தமிழறியும் வீரப்பெண்...உற்றான் உலகறியும் உன்னத நோக்கினான்
மற்றான் உடன் செரிந்து போர்க்களம் அடைந்திலான்..
அவள் மற்றறியும் மரத்திலும் உற்ற மாண்பிலும்
தக்க சிறுவகையோடு செழிமைக் கொழிலொழுகினாள்..
அவன் வரவை வழிநோக்கியாள்..

யாஞ்செய சொந்தமாகியோர் ஏற்றம் அறிவார்க்கு
அவள் காத்தறிகிறாள்.. காற்றாய் அவன் அறிகிளாள்..

ஏர் பூண்ட மாடொன்று மாசி மழிந்தொழி
தேர் பூண்ட சாலையெங்கும் வெறும் மணல் தூசி..
காத்திருக்கும் நொடிகடக்கும் பறையறிக்கும் அறிவிப்பும்
உற்றான் உயிர்நீத்தான் என்றறிவிப்பு..

எஞ்செயனென்று புறமுதுகிட்டானென
கொழுந்த தீயாகிய ஊரார்க்கிளை
வஞ்செயலறிந்து வசைபாடியாள்..

உற்ற துணையிழந்தாள் மற்ற துணையறியாள்
ஒற்றை பிஞ்சு கைபிடித்து உயிர் பிடிக்கிறாள்…
புறமுதுகின் அறம் அறிய…

போரின் வெற்றி முரசு வீதியெங்கும் கொடறிந்து
ஊர் தென்கொடியில் வீற்றிருந்தாள்..
பவனியறிந்த படையெங்கும் தேடல் வேட்கையில்
அவனையறிந்தாளை அவள் அருகினாள்..

புறமுதுகிட்டானா தன் கணாளனென கண்ணீரின் ஏக்கமறிக
மாற்றான் சொல்கையில்- அவன் புறமறியான்
தக்க மதிப்பறிவான்..
வெற்றி வாகையில் நால் புறமும்
வீர செயல் புரிகையறிவான்..
முதலண்டை நாளில் பலர் மூர்ச்சையாக்கினான்
பலநாளின் போரில் ஒற்றை கையிழந்திட்டான்..
மாதங்களின் வைத்தியமுடிவறியுமுன்னே மீண்டும் போர் இறங்கி
ஒற்றை கையின் வால் வீச்சில் பலரை மூர்ச்சையறிய வைத்தான்..
கால் இழக்கிறான்.. அவனை இழக்காது
மண்ணோடு இழுத்துண்டு மசித்தொழிகையில்
சுற்றி மாற்றானின் திசை செதற செய்தான்..
தூரத்தில் தளபதி பின்னாலின் தாக்களறிந்தவன்
ஒற்றை காலின் உந்துதள் பாய்ந்து
வால் வீச்சின் தாக்கம் தாங்கி இழுக்கும் உயிரோடு மாற்றானை மழிந்தொழிந்தான்..
உன் உற்றான் உலகறியும் வீரனவன்..
மாற்றான் சொல்லறிகையில் உற்றாள் உயிரெங்கும் உன்னதமறிந்தாள்..
அடிவயிற்றில் ஒரு அளவில்லா செங்கூற்று செழிப்படைய
மச்சிய ஊருக்கெல்லாம் மெச்சிய சொல்கூற்றாய்
ஊர் சுற்றி திரிகிறாள்…

குடிசையுரத்தில் குத்திட்டிருந்த வாளை இழுத்துண்டு
பிஞ்சின் கையிலூட்டி பயிற்ச்சிக்கு அனுப்பினாள்…
வீரத்தின் திலகமதை நெற்றியில் விட்டுண்டு..
தமிழறியும் வீரப்பெண் அவள்..!!

--தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

ஏழு நாட்கள்...