Posts

Showing posts from November, 2014

முத்தப்போராட்டம் - கருமாந்திரம்...!

Image
சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த செய்தி ஒன்று என்னை அதிர்ச்சி அடைய செய்தது. சென்னை ஐஐடி., கல்லூரி மாணவர்கள் முத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்று வாசிக்கப்பட்ட செய்திக்கு தொலைக்காட்சியில் ஆணும் பெண்ணும் இறுக அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சி காட்டப்பட்டது.
அதிர்ந்துபோனேன். என்னடா இது பொது இடங்களில் இப்படி ஒரு கருமாந்திரம் என்று அதன் காரணத்தை தேடிப்பார்த்தேன். பல பேர் உண்ணும் உணவகத்தில் ஒரு காதல் ஜோடி முத்தமழை பொழிய அதை கண்ட ஒரு கட்சியின் ஆட்கள் அடித்து துவம்சம் செய்திருக்கின்றனர். அதனால் பொங்கி எழுந்த உன்னத சமூக ஆர்வலர்கள், முத்தம் கொடுப்பது அவர்களது உரிமை என்றும் அவர்களது உரிமைகளை கையாளுகையில் எவனெவனோ வந்து அடித்து மிதித்து செல்கிறான் என்றும் இந்த உன்னத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அது பேஸ்புக் மூலம் பரப்பப்பட்டு கொல்கத்தாவென சுற்றித்திரிந்து இப்போது சென்னையிலும் கால் வைத்துவிட்டது.
பொது இடங்களில் முத்தம் கொடுத்தது முதல் தவறு. அந்த தவறை செய்ததுமட்டுமல்லாது அது உரிமை என்று பிதற்றுவது வெறும் கேலிக்கூத்தாக தான் இருக்கிறது. உரிமை என்று சொல்லிவிட்டு கருமாந்திரமாக நடுரோட்ட…

என் காதல் - நெருக்கமும் குழப்பமும்...!

Image
வேகமாக ஓடிவிடாத நாட்கள் என்று எண்ணிய காலம் உடனே மாறியது. ஒவ்வொரு நொடிகளும் நட்புகளோடு ஒன்றாய் இணைய ஆரம்பித்தேன். என்னுடைய உலகத்தில் இருந்து அந்த கார்ப்ரேட் உலகத்தில் காலை மெல்ல உள்ளே நகர்த்த ஆரம்பித்தேன். அவளை அப்போதெல்லாம் சக ஒருத்தியாய் மட்டுமே எண்ணியிருந்தேன். அவளுக்கு என்று எந்த ஒரு சூழலிலும் முக்கியத்துவம் தரவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு எழுந்ததில்லை.
அவள் சில தினங்களில் சென்னையின் ஒரு விடுதியிலே தங்க ஆரம்பித்துவிட்டாள் என்று மற்றவர்களின் உரையாடல் மூலம் அறிந்தேன். அன்றைய தினம் முடிந்து வீட்டிற்கு செல்ல புறப்பட்டேன்.
நான் எனது வண்டிக்கு அருகில் சென்று ஹெல்மட் மாட்டிக்கொண்டிருக்கையில் அவள் மற்றொரு சக தோழியான ‘அனு’வுடன் வந்தாள். அனு- சகஜமாக பழக கூடிய தோழி. நான் கடைசி வரிசைக்கு மாற்றப்பெற்ற பிறகு எங்களது மீத பயிற்சி காலத்தில் நானும் அனுவும் அருகருகில்  அமர்ந்திருந்தோம் மற்றும் அனு எனது கல்லூரியிலிருந்தே வந்ததால் அவளிடம் ஆரம்பம் முதல் நல்ல சகஜமாக என்னால் பேச முடிந்தது.
நான் இருவரையும் பார்த்து புன்னகைத்தேன். பின்னர் பேசத்தொடங்கினேன்,
‘ஏய்… என்ன அனுக்கூட?’
‘ஆமாம்.. இங்க ஹாஸ்டல்க்கு மாறிட்…

நான் முற்றுப்புள்ளி இல்லை..

Image
வாழ்க்கை ஓட்டத்திலே நான் என் பாதையில் செல்வதாலோ என்னவோ என்னை யாருக்கும் அவ்வளவு எளிதில் பிடிக்காது. அப்படியே எவருக்கேனும் பிடித்துபோயிவிட்டால் அவர்கள் வெறுக்கும் சூழல் சீக்கிரமே வந்துவிடும். நான் எனக்காக ஒரு கோட்பாடு வைத்திருக்கிறேன் அது மற்றவரின் நிலைபாட்டிலிருந்து மாறுப்பட்டிருந்தால் அதற்கு நான் எதுவும் செய்துவிட முடியாது.
நான் கடந்து வந்த பாதைகள் முக்கால்வாசி நானாக கடந்துவந்தது. மாற்றிவிடப்பட்ட பாதைகளை எண்ணி நான் வருந்தியது தான் அதிகம். வாழ்க்கையின் அத்தியாவசியம் என்று என் கண்ணுக்குப்பட்ட அனைத்தும் மற்றவர்களுக்கு அநாவசியமாகப்பட்டது. மாறாய், நானே அவர்களது வழி சென்றால் அவர்கள் சொல்லிய பாதை அவர்களுக்கே அநாவசியமாக தெரிகிறது. வாழ்க்கை ஒரு விந்தை பாடம் கற்பிக்கும் என்பதற்கு எல்லோருக்கும் இது ஒரு சான்றாகவே திகழும்.
என்னுடைய வாழ்க்கையின் ஓட்டம் எனக்கு தெரியும். நான் கடந்து செல்லும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டும் எனக்கு நடக்க தெரியும். அதற்காக நான் கண்ணை மூடிக்கொண்டிருக்கையில் என் கையை பிடித்து அலைக்கழித்துவிடலாம் என்று கனவிலும் எண்ணிவிடாதீர்கள்.
எனக்கு எது முக்கியம் என்பது எனக்கு தெரியும். யார…