களவுண்ட மனசுங்க..
அந்தி மாலை வேலையிலே...
சின்ன ஓலையிலே செங்கார கொண்டையிலே
பூவ சொருகிட்டு பொத்தி பாத்தபுள்ள
மாமன மடிச்சுகிட்டு மச்சுல சேத்துகிட்டு
கண்ணுல காந்தமா எனை கரைக்குதே என்னது...?

சேர்ந்து வாராப்புல..
கையை இருக்கையில
ஒத்த சுவரு சாஞ்சு மறச்சு
ஓரக்கண்ணு சுவரோட என்னைய ஓரமாபாக்குதுங்க..

நாலடி நான் நெருங்கையில
எட்டடி வெலகி ஓடுதுங்க..
சின்னமயில் செங்குருதி கொஞ்சம்
செவந்துண்டு நிக்குதுங்க..!

சிமெண்ட் தரை ஓரத்துல
கொஞ்சம் தரை சிதறி கெடக்குதுங்க..
என் நெஞ்சார பெண்ணொருத்தி
அதை காலால செதைக்குறாங்க...!

தட்டி தவிக்கையில
நெஞ்சு தெசகெட்டு நிக்குதுங்க
கொஞ்சும் பார்வையில என
கொன்னு கரைகிறாங்க !!!

வண்ண திரை ஓரத்துல
வச்ச சோறு சூடு ஆறலங்க
காத்துல மணம் வந்து
என் மூக்கோரம் மொனகுதுங்க ..!

என்ன சுகம் கண்டுபுட்டன்
மனசுக்குள்ள கேள்விங்க
இவள மீறி என்ன வேணும்
நெஞ்சம் முழுக்க அவ தானுங்க ..!

தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

ஏழு நாட்கள்...