Posts

Showing posts from March, 2015

இயற்கை அழைக்கிறதே...

Image
பழமையென படையெடுக்கும் நெஞ்சங்கள்
பகுத்தறிவு புகுந்து பசியெடுக்குது.
உள்ளே புகுந்துண்டு துடிக்கும் எண்ணம்
உணர்வின் மதிப்பை அறியமறுக்குது.!!

காற்று வீசும் தூரம் எதுவோ?
அதனோடு நானும் போகும் காலம் எதுவோ?
கண்ணில் தெரியாமல் மிதந்து திரியும்
நிலத்தின் கடற்அலையோ இந்த காற்று..?

மலைகளுக்கும் எனக்கும் என்ன தொடர்போ?
அன்னார்ந்து பார்த்து அகிலமென வியக்கும்போது
எனக்குள்ளே ஏதோ உள்சிலிர்ப்பு..

வான்தொடும் மரங்கள் அங்கே..
வனச்செரிப்பின் பூகம்பமோ..?
ஆட்டம் ஆடுகையில் என்னையும் ஆட்டிப்போகிறதே...

அருவிக்கூட்டமும்,
பெருங்கூச்சல் கடல் அலையும்,
சுழன்றோடும் ஆறும்
ஆற்றின் மடுவும்
சலசலக்கும் ஓடையும்
ஊற்று சுனையும்
குட்டை குளமும்
அதில் உந்தியெடுக்கும் கிணறும்
எல்லாம் எனைசுற்றி உருமிக்கொண்டே இருக்கிறது
அள்ளிக்கொள்ள அழைக்கும் மனைவிபோல
எனை அழைத்துக்கொண்டே இருக்கிறது..!

அடர் மரமும்
அதன் கிளையும்
நுனி பூவும்
அடி வேறும்
எனை பிணைத்தெடுக்க சொல்லுகிறது
அதோடு இணைந்துக்கொள்ள சொல்கிறது..

மலை சருக்கு
எனை மகுடிக்கு ஆடும் பாம்பு போல
மசித்து சுற்றி ஆட வரவைக்கிறதே..

அந்த மலையோடு..
மழை சாரலோடு..
அடர் மரக்கூட்டம் நடுவே
அம்மண நடனம் …

என் அக்கா மகளின் கதை...

Image
என் அக்காவின் மகள் - இனியா. நான் எழுதுவதை பார்த்துவிட்டு அவளும் கதை சொல்லுகிறேன் எழுதுறியா? என்று கேட்டாள். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்.. அவளின் வயது மூன்று. மொத்தம் நான்கு கதைகள் சொன்னால். அந்த நான்கும் உங்கள் பார்வைக்கு.


கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டேன். 'சிரிப்பு' என்று சொல்லிவிட்டு பல முறை சிரித்து காண்பித்தாள். 'சிரிப்பா?' என்றேன். 'ஆமாம் டா.. சொல்லுறேன்ல.. எழுது' என்றாள். அதன் பின் நான் எழுதியது அவளின் வார்த்தைகள் அத்தனையும் கீழே.

முதல் கதை

ஆ… ஈஈ.. காலு.. எங்க எழுதணும்? விரல்.. கை.. வளையல்.. கை.. விரல்.. விரல்.. விரல்,, விரல்,, விரல்.. விரல்.. விரல்.. விரல்.. விரல்.. கொலுசு.. நைல் பாலிஷ்.. ஜட்டி.. முட்டி.. சாமி.. ட்ரஸ்.. ங்க்.. லைட்.. தலை.. மூக்கு. கண்ணு.. ஈ… இய்யா.. உடது.. க்.. கன்னம்.. அவ்வளவுதான்.. முடிஞ்சுது கதை…! வேற என்ன கதை சொல்லலாம்.. சொல்லுடா?
அடுத்த கதை
பிங்க்.. ரெட்.. ப்ளூ.. எம்.. என்.. ஓ.. பி.. டபள்யு.. எக்ஸ்.. ஏ .. பி.. சி.. அவ்வளவுதான்…

காக்கா கதை
ஒரு ஊர்ல காக்கா இருந்துச்சாம்… அதுக்கு பசி தாங்கலயாம்.. ஒரு காக்காக்கு தண்ணி தாகம் எ…

காம மிருகத்தின் அடிகோடு உங்களுடையதா?

Image
இரண்டு வருடங்களுக்கு முன்பு நம் மனதை உருக்கிய சம்பவம். இந்தியாவின் தலைநகரான தில்லியில் ஒரு பெண், ஆறு மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டது. அடுத்த நாள் யாரின் அழைப்பு அற்றும் மாணவர்கள், பணியாளர்கள் என பலரும் தெருவில் இறங்கி அந்த மிருகங்களை தூக்கிலிட சொல்லி போராடினர். ஒருவன் சிறையிலே மாண்டுபோக, நால்வருக்கு தூக்கு என்று தீர்ப்பு வர,மற்றொருவன் 18 வயது நிரம்பாதவன் என சிறுவருக்கான சட்டமே பாயுமென சொல்லி மூன்று ஆண்டு சிறை வழங்கப்பட்டது.
சட்ட திருத்தம் வேண்டும்- சமுதாய மாற்றம் வேண்டும் என்று சொல்லி போராட்டம் சென்றது. இதைப்பற்றி சமீபத்தில் BBC ஒரு ஆவணப்படம் தயாரித்தது. அதில் குற்றவாளிகளான அந்த ஆறு பேரின் உறவினர்களின் எண்ணங்களும் கேட்கப்பட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் மீது பழி சுமத்திக்கொண்டு அவர்களின் பேச்சு இருந்தது. அதில் ஒருவனின் மனைவி, ‘ஒரு பெண்ணுக்கு ஆண் தான் துணை. அவர் தான் எனக்கு துணை. அவர் இல்லாவிடில் நானும் என் குழந்தையும் என்ன செய்வோம்? நாங்களும் சாக வேண்டியது தான். இதுவரை இந்த தவறு செய்த எல்லோருக்கும் என்ன தூக்கு தண்டனையா கொடுத்துவிட்டார்கள்? இல்ல இனி வருபவர்களுக்கு தூக்கு தான் தருவார்களா…

விதை

Image
உறங்கிவிட்ட மனங்களின் கர்ஜனை அங்கே தூரத்தில் விண்ணை முட்டி பிளந்துகொண்டு சீறி பாய்ந்து செவி அடையும் முன்னே.. ஒற்றை ஒற்றை செதில்களாய்.. அணுக்களாய்.. ரத்த கிளரிகளாய்... வெடித்து சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் மொட்டுக்களாக சிறு சிறு விதைகளாக மண்ணுக்குள் புதைந்து போய்க்கொண்டிருந்தன.விதைகள் ஒவ்வொன்றும் மரங்களாய் முளைத்தெழுமோ தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இவ்விதைகள் பல நூறு விதைகளை தூவும்... விதை செடியாக.. பின் செடி மரமாக.. பின் மரம் தோட்டமாக... பின் தோட்டம் காடாக...! உருமாறி உருமாறி பிரபஞ்சத்தின் சக்தியை உள்ளே உறிஞ்சி கூக்குரலிடபோகும் கனவின் ஆரம்பம் இது.

விதைகள் மரமாகும் முன்னே அதை நசுக்கி நஞ்சுக்கு உரமாக்க நயவஞ்சக கூட்டம் அலவலாவி கொண்டிருக்கும் வேலையிலே.. தூக்கமும் மறந்து, உணவு மறந்து விதைக்கப்பட்ட விதையை காப்பாற்ற ஒரு கூட்டம் மடிந்து மடிந்து எழுகிறதே..! அந்த விதை மரமாகி என்ன சாதிக்க போகிறது.? இன்னும் எத்தனை விதைகளை ஊன்ற போகிறது.? வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் கோர வடிவாய் முளைத்தெழும் ஒவ்வொரு விதையும் விடுதலை மோகம் கொண்டு தான் எழும்பும்.


******

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பத்திகளை படி…

அதிமுக., ஆட்சி ஆரம்பமானபோது...

Image
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது ஏதெனும் நல்லது நடக்கும் என்ற நமது ஆசைகளில் டன் டன்னாக மண் அள்ளிக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சி. கடந்து போன ஆட்சியின் ஒரு வலுவான கிடுக்குப் பிடியிலிருந்து தப்பித்தோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே காழ்புணர்ச்சி அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

கடந்த தி.மு.க அரசின் திட்டங்கள் நலம் பயப்பதாய் இருந்தாலும் கூட அதை தவிடு பொடியாக்கித்தான் தீருவேன் எனபதற்கா அரசுப் பொறுப்பு ஏற்றார்கள்? மக்களுக்கு நல்லது செய்ய வந்த அரசு கடந்த அரசு செய்த நல்ல விசயங்களை அழித்தொழிக்கத்தான் வேண்டுமா...?

சாரசரி தமிழனின் ஆதங்கமாய் விரியும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...!

உலகளாவிய தமிழர்கள் அனைவரின் கோபத்தின் விளைவாக தமிழகத்தின் முதல்வர் என்னும் சிம்மாசனத்தில் இருந்து அல்லாடும் வயதில் தூக்கி எறியப்பட்டார் கருணாநிதி. தூக்கி எறியப்பட்டவரை துச்சம் என எண்ணி இப்போது சிறப்பான ஒருவரை உட்கார வைத்துவிட்டதாய் உண்மையறியா நடுத்தர மக்கள் மே-13 முதல் அந்த சூடு ஆறும் வரை பிதற்றிக்கொண்டு தான் இருந்தனர். இதில் திமுக.,சார்பு மக்களும்- ஜெ.,வை பற்றி விடயம் தெரிந்தவர்களும் அடக்கிவாசித்தனர்.
உண்…

அழிகப்படவேண்டிய மிருகங்கள்..

Image
அந்த அறை மிகவும் அமைதியாக இருந்தது. குறைவான மின்சாரம் காரணமாக மின்விசிறி மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தது. பழைய காலத்து மின் விசிறியாக இருக்க வேண்டும் அது. மெதுவாய் சுழற்றும்போது சப்தம் அதிகமாக கேட்டுக்கொண்டிருந்தது. கீழே ஒரு பெண் மயக்கத்தில் படுத்திருந்தாள்.
அந்த அறையின் கதவில் இருக்கும் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால் வயதான இருவர் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் வெள்ளை கோட் அணிந்திருந்தார். அவர்களோடு காக்கி உடுப்பு உடுத்திய ஒருவர் வந்து பேசினார்.அந்த இருவரிடமும் மற்றொருவர் கோபமாக கத்திக்கொண்டிருந்தார். கத்திவிட்டு வேகமாக கதவை திறந்து உள்ளே வந்தார்.
கோபமாக இருந்த அவரது முகம் உள்ளே சென்று அந்த பெண்ணை பார்த்ததும் அமைதியானது. அவரின் முகத்தில் ஒரு பரிதாபம் வந்தது என்றே சொல்ல வேண்டும். அவள் மெதுவாக கண்ணை திறந்தாள். அவர் நிற்பதை அவள் கண்கள் அரைகுறையாய் பார்த்தது. அவளை அறியாது அவளது கண்கள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தது. அவரை பார்க்க முடியாமல் அவள் மாற்று பக்கம் திரும்பிக்கொண்டு தொடர்ந்து அழுதாள்.
அவளின் கண்களை பார்த்ததும் அவர் உருக்குலைந்து போனார். சட்டென நடுக்கத்துடன் வந்து அவளின்…