இயற்கை அழைக்கிறதே...பழமையென படையெடுக்கும் நெஞ்சங்கள்
பகுத்தறிவு புகுந்து பசியெடுக்குது.
உள்ளே புகுந்துண்டு துடிக்கும் எண்ணம்
உணர்வின் மதிப்பை அறியமறுக்குது.!!

காற்று வீசும் தூரம் எதுவோ?
அதனோடு நானும் போகும் காலம் எதுவோ?
கண்ணில் தெரியாமல் மிதந்து திரியும்
நிலத்தின் கடற்அலையோ இந்த காற்று..?

மலைகளுக்கும் எனக்கும் என்ன தொடர்போ?
அன்னார்ந்து பார்த்து அகிலமென வியக்கும்போது
எனக்குள்ளே ஏதோ உள்சிலிர்ப்பு..

வான்தொடும் மரங்கள் அங்கே..
வனச்செரிப்பின் பூகம்பமோ..?
ஆட்டம் ஆடுகையில் என்னையும் ஆட்டிப்போகிறதே...

அருவிக்கூட்டமும்,
பெருங்கூச்சல் கடல் அலையும்,
சுழன்றோடும் ஆறும்
ஆற்றின் மடுவும்
சலசலக்கும் ஓடையும்
ஊற்று சுனையும்
குட்டை குளமும்
அதில் உந்தியெடுக்கும் கிணறும்
எல்லாம் எனைசுற்றி உருமிக்கொண்டே இருக்கிறது
அள்ளிக்கொள்ள அழைக்கும் மனைவிபோல
எனை அழைத்துக்கொண்டே இருக்கிறது..!

அடர் மரமும்
அதன் கிளையும்
நுனி பூவும்
அடி வேறும்
எனை பிணைத்தெடுக்க சொல்லுகிறது
அதோடு இணைந்துக்கொள்ள சொல்கிறது..

மலை சருக்கு
எனை மகுடிக்கு ஆடும் பாம்பு போல
மசித்து சுற்றி ஆட வரவைக்கிறதே..

அந்த மலையோடு..
மழை சாரலோடு..
அடர் மரக்கூட்டம் நடுவே
அம்மண நடனம் ஆட விழைகிறேன்..
இயற்கையோடு சேர்ந்து அந்த இயல்புக்கு போக விழைகிறேன்..

செருப்பற்ற கால்களோடு
அருவித்தாய்க்கொண்டு - படர்ந்துவரும் ஆற்றில்
கூழங்கல்லில் பாதம் பதித்து
ஆனந்த தாண்டவம் ஆட விழைகிறேன்..

சருகுகளுக்கும்- படரும் இலைகளுக்கும்
அம்மண குளியல் முடித்துவிட்டு
திரிந்து பறந்த அந்த காட்டு மரத்தின் வேர்களிலே
தஞ்சம் புகுந்து ..
அந்த மரத்தின் உச்சி நோக்கி உரக்க கத்த விழைகிறேன்..

கத்தலின் முடிவாய் பறக்கும் பறவையோடு
சேர்ந்து நானும் பறக்க விழைகிறேன்..

தூரமாக.. தூர தேசமாக..
ஆ.ஆ.. ஆ... என்று கத்திக்கொண்டே..
பற்கள் எல்லாம் தெரிந்துக்கொண்டே
காடுகளின் நடுவே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே
மண்ணிற்கும் மழையிற்கும் முத்தம் கொடுத்துக்கொண்டே
சுற்றி சுற்றி ஓடவேண்டும்..
சுகமான சுகமென்று
அந்த இயற்கைக்கே நான் இயந்தவன் ஆகவேண்டும்..

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி