Skip to main content

காம மிருகத்தின் அடிகோடு உங்களுடையதா?
இரண்டு வருடங்களுக்கு முன்பு நம் மனதை உருக்கிய சம்பவம். இந்தியாவின் தலைநகரான தில்லியில் ஒரு பெண், ஆறு மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டது. அடுத்த நாள் யாரின் அழைப்பு அற்றும் மாணவர்கள், பணியாளர்கள் என பலரும் தெருவில் இறங்கி அந்த மிருகங்களை தூக்கிலிட சொல்லி போராடினர். ஒருவன் சிறையிலே மாண்டுபோக, நால்வருக்கு தூக்கு என்று தீர்ப்பு வர,மற்றொருவன் 18 வயது நிரம்பாதவன் என சிறுவருக்கான சட்டமே பாயுமென சொல்லி மூன்று ஆண்டு சிறை வழங்கப்பட்டது.

சட்ட திருத்தம் வேண்டும்- சமுதாய மாற்றம் வேண்டும் என்று சொல்லி போராட்டம் சென்றது. இதைப்பற்றி சமீபத்தில் BBC ஒரு ஆவணப்படம் தயாரித்தது. அதில் குற்றவாளிகளான அந்த ஆறு பேரின் உறவினர்களின் எண்ணங்களும் கேட்கப்பட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் மீது பழி சுமத்திக்கொண்டு அவர்களின் பேச்சு இருந்தது. அதில் ஒருவனின் மனைவி, ‘ஒரு பெண்ணுக்கு ஆண் தான் துணை. அவர் தான் எனக்கு துணை. அவர் இல்லாவிடில் நானும் என் குழந்தையும் என்ன செய்வோம்? நாங்களும் சாக வேண்டியது தான். இதுவரை இந்த தவறு செய்த எல்லோருக்கும் என்ன தூக்கு தண்டனையா கொடுத்துவிட்டார்கள்? இல்ல இனி வருபவர்களுக்கு தூக்கு தான் தருவார்களா? ஏன் இப்படி?’ என்று கேட்கிறாள். அவள் ஒரு பெண் தானே? கணவன் என்று வந்துவிட்டாள் என்ன உணர்வும் உணர்ச்சியுமா மங்கிவிடும்? அந்த அகோர காட்சிகளை அவள் மனதில் எண்ணி பார்த்திருந்தால் அவனை விடுவிக்க சொல்லி அவள் வார்த்தை பேசியிருக்க முடியுமா?

குற்றவாளிகளில் ஒருவன் பேசுகிறான். ‘இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் சுற்றுவது தவறு. நடந்த சம்பவத்திற்கு எங்களின் மீது குற்றம் சுமத்துவதற்கு பதிலாக அந்த பெண்ணின் மீது குற்றம் சுமத்துவதே சரி. நால்வர் சேர்ந்து கற்பழிக்கையில் அந்த பெண் தடுக்க கூடாது. பண்ணிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட வேண்டும். அப்படி செய்தால் ஆண்கள் அவர்களின் வேலையை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். உயிர்க்கு எந்த ஆபத்தும் நேராது. இப்பொழுது எங்களுக்கு தூக்கு தண்டனை தரும் பட்சத்தில் இனி கற்பழிக்கும் ஆண்கள் அந்த பெண்ணை உயிரோடு விட மாட்டார்கள்… அப்பொழுதே அவளை கொன்றுவிடுவார்கள். இன்னும் பெரிய பெரிய தவறு செய்தவர்கள் எல்லாம் என்ன தூக்கு தண்டனையா பெற்றார்கள். இந்த விசயத்தை ஏன் இவ்வளவு பெரியதாக மாற்றுகிறார்கள் என்று எனக்கு உண்மையாக புரியவில்லை’ என்றான் அவன்.

ஒருவகையில் இவர்கள் இருவரின் பேச்சும் ஒன்றை நமக்கு புலப்படுத்துகிறது. கடுமையான சட்டங்கள் இது போன்ற குற்றவாளிகள் மீது பாயவில்லை. இனியும் முழுதாய் பாயுமா என்று தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு பயம் தரவேண்டிய தண்டனையை பற்றி ஒரு குற்றவாளியே இந்த தண்டனையால் இன்னும் குற்றம் பலமாகும் என்று வாக்குமூலம் தருவது மிகவும் அதிர்ச்சிகரமான விடயம். பெண்மையை இழிவாக நினைத்து, காமத்தின் பசி தீர்க்கும் பொருளாக செயல்படும் ஒவ்வொரு மிருகத்தையும் கழுமரத்தில் ஏற்றி அம்மணமாக நாய்களை விட்டு புசிக்க செய்யவேண்டும். பெண்களை தனது இச்சையின் மோக பொருளாய் கையாளும் வர்க்கத்தாரை என்னுடன் சேர்ந்த ஆண் வர்க்கம் என்பதை சொல்லவும் கேவளபடுகிறேன்.

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அங்கே அங்கே சம்பவங்கள் தினமும் அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்  என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. நான் இந்த சம்பவம் நடக்கும் முன்னரும் சரி, பின்னரும் சரி பலமுறை கற்பழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பேசியிருக்கிறேன். இன்னும் அந்த குற்றவாளி பேசிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நினைக்கையில் கண்ணீர் பெருகி வருகிறது.

அந்த ஆவணப்படத்தின் இறுதியில் இதுபோல சம்பவம் நடக்காமலிருக்க ஒரே வழி சரியான கல்வியே என்று சொன்னர். ஆனால் இன்று எத்தனையோ பள்ளிகளில் ஆசிரியர் என்னும் போர்வையில் இருக்கும் காம கொடூரர் தன்னிடம் படிக்கும் பிள்ளைகளையே நாசம் செய்யும் செய்திகளை நாம் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறோம். அப்படியானால் இதை தடுப்பதற்கு என்ன வழி? என்ன செய்யலாம்? எனக்கும் தெரியவில்லை. ஆனால் நான் இதுவாகவும் இருக்கும் என்று தோன்றியதை சொல்கிறேன்.

நீங்கள் உங்கள் பிள்ளையோடு வெளியில் செல்கிறீர்கள். அங்கே அழகான ஒரு பெண் செல்வதை காண்கிறீர்கள். உடனே உங்கள் பையனை அழைத்து ‘அந்த பொண்ணு எப்படி இருக்கா பாரேன்.. செம அழகுல..’ என்று சொல்கிறீர்கள். இப்பொழுது பல தாய்மார்கள் பையனிடம் தோழமையாய் பழகுகிறேன் பேர்வழி என்று பெண்களை வர்ணிப்பதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஒரு பெண்ணை காட்டும்போது அந்த பையன் பெண்ணை திரும்பி பார்க்கிறான். அவன் கண்கள் முகத்தை மட்டும் தான் பார்த்துவிட்டு திரும்பும் என்று உங்களால் உறுதி சொல்ல முடியுமா? உங்கள் பிள்ளையின் காம தூண்டுதலுக்கு நீங்களே அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறீர்களா? கேவலமாக இல்லையா? ஒரு வேலை உங்கள் பிள்ளையெல்லாம் அப்படி இல்லை என்று என்னை திட்டுவதற்கு நீங்கள் தயாரானால், உங்கள் அதீத அறிவுக்கு நான் சலாம் போடுகிறேன்.

உங்கள் நண்பனோடு வெளியில் செல்கிறீர்கள். உங்கள் அலுவலகத்திலோ, கல்லூரியிலோ உடன் இருக்கும் பெண்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள் என்றால் அதுவும் தவறு தான். ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேச தெரியாதவன் ஆணாக இருப்பதில் அர்த்தமில்லை. மிருகமாக மாறிக்கொள்ளலாம்.

பெண்ணாக நீங்கள் வெளியில் செல்கிறீர்கள். உங்களை ஒரு ஆண் பார்க்கிறான். நாம் அழகாய் இருக்கிறோம் என்னும் மமதை அந்த இடத்தில் வேண்டாம். அவன் உங்கள் கண்களை ரசிக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ளுஙfகள். இச்சைக்கொள்ளும் மிருகத்திற்கு படையல் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

என்னடா இவன் சாதாரணமான விசயங்களை எல்லாம் பெரிதாய் பேசிக்கொண்டிருக்கிறான் என்று யோசிக்காதீர்கள். இந்த மாதிரி சாதாரண விசயங்களில் இருந்து தான் பூகம்பம் போன்ற விசயங்கள் கிளம்பும்  என்பதை உணருங்கள். இன்று கற்பழிப்பவன் எல்லாம் நேற்று தெருக்களில் நின்று உங்களை ரசித்தவனாய் இருக்கலாம். அவன் உனது நண்பனாய் நேற்று ஒரு பெண்ணை பார்த்து காம சொல் பேசியிருக்கலாம். ஒரு அம்மாவின் பிள்ளையாய் அம்மாவின் கண்வழியே ஒரு பெண்ணை பார்த்திருக்கலாம். எல்லாவற்றிர்க்கும் அடித்தளம் சமூகமே அமைக்கிறது.

அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு கருத்தும் உண்மை தான். அந்த ஆறு பேரும் ஏழை குடும்பத்திலிருந்து வந்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் பெண்களுக்கு என்று மரியாதை தரமாட்டார்கள். பெண்களை போதை பொருளாக, தம் பசியின் உணவாக, அவளுக்கு விருப்பமில்லாவிடிலும் தன் தாகத்தை தணிக்க வேண்டியவளாகவே கணவனாகிய ஆண்களே பாவிக்கின்றனர். அதை பார்த்து வளர்பவர்களுக்கு அது தவறு என்பதே தெரியாது. அது மட்டும் தானா? உங்கள் குழந்தைகள் முன்னிலையில் சாதாரண பெற்றோர்கள் கூட அந்தரங்கமாய் கொஞ்சலும், முத்தங்களும் என்று கூட இருக்க வேண்டாம் என்று தான் நான் சொல்வேன்.

மாற்றம் வேண்டும் உலகம் இது. இதில் கண்டிப்பான வழிமுறைகள் வேண்டும். அப்பொழுது தான் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும். தவறு இழைப்பவன் படிக்காதவனோ, ஏழையோ என்று எண்ணாதீர்கள். நன்கு படித்தவனும், பணக்காரனும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் அத்தனை பேரும் இதில் அடக்கம். எந்த புற்றில் எந்த சாத்தான் ஒளிந்துக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்களுக்கான உரிமை கோரும் அதே சமயம் பெண்கள் அதை அளவு கடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆண்கள் மட்டும் செய்யலாமா? என்று கேட்டுக்கொண்டு ஆண் செய்யும் அதே தவறை பெண்களும் செய்வது சரியாகாது.

காம இச்சை கொள்ளும் மிருகங்களாய் உங்களை சுற்றி இருப்பவர்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாளை அந்த மிருகத்தின் எச்சம் உங்களின் பாசமிகு சகோதரி மீதோ, காதலி மீதோ, மனைவி மீதோ பட்டு அமிலமாய் கொதித்தெழும் நாள் கூட வரலாம். நீங்கள் தெருவில் ஒரு பெண்ணை பார்த்து காம சொல் பேசுவதாய் இருந்தால் எங்கோ உனது சகோதரியையும், உன் மனைவியையும் ஒருவன் அப்படி சொல்லிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்துக்கொள். இந்தியாவில் பல இடங்களில் நம்மை சுற்றியே பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக்கொண்டிருக்கிறன. பெண்களுக்கான சுதந்திரம், உரிமை என்று பேசும் சமையத்தில் பெண்ணியத்தை மதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

-தம்பி கூர்மதியன்


Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…