Skip to main content

Posts

Showing posts from January, 2015

கண் அழியும் வரம் கேட்கிறேன்...

உண்ணும் உணவு மறக்குதடி கண்ணம்மா ஊமை உணர்வு உடம்பெல்லாம் தெரிக்குதடி..
கெட்டதை காணா கண்கள் தினம் கழிவுகளோடு உறவுக்கொள்ளுதடி.. கண்ணம்மா... கெட்டுவிட்ட கண்கள் தானடி..!
சோற்றுக்கு திண்டாடும் உலகம் தானடி தினம் - சேற்றிலே செரிமானம் காணுதடி...
விந்தை உலகம் தானடி-கண்ணம்மா எனை சுற்றி விந்தைகள் சூழுதடி...!
பாடபுத்தகத்தில் காகத்தின் பகிர்மையை சொல்லும் உலகம்.. வீட்டுக்குள்ளே 'அவன் புடுங்கிப்பான்-நீ கொடுக்காம சாப்பிடுடு' என்று கொடிய நஞ்சினை விதைக்குதடி...
ஆசையிட்ட உலகம் வேறடி கண்ணம்மா... நாம் பார்க்கும் உலகம் கொடியதடி...!
நித்திரை மறந்து  தினம் சொப்பனம் துறந்து எங்கும் மனிதம் வற்றி  தினம் மழிந்தொழிகிறதே கண்ணம்மா... உலகம் ஒழிந்து போகிறதே...!!
பஞ்சம் காண்கிறேன் கண்ணம்மா... உணவில் மட்டுமின்றி  இங்கு உடையிலும் பஞ்சம் காண்கிறனே.. ஆணின் கால் சட்டையில் ஆயிரம் பொத்தல்கள், கண்ணின் கோளாறா தெரியவில்லை  பல பெண்கள் கால் மறைவை மறந்துவிட்டதாகவே தெரிகிறதே கண்ணம்மா-இந்த உலகம் என்னவாகிறதோ?
வேட்கையில் இருக்கும் உலகம் காணதுடிக்குதடி வேற்றுமையற்ற உலகம் வேண்டுமடி.. இன்று இறங்கியவன் நாளை உயர்கிறான் நேற்று உயர்ந…

ஒரு முடிவின் அழுகை...!

அந்த பேருந்தில் மிகுந்த நெரிசல் இல்லை. இருந்த அனைவருக்குஉட்கார இடம் கிடைத்திருந்தது. அவன் அந்த பேருந்தின் பின் வழியில் ஏறினான். பேருந்து முழுதும் ஒரு நோட்டமிட்டான். முன்னால் இருந்த ஒரு பெண்ணின் அருகில் மட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. மற்ற அனைத்தும் நிரம்பிவிட்டன. அவன் அந்த இடத்திலே அமர்ந்திடலாம் என்று முன்னால் சென்றான். நவநாகரீகம் புகுந்துவிட்ட சென்னை மாநகரில் முன்பின் அறியா ஆண் பெண் அருகருகில் அமர்வதெல்லாம் சர்வ சாதாரணமாகிட்ட விடயமாதலால் அவனுக்கு அது ஒன்றும் சங்கூச்சத்தை ஏற்படுத்தவில்லை. முன்னால் சென்றவன் அமர்வதற்கு முன்னர் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தான். சட்டென அவன் முகம் பதற்றமடைந்து ஏதோ நடுக்கத்தை வெளிபடுத்தியது. அங்கு அமராமல் நகர அவன் எத்தனிக்கையில் அந்த பெண் அவனை பார்த்தாள். அவள் முகமும் சட்டென உணர்வுச்சொல்லா வகையில் மாற்றம் கொண்டது. அவள் பார்த்துவிட்டதை உணர்ந்தவன் அந்த பேருந்தின் இடமும் புறமும் என எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முன்னும் பின்னும் கால்களை நகர்த்திட்டான். அவனது தயக்கத்தை உணர்ந்த அவள்,
‘பரவாயில்ல.. உட்காருங்க..’ என்றாள்.
‘பரவால..’ என்று ஒற்றை கட்டை சொல்லாய் …

என் காதல் - எனது கீழ்தரமான செயல்

எனக்கு படிக்க பிடிக்கவில்லை. நான் எனக்கு ஒத்துவராத இடத்தில் இருக்கிறேன் என்று என் மனம் அவ்வபோது சொல்லிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் எனது நண்பர்களின் கேலி கிண்டல் பேச்சுக்களால் என் மனம் ஒழுங்காகும்.
என்னை நானே நாளடைவில் அதிகமாக மற்றவர்களிடம் இணைத்துக்கொண்டேன். அன்று எங்கள் குழுவில் இருக்கும் சகானா என்னும் பெண்ணிற்கு பிறந்தநாள். எங்கள் குழுவில் இருக்கும் இருவருக்கு நாங்கள் இணையும் பொழுதே திருமணம் நடந்திருந்தது. அதில் ஒருவர் சகானா. வழக்கமாக நண்பர்களை இணைக்கமாக வைத்திருக்கும் வழிகளில் நேர்த்தியான அனு, சகானாவின் பிறந்தநாளை கொண்டாடலாம் கேக் வெட்டி, பரிசு பொருள் கொடுத்து என்று சொல்ல-நாங்களும் சம்மதித்தோம்.
எங்கள் ஒட்டுமொத்த குழுவும் ஒன்றாக இருந்தாலும் முன் வரிசையில் இருப்பவர்க்கும் பின் வரிசையில் இருப்பவர்க்கும் ஒரு விலகல் இருந்து வந்தது. சகானா பிறந்த நாள் கொண்டாட்டத்தை பின்வரிசையில் இருப்பவர்கள் முடிவு செய்ததால் முன்னால் இருந்தவர்களிடம் பணம் பெறவில்லை. என் கண்கள் அப்பொழுதெல்லாம் என்னவளை தேடாது. அவள் இருக்கிறாளா என்று கூட அன்று நான் யோசிக்கவில்லை. கொண்டாட்டம் எல்லாம் முடிந்தது. எங்கள் அறை…