என் அக்கா மகளின் கதை...


என் அக்காவின் மகள் - இனியா. நான் எழுதுவதை பார்த்துவிட்டு அவளும் கதை சொல்லுகிறேன் எழுதுறியா? என்று கேட்டாள். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்.. அவளின் வயது மூன்று. மொத்தம் நான்கு கதைகள் சொன்னால். அந்த நான்கும் உங்கள் பார்வைக்கு.


கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டேன். 'சிரிப்பு' என்று சொல்லிவிட்டு பல முறை சிரித்து காண்பித்தாள். 'சிரிப்பா?' என்றேன். 'ஆமாம் டா.. சொல்லுறேன்ல.. எழுது' என்றாள். அதன் பின் நான் எழுதியது அவளின் வார்த்தைகள் அத்தனையும் கீழே.

முதல் கதை

ஆ… ஈஈ.. காலு.. எங்க எழுதணும்? விரல்.. கை.. வளையல்.. கை.. விரல்.. விரல்.. விரல்,, விரல்,, விரல்.. விரல்.. விரல்.. விரல்.. விரல்.. கொலுசு.. நைல் பாலிஷ்.. ஜட்டி.. முட்டி.. சாமி.. ட்ரஸ்.. ங்க்.. லைட்.. தலை.. மூக்கு. கண்ணு.. ஈ… இய்யா.. உடது.. க்.. கன்னம்.. அவ்வளவுதான்.. முடிஞ்சுது கதை…! வேற என்ன கதை சொல்லலாம்.. சொல்லுடா?

அடுத்த கதை

பிங்க்.. ரெட்.. ப்ளூ.. எம்.. என்.. ஓ.. பி.. டபள்யு.. எக்ஸ்.. ஏ .. பி.. சி.. அவ்வளவுதான்…


காக்கா கதை

ஒரு ஊர்ல காக்கா இருந்துச்சாம்… அதுக்கு பசி தாங்கலயாம்.. ஒரு காக்காக்கு தண்ணி தாகம் எடுத்துச்சாம்.. ஒரு பானை இருந்துச்சாம்.. கல்ல தூக்கி போட்டு போட்டுட்டு.. குடிச்சுடுச்சாம்.. குடிச்சுட்டு போயிடுச்சாம்…

பாட்டி கதை 

பாட்டி வட சுட்டுட்டு இருந்தாங்கலாம… அத ஒரு காக்கா எடுத்துட்டு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சாம்.. அங்க நரி வந்து காக்கா கத்துண்ணு… வட விழுந்துச்சாம்.. தூக்கிட்டு போயி காட்டுல உக்காந்து சாப்பிட்டுடுச்சாம்…

- இனியா

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!