கண் அழியும் வரம் கேட்கிறேன்...உண்ணும் உணவு மறக்குதடி கண்ணம்மா
ஊமை உணர்வு உடம்பெல்லாம் தெரிக்குதடி..

கெட்டதை காணா கண்கள்
தினம் கழிவுகளோடு உறவுக்கொள்ளுதடி..
கண்ணம்மா... கெட்டுவிட்ட கண்கள் தானடி..!

சோற்றுக்கு திண்டாடும் உலகம் தானடி
தினம் - சேற்றிலே செரிமானம் காணுதடி...

விந்தை உலகம் தானடி-கண்ணம்மா
எனை சுற்றி விந்தைகள் சூழுதடி...!

பாடபுத்தகத்தில்
காகத்தின் பகிர்மையை சொல்லும் உலகம்..
வீட்டுக்குள்ளே 'அவன் புடுங்கிப்பான்-நீ கொடுக்காம சாப்பிடுடு'
என்று கொடிய நஞ்சினை விதைக்குதடி...

ஆசையிட்ட உலகம் வேறடி கண்ணம்மா...
நாம் பார்க்கும் உலகம் கொடியதடி...!

நித்திரை மறந்து 
தினம் சொப்பனம் துறந்து
எங்கும் மனிதம் வற்றி 
தினம் மழிந்தொழிகிறதே கண்ணம்மா...
உலகம் ஒழிந்து போகிறதே...!!

பஞ்சம் காண்கிறேன் கண்ணம்மா...
உணவில் மட்டுமின்றி 
இங்கு உடையிலும் பஞ்சம் காண்கிறனே..
ஆணின் கால் சட்டையில் ஆயிரம் பொத்தல்கள்,
கண்ணின் கோளாறா தெரியவில்லை 
பல பெண்கள் கால் மறைவை மறந்துவிட்டதாகவே தெரிகிறதே
கண்ணம்மா-இந்த உலகம் என்னவாகிறதோ?

வேட்கையில் இருக்கும் உலகம் காணதுடிக்குதடி
வேற்றுமையற்ற உலகம் வேண்டுமடி..
இன்று இறங்கியவன் நாளை உயர்கிறான்
நேற்று உயர்ந்தவன் இன்று இறங்குகிறான்
சமமான உலகம் காணமுடியாதாடி?
மனம் ஏங்கி தவிக்குதடி...

சுட்டெறிக்கும் கனலாய் 
தேகம் சுரம் கொள்ளுதடி...
பற்றி எரியும் மனதில்
தினம் ஆயிரம் உலகம் உரம் போடுதடி...
கண்ணம்மா-உரம் போடுதடி...!
 
கண்களில் கசிவுக்கொண்டு
தினம் கண் இமைத்துக்கொண்டிருக்கிறேன்
கெட்டுவிட்ட கண்களாகியது...
இமை கொட்ட மறக்கும் கண்களாகிறது..!!!
கண்ணம்மா-என் கண்கள் முழுதாய் அழியும் வரம் கேட்கிறேன்...
அழியும் வரம் கேட்கிறேன்..

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..