தமிழுக்கென்று கோவில் வேண்டும்...!தமிழுக்கென்று கோவில் வேண்டும் – அதில்
தலையனாய் வள்ளுவன் வேண்டும்…!
வள்ளுவம் பேசும் வாயிற்கெல்லாம் – வல்லமை
பொங்கி வழிதல் வேண்டும்…!
சன்னதி சுற்றி வருகையிலே – அவரவர்
சரித்திரம் சொல்லி நிற்க வேண்டும்…!
பாடல் பத்திரம் பொதிக்க வேண்டும் – அதை
பலமுறை படித்து நெகிழ வேண்டும்…!

சரித்திரம் பேசும் கோவிலாக – அது
உயர்ந்து வான்நோக்கி நிற்க வேண்டும்…!
அனுதினம் அர்ச்சனை செய்ய வேண்டும்
அதில் பசும்பால் அற்ற வள்ளுவனின் முப்பால் வேண்டும்…

இடப்புறத்தில் ஒரு சன்னதி வேண்டும் – அதில்
கம்பன் சிரித்து லயிக்கவேண்டும்…!
தொல்காப்பியனும், இளங்கோவடிகளும் ஔவையும் அகத்தியரும்
மாறாய் மாற்றுதுறாய்
பலர் சுற்றும் புறமும் சந்நிதியில் குடிக்கொள்ள
கால்கள் தரைபடற நடந்து செல்கையில்
அழகிய குடிலாகிய சந்நிதி வேண்டும்…
ரம்மியமும் ரௌத்திரமுமாய் அது மிளிர வேண்டும்..

ஒற்றை தலையனாய் அங்கு பாரதி வேண்டும்…
அவன் முன்னால் கைகூப்பி நின்று
‘பல வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ’ என
உரக்க சொல்லி பெருமிதத்தோடு சிரிக்க வேண்டும்..
அங்கு நான் சிரிக்க வேண்டும்…!!- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி