Skip to main content

மனித தேசியக்கொடி உருவாக்கம் நிகழ்வின் அலப்பறைகள்...நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனித தேசியக்கொடி உருவாக்கம் நிகழ்வில் பங்கேற்க சென்றிருந்தேன். ரோட்டரி சங்கம் நடந்திய இந்த உலக சாதனை நிகழ்வில் 50000 பேர் சேர்ந்து இந்திய தேசியக்கொடியை உருவாக்குவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. போய் சேர்ந்துவிடுவது என்று பல நாட்களுக்கு முன்னரே பெயரை பதிவு செய்துவைத்துவிட்டேன்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. 2 மணிக்கு கண் அயர்ந்தேன் மீண்டும் மூன்று மணிக்கு எழுந்துவிட்டேன். என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. நன்றாக குளித்து முடித்துவிட்டு ஒரு 4 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி நந்தனம் YMCA கல்லூரிக்கு சென்றேன். முன்னரே சிறப்பான முறையில் இடங்களை தயார்படுத்தியிருந்த காவல்துறையினரின் வழிகாட்டுதலின் பேரில் எனது வண்டியை பக்கத்தில் இருந்து அரசினர் கல்லூரியில் விட்டுவிட்டு நடந்துவந்தேன். அப்பொழுது என்னைப்போல் ஆர்வம் தாங்காத பலர் அங்கு நின்றுக்கொண்டிருந்தனர். அந்த அகல சாலையை பாதியாக தடுப்பு போட்டு அத்தனை பேர் நடந்து போவதற்க்கும் வாகனங்கள் இடையூறு இன்றி பயணிப்பதற்கும் காவல் துறை தனது சிறப்பான வேலையை செய்து வந்தது.

நான் சிறிது நேரம் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு உள்ளே சென்றேன். எல்லோரும் வரிசையில் நின்றுக்கொண்டிருக்க சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது. முதலில் பெண்கள் எல்லோரும் சென்ற பிறகு ஆண்களுக்கான வழி திறக்கப்பட்டது. அருமையான முன்னேற்பாடு. உள்ளே சென்றதும் இன்னும் ஒரு வரிசை. முதல் வரிசை பாதுகாப்பு காரணமாக சோதிப்பதற்கு, இந்த இரண்டாவது வந்தவர்களுக்காக பனியன் சட்டை, ஒரு பிஸ்கட் பாக்கேட், ஒரு வாட்டர் பாக்கேட் கொடுக்கப்பட்டது. எல்லோர் முகத்திலும் பொலிவு.

காலை பசியில் இருந்தவர்கள் பிஸ்கட்டை பிரித்து தின்றுவிட்டு தண்ணீரை குடித்தனர். நானும் குடித்துவிட்டு காலி கவர்களை எனது பாக்கெட்டில் திணித்துக்கொண்டேன். நான் முன்னமே சொன்னது போல இதுவரை குப்பைகளை பொது இடங்களில் போடாமல் இருந்து வருகிறேன். ஆனால் சிறிது நேரத்தில் அந்த இடமே குப்பை கிடங்குபோல் மாறியது. பலர் கூட கூட கீழே குப்பைகளும் அதிகமானது. மைக்கில் நிகழ்வை நடத்துபவர் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. இந்திய கொடிக்காக நிற்பதில் தான் தேசிய உணர்வு இருக்கிறது. நான் இந்திய மண்ணை அசுத்தம் தான் செய்வேன் என்று நிற்கிறது இந்த சமூகம்.

அளவுக்கு மிஞ்சிய கூட்டம். யார் பதிவு செய்திருந்தார்கள் என்று பார்க்க நேரமில்லாமல் அனைவரையும் உள்ளே விட்டனர். பதிவு செய்திருந்த பலருக்கு இடப்பற்றாக்குறையால் அனுமதி இல்லாமல் போக, பதிவு செய்யாத பலர் உள்ளே நின்றுக்கொண்டிருந்தனர். அத்தனை கூட்டத்தையும் ஒன்று சேர்க்க நேரமானதால் அனைவருக்கும் வாட்டர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டது. அதிகமாக கல்லூரி மாணவர்கள் இருந்த கூட்டத்தில், குடித்து முடிக்கப்பட்ட பாட்டில்கள் முன்னால் நின்றிருந்த மாணவிகள் மேல் வீசப்பட்டது. ஏதோ ஒருவன் செய்ததை கண்ட மற்ற மாணவர்கள் மாணவிகள் மீது காலி பாட்டில்களை வீசினர். தேசியக்கொடிக்காக நிற்கையில் என்ன ஒரு அருமையான பெண்ணியத்தை மதிக்கும் செயல்?

கூட்டத்தை நிலையில் வைத்திருக்க ஒரு அளவுக்கு சரியாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுக்கப்பட்டது. அந்த நம்பர் இருக்கும் இடத்தில் தான் அவர் நிற்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அங்கு வந்த இள வயது நபர்கள் பலர் அவர்கள் நண்பர்களோடு தனக்கு ஒதுக்கப்படாத இடத்தில் நின்றுக்கொண்டு நிகழ்வுக்கு பல இடையூறுகளை தந்தனர். ஒற்றுமை உங்களுக்குள் இல்லை. இந்தியர் அனைவருக்குள்ளும் வேண்டும் மூடர்களா.

எல்லோரும் தனக்கு கொடுத்த வண்ண அட்டையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தலைக்கு மேலே தூக்கி பிடித்திருக்க வேண்டும். அது வரை யாரும் அங்கும் இங்கும் ஓட கூடாது, இடையூறு செய்யக்கூடாது அப்போது தான் அது உலக சாதனையாக அங்கீகரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நேரம் தொடங்கியது. எனது முன்னால் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அட்டையை முகத்துக்கு நேராய் வைத்துக்கொண்டு தலைக்கு மேலே செல்போனை காட்டி வீடியோ பதிவு செய்துக்கொண்டிருந்தார். மேலும் பலர் அவ்வாறு செய்துக்கொண்டிருந்தனர். முன்னால் வரிசையில் நின்ற மாணவிகள் சிலர் ஒரே அட்டையில் இருவராக நின்றுக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இடைவெளி விட்டிருந்தனர். மற்ற நேரங்களில் போட்டோக்களை எடுத்து நினைவுக்காக வைத்துக்கொள்ளலாம்.. ஆனால் ஒரு உலக சாதனை படைக்கும் நேரத்தில் எதுக்கையா இப்படி அலப்பறைகள்.?

சாதனை படைத்து முடித்தாகிவிட்டது. இப்பொழுது வெளியில் பார்வையாளராய் கூடியிருந்த மக்களை கிளப்பிவிட்டு உள்ளே இருந்தவர்களை வெளியில் விடுவார்கள் என்று மைக்கில் சொல்லப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் வைப்பதற்காக. ஆனால் அந்த சிறிது நேரம் பொறுக்க முடியாத நம் மக்கள் வேலி கம்பிகளை முறித்துக்கொண்டும், கதவுகளை உடைத்துக்கொண்டும் வீர சாகசம் புரிந்தனர். அங்கு அவர்களின் நாட்டுப்பற்றை நினைத்து மிகவும் மெச்சினேன்.
கையில் கொடுக்கப்பட்டிருந்த வண்ண அட்டைகளை கொடுத்துவிட்டு செல்லுங்கள். அதை வைத்து தான் கணக்கு சொல்ல வேண்டும். அதை கீழே வைக்க வேண்டாம், அது உங்கள் தேசிய கொடியில் ஒரு பகுதி என்று மைக்கில் சொன்னர். கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் நகர, சிலர் மறைத்து அந்த அட்டைகளை வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். அதை கூட ஏதோ மன்னித்துவிடலாம். சிலர் குப்பைகளாய் தூக்கி வீசிவிட்டு காலில் மிதியுண்டு கிடக்க செய்தனர். ஏன்டா.. உனக்கு தான் சொந்த புத்தி இல்ல. சொல்லுறான் ல.. அது நம்ம நாட்டு கொடியின் ஒரு பகுதினு. அப்ப கூட உன் மூளை ஏன் கண்டத திங்க போகுது? நீ சோறு தானே திங்கிற?

வெளியில் வந்ததும் காலையில் அழகாக அமைக்கப்பட்டிருந்த ரோட்டை இரண்டாக பிரிக்கும் தடுப்புகள் எல்லாம் தடம் மாறி திசை மாறி கீழ கிடந்தது. கயிறுகள் அறுக்கப்பட்டிருந்தது. எனக்கு அருகில் நடந்து வரும் பையன் ‘என்னாடா தடுப்பெல்லாம்’ என்று சொல்லிவிட்டு எல்லாத்தையும் அறுத்துவிட்டு நடுரோட்டில் நடக்க, அவனை பார்த்து பலர் அங்கே நடக்க வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் திகைக்க அந்த ரோடே வாகன காடானது.

அன்று அங்கு என்னோடு வந்திருந்து நான் மேல் சொல்லிய, இன்னும் சொல்லாமல் விட்டுப்போன அலப்பறைகளை செய்த கனவான்களே…! உங்கள் நாட்டுப்பற்று தேசியக்கொடிக்காக நிற்பதில் இல்லை. உங்கள் செயல்களும் சிந்தைகளும் நாட்டை ஒரு சிறு சிறு விசயத்தில் கூட வலிமைபடுத்துவதாய் இருக்க வேண்டும். கொடியை கீழே போட்டு அவமதிப்பதும், சாலை தடுப்புகளை தாண்டி இம்சிப்பதும், பொது இடங்களில் குப்பை இடுவதும், பெண்களை இழிவிப்பதும், பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு தருவதும்- இதுப்போல செய்யும் நீங்கள் எல்லாம் அந்த கொடியின் மனித உருவாக்கத்தில் பங்கெடுத்தீர்கள், உங்களோடு நானும் இருந்தேன் என்று நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது.

நாட்டிற்காக – அந்த கொடி உருவாக்கத்தில் பங்கெடுக்கும் உங்கள் நாட்டு பற்றை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் மட்டுமே இல்லை உண்மையான நாட்டு பற்று. இதை உணராத தற்குறி ஜடங்கள் தான் நான் சொல்லிய கேவலமான செயல்களில் ஈடுபட்டோர்.

வாழ்க பாரதம்.. வாழ்க அதன் செழிப்பு..!


-    -தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…