Posts

Showing posts from February, 2015

செல்வங்கள் இல்லா – செங்கற் வீடு..

Image
வீட்டில் கூடியிருந்த உறவுகள் எல்லாம் கிளம்பி சென்றுவிட்ட நேரம். கடைசியாக இருந்த உறவினரும் கிளம்பும்பொழுது அப்பா, கார் அந்த தெருவின் முற்றத்தில் திரும்பும் வரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். ஏனோ கார் மறைந்து சென்ற பிறகும் சில நொடிகள் கார் போன திசையையே அவர் பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென சிரித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார். வீட்டின் வாசலில் ஒரு குழந்தை வாசல் படியை பிடித்துக்கொண்டு தொங்க, இன்னொரு குழந்தை உள்ளிருந்து இழுத்துக்கொண்டிருந்தது. சட்டென அவர் பதறி அந்த குழந்தைக்கு அருகில் செல்கையில் அது வெறும் கானலென்று உணர்ந்து சிரித்துக்கொண்டார். திரும்பி வீதியில் பார்த்தார்.
ஒரு மிதி ரிக்சா வண்டி காரர் குழந்தைகளை வண்டியில் வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தார். சற்றுமுன் வாசலை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த குழந்தை பள்ளி சீருடையில் ஓடி சென்று ஏறிக்கொண்டது. அந்த குழந்தை இவரை பார்த்து கைகளை ஆட்டி டாட்டா சொல்கிறது. இவரும் பதிலுக்கு டாட்டா காட்டுகையில் குழந்தையும் வண்டியும் இருந்த இடத்தில் இல்லாததை உணர்ந்தார். மீண்டும் சிரித்துக்கொண்டார்.
வீட்டினுள் நுழைகிறார். நேற்று தான் கட்டி முடித்த வ…

தமிழறியும் வீரப்பெண்...

Image
உற்றான் உலகறியும் உன்னத நோக்கினான் மற்றான் உடன் செரிந்து போர்க்களம் அடைந்திலான்.. அவள் மற்றறியும் மரத்திலும் உற்ற மாண்பிலும் தக்க சிறுவகையோடு செழிமைக் கொழிலொழுகினாள்.. அவன் வரவை வழிநோக்கியாள்..
யாஞ்செய சொந்தமாகியோர் ஏற்றம் அறிவார்க்கு அவள் காத்தறிகிறாள்.. காற்றாய் அவன் அறிகிளாள்..
ஏர் பூண்ட மாடொன்று மாசி மழிந்தொழி தேர் பூண்ட சாலையெங்கும் வெறும் மணல் தூசி.. காத்திருக்கும் நொடிகடக்கும் பறையறிக்கும் அறிவிப்பும் உற்றான் உயிர்நீத்தான் என்றறிவிப்பு..
எஞ்செயனென்று புறமுதுகிட்டானென கொழுந்த தீயாகிய ஊரார்க்கிளை வஞ்செயலறிந்து வசைபாடியாள்..
உற்ற துணையிழந்தாள் மற்ற துணையறியாள் ஒற்றை பிஞ்சு கைபிடித்து உயிர் பிடிக்கிறாள்… புறமுதுகின் அறம் அறிய…
போரின் வெற்றி முரசு வீதியெங்கும் கொடறிந்து ஊர் தென்கொடியில் வீற்றிருந்தாள்.. பவனியறிந்த படையெங்கும் தேடல் வேட்கையில் அவனையறிந்தாளை அவள் அருகினாள்..
புறமுதுகிட்டானா தன் கணாளனென கண்ணீரின் ஏக்கமறிக மாற்றான் சொல்கையில்- அவன் புறமறியான் தக்க மதிப்பறிவான்.. வெற்றி வாகையில் நால் புறமும் வீர செயல் புரிகையறிவான்.. முதலண்டை நாளில் பலர் மூர்ச்சையாக்கினான் பலநாளின் போரில் ஒற்றை கையிழந்திட்டான்.. …

களவுண்ட மனசுங்க..

Image
அந்தி மாலை வேலையிலே...
சின்ன ஓலையிலே செங்கார கொண்டையிலே
பூவ சொருகிட்டு பொத்தி பாத்தபுள்ள
மாமன மடிச்சுகிட்டு மச்சுல சேத்துகிட்டு
கண்ணுல காந்தமா எனை கரைக்குதே என்னது...?

சேர்ந்து வாராப்புல..
கையை இருக்கையில
ஒத்த சுவரு சாஞ்சு மறச்சு
ஓரக்கண்ணு சுவரோட என்னைய ஓரமாபாக்குதுங்க..

நாலடி நான் நெருங்கையில
எட்டடி வெலகி ஓடுதுங்க..
சின்னமயில் செங்குருதி கொஞ்சம்
செவந்துண்டு நிக்குதுங்க..!

சிமெண்ட் தரை ஓரத்துல
கொஞ்சம் தரை சிதறி கெடக்குதுங்க..
என் நெஞ்சார பெண்ணொருத்தி
அதை காலால செதைக்குறாங்க...!

தட்டி தவிக்கையில
நெஞ்சு தெசகெட்டு நிக்குதுங்க
கொஞ்சும் பார்வையில என
கொன்னு கரைகிறாங்க !!!

வண்ண திரை ஓரத்துல
வச்ச சோறு சூடு ஆறலங்க
காத்துல மணம் வந்து
என் மூக்கோரம் மொனகுதுங்க ..!

என்ன சுகம் கண்டுபுட்டன்
மனசுக்குள்ள கேள்விங்க
இவள மீறி என்ன வேணும்
நெஞ்சம் முழுக்க அவ தானுங்க ..!

- தம்பி கூர்மதியன்

இழந்து தவிக்கிறேன்...

Image
அன்றுஇரவில்கொஞ்சம்அதிகமானவேலைதான். மறுநாள்என்றுவேலையைதள்ளிப்போடுவதுஉசிதமில்லைஎன்றுஅன்றேமுடித்துவிடலாம்என்றுஉட்கார்ந்துவிட்டேன். இரவு 10 மணிகடந்துகடிகாரம்ஓடிக்கொண்டிருந்தது.ஒருவழியாக முடித்துவிட்டு அலுவலகம் கொடுக்கும் வண்டியை புக் செய்து அந்த காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன்.
இரவு நேரத்தில் எப்பொழுதும் அலுவலக கார்கள் விமானத்தை பின்பற்றும். சரமாரியாக இடுக்கிலும் சந்துகளிலும் புகுந்து சென்றுக்கொண்டிருந்தார். என்ன தான் அது தவறாக இருந்தாலும் அந்த லாவகத்தை பாராட்டி தான் தீர வேண்டும். குரோம்பேட்டை மேம்பாலத்தை அடைந்து இறக்கத்தில் ஒரு திருப்பத்தில் ஒரு சப்தம்… ‘சடார்’ என. முன்னால் இழுத்து தள்ளப்பட்டேன். எனது இருக்கப்படியால் ஒன்றும் ஆகவில்லை. வண்டி ஆடிக்கொண்டே ஒரு ஓரமாக சென்று நின்றது. வண்டியின் வலப்புறம் ஒரு பல்சர் பைக் நொறுங்கி போய் இருவர் கீழே கிடந்தனர்.
அய்யோ என்று பதறியவனாய் வண்டியில் இருந்து கீழே இறங்கி அவர்களை நோக்கி ஓடினேன். அதில் ஒருவன் மட்டும் அய்யோ தண்ணீர் கொடுங்களேன் என்று கதறியவனாய் இருக்க, இன்னொருவன் எழுந்து சரியாக நின்றுக்கொண்டிருந்தான். அவர்கள் விழுந்த வேகத்தை பார்த்த நான் அவர்…