத்தட்டிக்கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து சிரித்தேன்.

அனைவரிடமும் அவ்வளவு எளிதில் ஒட்டிக்கொள்ளாத நான் கேலிப்பேச்சுக்களோடு நிறுத்திக்கொள்வேன். எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டு நண்பர்களாக மாற்றிய பெருமை உமா சங்கருக்கு உண்டு. உமா சங்கர் – இளைஞர்களுக்கே உரித்தான துள்ளலான நபர். அவன் இருக்கும் இடத்தில் மகிழ்வுக்கோ, சிரிப்பிற்கோ பஞ்சம் இருக்காது. நல்ல நடன கலைஞன் கூட. அவனின் இயல்பான பேச்சுக்களால் எல்லோரும் எளிதில் ஒன்றிணைந்தோம். எங்களது ஈமெயில் ஐடி.,களை பகிர்ந்துக்கொண்டோம்.

எல்லோருடைய மெயில் ஐடி..,களும் நான் சேமித்துக்கொண்டிருந்தேன். அவளின் மெயில் ஐடி.,யை கேட்டேன். அவளும் அவளுக்கே உரித்தான மெல்லிய குரலில் சொன்னாள். அவள் “Sona” என்று தொடங்கும் அவளது மெயில் ஐடி.,யை சொல்கையில் என் காதில் “Soda” என்று கேட்டது. சோடாவா? என்று சிரித்தேன். அவள் என்னை தடுக்க முற்பட்டால். நான் அவளது பேச்சை காதில் வாங்காமல் ‘ஓ .. .சோடாவா..?’.. என்று சிரித்துக்கொண்டேன். நான் பேசியதை கேட்ட மற்றவர்களும் சிரித்தனர். ‘உன்னோட சோடா பொட்டி கண்ணாடியை போட்ட பிறகு இந்த மெயில் ஐடி., வச்சியா’ என்று இன்னும் கேட்டு சிரித்தேன். அனைவரும் சிரிக்க அவளும் தன் வாயிற்க்குள்ளே புன்னகைத்தாள்.

சிரிப்புகள் ஓய்ந்து நான் அவளது மெயில் ஐடி.,யை சரியாக சேமித்த பிறகு அவளை பார்த்தேன். அவள் என்னை திரும்பி திரும்பி பார்த்து புன்னகை புரிந்தாள். இது வழமையான புன்னகை இல்லை. இந்த கண்ணில் கோபம் இல்லை. நான் சற்று உன்னிப்பாக கவனித்தேன். மீண்டும் அவள் என்னை திரும்பி பார்த்தாள். அந்த உதட்டில் புன்னகை, கண்ணில் முறைப்பு. ஆனால் அடித்து சொல்வேன் அது கோபத்தால் ஆன முறைப்பு இல்லை.

ஒரு பெண்ணை கண்டவுடன் ஆண்களுக்கு நொடிகளிலும் அசைவுகளிலுமே வித்தியாசம் உணர முடியும் போலிருக்கிறது. அதே பெண், அதே சிரிப்பு, அதே கண்கள். ஆனால், அன்று கண்கள் பேசுகிறது. அதில் கோபம் இல்லை, ஏதோ ஒரு பாசம். நான் என் மனதில் தேக்கி வைத்துக்கொள்ள இன்றும் துடித்துக்கொண்டிருக்கும் நொடி அது. அவள் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அவளை கேலி செய்கையில் பின்னால் முகத்தை திருப்பி உதட்டில் புன்னகையோடு, கண்ணில் முறைப்போடு பார்க்கிற பார்வை- அய்யோ கடவுள் அவளின் கண்களில் ஈர்ப்பு சக்தியை அதிகமாக படைத்ததாள் தான் என்னவோ ஒரு கண்ணாடியை திரையாய் கொடுத்து என்னை காப்பாற்ற எத்தனித்திருக்கிறான்.
அப்பொழுது அது அழகாக தோன்றியது. இன்று நினைக்கையில் அது காதலாக தோன்றுகிறது. அன்று என் மனதில் காதல் இல்லை. இன்று என்னுள் காதலை தவிற வேறு இல்லை. இன்றும் அந்த நொடிகளை நினைக்கையில் ஆயிரம் வரி நில்லாமல் கவிதை பாட தோன்றுகிறது. பண்டைய கவிஞனாய் இருந்திருந்தாள் அகநானூறு அகநாலாயிரம் ஆக்கியிருப்பேன்.


என்னை முதலில் ஈர்த்த நொடி. எனை முழுதாய் மறந்த நொடி. ஒரு பெண்ணை நினைத்து பிதற்ற வைத்த முதல் நொடியாய் இன்றும் என் நினைவில் நீங்கா இடம் பிடித்த அந்த நாள். அவளிடம் என்னை நெருங்க வைத்த நாள். அன்றே என் சக தோழியாய் நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

(இன்னும் காதலிப்பேன்)


-இராமநாதன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி