முத்தப்போராட்டம் - கருமாந்திரம்...!சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த செய்தி ஒன்று என்னை அதிர்ச்சி அடைய செய்தது. சென்னை ஐஐடி., கல்லூரி மாணவர்கள் முத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்று வாசிக்கப்பட்ட செய்திக்கு தொலைக்காட்சியில் ஆணும் பெண்ணும் இறுக அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சி காட்டப்பட்டது.

அதிர்ந்துபோனேன். என்னடா இது பொது இடங்களில் இப்படி ஒரு கருமாந்திரம் என்று அதன் காரணத்தை தேடிப்பார்த்தேன். பல பேர் உண்ணும் உணவகத்தில் ஒரு காதல் ஜோடி முத்தமழை பொழிய அதை கண்ட ஒரு கட்சியின் ஆட்கள் அடித்து துவம்சம் செய்திருக்கின்றனர். அதனால் பொங்கி எழுந்த உன்னத சமூக ஆர்வலர்கள், முத்தம் கொடுப்பது அவர்களது உரிமை என்றும் அவர்களது உரிமைகளை கையாளுகையில் எவனெவனோ வந்து அடித்து மிதித்து செல்கிறான் என்றும் இந்த உன்னத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அது பேஸ்புக் மூலம் பரப்பப்பட்டு கொல்கத்தாவென சுற்றித்திரிந்து இப்போது சென்னையிலும் கால் வைத்துவிட்டது.

பொது இடங்களில் முத்தம் கொடுத்தது முதல் தவறு. அந்த தவறை செய்ததுமட்டுமல்லாது அது உரிமை என்று பிதற்றுவது வெறும் கேலிக்கூத்தாக தான் இருக்கிறது. உரிமை என்று சொல்லிவிட்டு கருமாந்திரமாக நடுரோட்டில் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொள்வது நாராம்சம்.

ஊர் உலகத்துல போராட வேண்டியது ஆயிரம் இருக்கிறது. தினம் உண்ண உணவில்லாமல் பலர் வாடி வதைகின்றனர். இருக்க இடமில்லாமல் ரோட்டிலும், ப்ளாட்பாரங்களிலும் வாடுகின்றனர். படித்தவனுக்கு வேலையில்லை என்கிறான். வேலைகிடைத்தாலும் வாழும் அளவுக்கு சம்பளம் இல்லை என்கிறான். இதை எல்லாம் தட்டிக்கேட்க எவனும் முன் வரவில்லை, ஆனால் எதிர்பாலரை கட்டிக்கொண்டு நடுரோட்டில் காம கூத்தாட்டம் போட எத்தனை பேரடா.?

பொது இடங்களில் முத்தமிடுவது தவறில்லை என்று சட்டம் சொல்லிவிட்டதாம், போராட்டக்காரர்களின் கூற்று. அதே சட்டம் தான் பொதுமக்களுக்கு எரிச்சலை தரக்கூடிய செயலை செய்தல் குற்றம் என்கிறது. அதற்கு என்ன பதில்? அம்மா பிள்ளைக்கு கொடுக்கும் முத்தத்தையோ, அப்போ குழந்தைக்கு தரும் முத்தத்தையோ யாரும் இங்கு தடுக்கவில்லை. இங்கே தடுக்கப்படும் முத்தங்கள் அனைத்தும் காமத்தின் அடிக்கோல். அந்த முத்தங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால் அது நடுரோட்டில் விபச்சாரம் செய்வதற்கு சமம் அல்லவா?

பார்க்குகளிலும் பீச்சுகளிலும் மறைவுகளாக தென்பட்ட நாய் காதல்கள் இன்று ரோட்டில் இறங்கி பகிரங்கமாய் வெறிகளை தீர்த்துக்கொள்ள ஏதுவான சூழலுக்காக தான் போராடுகிறார்களா?

உன்னுடைய சுதந்திரம் உன்னுடைய மூக்கின் நுனி வரையே, அடுத்தவன் மூளையை சுரண்டி பார்ப்பது உன் சுதந்திரம் அல்ல. இன்று முத்தம் கொடுப்பது உரிமை என்பார்கள், நாளை நடுரோட்டில் உறவு வைத்துக்கொள்வதே உரிமை என்பார்கள்.

அந்த முத்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் எத்தனை ஆண்கள் அவர்களது தங்கைகளை ஒருவன் ரோட்டில் வைத்து இறுக்கி அணைத்து முத்தமிட அனுமதிப்பீர்கள்.? தாகத்தில் இருந்த நரிக்கு தெருவில் ஓடை விரிக்கப்பட்டிருக்கிறது போல. பாய்ந்து கிடக்கிறது.

பாசத்தை காட்ட இது மட்டும் தான் வழியென்று இல்லை. மேலைநாட்டு நாகரீகம் நமக்கு தேவையில்லை. நாம் வளர்ந்து வந்த சூழலும் அதன் பெருமைகளும் நமக்கே உரிய தனித்துவத்திலே இருக்கிறது. ஆணும் பெண்ணும் சகஜமாக பழக வேண்டும் என்று போராடுவது தவறில்லை. சகஜமென்றால் கட்டிபிடித்து முத்தமிடுவது தானா? என்ன கருமம் பிடித்த எண்ணமடா உங்களுக்கு? நண்பர்களை விடு. தெருவில் ஒரு காதல் ஜோடி பல பேர் முன்னிலையில் முத்தமிடுவது கூட அவர்களுது உரிமையா? அதற்கு வேறு பெயர் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

உலகமே போற்றும் ஒரு பண்பாட்டின் எதிர்கால நிலையை சுமக்க போகும் மாணவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வது எதிர்காலத்தை நினைத்த பயத்தை உருவாக்குகிறது. இது அங்கங்கே நடந்து நின்றுவிட்டால் நல்லது. மாறாய் தீயாய் பரவினால், அய்யோ அதைவிட கொடூரம் என்றும் இல்லை. இதற்கு அந்த கல்லூரி நிறுவனங்களும், போலீசாரும் உரிய நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம்.

KISS OF LOVE – என்னும் இந்த சீர்கேட்டை முளையிலே கிள்ளி எரியவேண்டும். என் நாடும் நாட்டு மக்களும் கண்முன்னே நாசக்கிறைகளாவதை எண்ணி வருந்துகிறேன். போராட ஆயிரம் இருக்கிறது. அதற்கெல்லாம் இறங்கி வந்து போராட நாதியில்லை. முத்தம் கொடுக்குறானாம் முத்தம். கருமாந்திரம்.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி