Skip to main content

Posts

Showing posts from April, 2015

மாற்றம் தருவாய் தாயே...!!

அன்பென்று தினமொருமுறையேனும் பகிர்வாய் தாயே… பொறுமையிழவுலகில் யாம் பொறுத்தலறியேன் படைத்தலறிந்தாயே எனை பொறுத்தலறிசெய்வாயே..
உட்டட்டும் ஊட்டட்டும் உலகம் எனை திக்கெட்டும் திசைமாற்திணரறி செய்தறிக கொட்டட்டும் கொட்டட்டும் உலகம் திமிறி எட்டிடும் எட்டிடும் மடமம்… பிழைத்தலறியேன் தாயே எங்கும் நரையாகிய தர்மம் அறிவாய்…
உத்தமனென போக்கு உலகறிய நடக்கும் பெருமை பெற்றறியேன் தாயே மாறாய் இழிவையுற்றிருக்கிறேன் பாராய்…
கனலாய் மனமுருகி போன நிமிடம் தாயே நீயாகி சரணைடைய வந்தேன் மறவேன் மறவேன் என்றும் இந்த மதிக்கெட்ட உலகின் மடமையை மறவேன் காப்பாயே காளி தாயே இந்த மதியிழந்தாரின் மதியினை காப்பாயே நீயே..
தூற்றறட்டும் உலகமென தடமேறி நான் நடவேன் உயிர் மாசற்ற பண்பை பார்க்க தினம் நடைவேறி செல்கின்றேன் காண்பாய்…
ஒன்றோடொன்றாய் உலகம் உருல எனை மாறாய் ஒன்றாய் படைத்தாய் ஏனோ? மதிக்கொண்ட நானும் மடையனாய் ஆனேன் மகிழ்வினை கேளா தாயே… இந்த மடையனை பாராய் நீயே..!!
அழியுது அழியுது உலகு இங்கு பழியது சுமக்குது மனது தூர் தூர்த்திட தூர்த்திட பாராய் நான் அழிபெறுமுன்னேம் உன் செவியுறு பெறுவாயோ தாயே.. உன் செவியுறு பெறுவாயோ!!!
கட்டட்டும் கட்டட்டும் உலகு தினம் – சுற்றி திரிந்து ச…

இணைவின் மகிழ்வு

அவன் அந்த கடையில் நின்றுக்கொண்டிருந்தான்.
‘அண்ணே.. என்ன சீக்கிரம் தருவீங்களா மாட்டீங்களா? எவ்வளவு நேரம்.. காத்து வேற பலமா அடிக்குதுண்ணே.. குளுருது.. மழை வர்றதுக்குள்ள வீட்டுக்கு போயிடணும்.. தர்றீங்களா?’ என்றான். கடைகாரர் அவசர அவசரமாக புளியை பேப்பரில் கட்டிக்கொண்டிருந்தார். எரிச்சலில் அந்த வேறு பக்கம் திரும்பினான். அவன் பின்னால் இரு பெரியவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தை அவன் பார்க்கவில்லை, ஆனால் குரல் மட்டும் கேட்டது.
‘நல்ல இடம்.. மாப்பிள்ள IT கம்பேனியில பெரிய ஆளா இருக்காரு.. மேனேஜராம்.. அதான் நம்ம பொண்ணுக்கு முடிச்சுடலாம்னு இருக்கேன்..’ என்றார் ஒருவர்.
‘அட நல்ல விசயம் தானே.. பொண்ணு என்ன சொல்லுறா?’
‘அண்ணே.. என் பொண்ணுன்னே.. நீங்க யார சொன்னாலும் எனக்கு ரொம்ப சம்மதம்னு சொல்லிட்டா.. தெரியுமுல்ல..’
‘ரொம்ப சந்தோசம் பா…’ என்றார் மற்றொருவர்.
அவர் அவருடைய பெண்ணை பற்றி பெருமையாக பேசியதை கேட்ட அவன், இளசுகளுக்க உரிய ஏளனத்துடன் அவரை திரும்பி பார்த்தான். அவரின் முகத்தை பார்த்ததும் அவனின் ஏளனம் மறைந்துவிட்டது. சட்டென நடுக்கம் வந்தது. மேலும் அவர்களது பேச்சை கேட்டான்.
‘போன வாரம் வந்து பாத்துட்…

இயற்கையே இறையாகும்...

நித்தம் – என் சித்தம் உனை பற்றும் சிவயோனே..
கத்தும் வரை எற்றும் காப்பாற்றும் எம்பெருமானே..
உடுக்கை உடுக்கையிலெழும் சப்தம் தரும் டும் டும் டும்… எனை உலுக்கி உலுக்கி தினம் முறித்து கழித்து எனை உசுப்புகிறதே..
ஆதி அந்தம் மறந்து நாளும் தினம் யான் சிவனடியானேன்..
முற்றும் மலை எட்டும் சருகுற்ற பாதை தட்டும் கற்றும் படி அற்றாய் முள்ளும் அடி கல்லும் எனை தள்ளும் தினம் சொல்லும் மறவாது- மதியாது உன்னடி சரண் அடைய பாதையொன்றேறி பாதம்பற்றடைவேன்… புலித்தோள் புவிப்பற்றிருக்க அதன் மேலே நீ வீற்றிருக்க.. உயிரை கொல்லுதல் பாவமென்ற போதனை யாம் உம்மிடம் பெற்றோம்..
அந்தமழியுமென கோபம் தரிக்க மறித்த யான் உந்தன் ருத்ரத்தின் விந்தை அறிந்து குழப்பமடைந்தேனே..
உம்மிடம் யாம் அடியானேன்.. உம்மிடம் யாம் கற்றவனானேன்..
உனை பற்றி நினைக்கையிலே என்ன ஒரு மாற்றம் எனக்குள்ளே.. எல்லாம் மறந்த தூயவனாகிறேன்..!!
காற்றாய் தினம் எனக்குள் நீயாய் நித்திரையிலும் உன் முகமே சொக்கி போயி நிற்கின்றேனே…
உனது கோபத்தின் கனலாக உன் திருமேனி பற்றிட மாட்டேனோ மாயவனாகி எனை மாய்க்கிறாயே…!! உன்னிலா என்  ஈர்ப்பு… அற்று உன் இடத்திலா இந்த ஈர்ப்பு!!?
இயற்கை அழகுற்ற அம்மலையில் இசைந்து நான் இ…

ஆசையின் விரக்திநிலை...

அவர் மெதுவாக அந்த அறையின் கதவை திறந்து பார்த்தார். கதவை திறக்கும் சப்தம் கேட்ட அடுத்த மாத்திரத்தில் அவள் படுக்கையில் இருந்து சட்டென எழுந்து நின்றாள். முகத்தை மறைத்து கண்களை துடைத்துக்கொண்டாள். அவர் உள்ளே நடந்து வந்தார் சற்றே தயக்கத்தோடு.
‘அப்பா.. சொல்லுங்க..’ என்றாள் அவள் தான் உள்ளுக்குள் அழுவதை மறைக்கும் வண்ணம். அப்பா நேராக வந்து கட்டிலில் அமர்ந்துக்கொண்டார். அருகில் அவளையும் அமர்த்திக்கொண்டார். அவள் அறையின் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பா தனக்கு நேராக இருக்கும் சுவற்றையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அப்பா பேச தொடங்கினார்,
‘அம்மா.. நான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறியா மா?’ என்று அவர் கேட்டார். இன்னும் சுவற்றில் இருந்து கண்ணை விலக்காமல். அவள் அவரின் முகத்தை ஒரு முறை திரும்பி பார்த்தாள். எதுவும் பதில் பேசாமல் மீண்டும் அவள் ஜன்னல் வழியாக வெளியில் பார்க்க தொடங்கிவிட்டாள். அங்கே மீண்டும் ஒரு அமைதி.
‘நான் அவன் அப்படி சொல்லுவான்னு எதிர்பார்க்கல மா.. ‘ என்றார் அவர் வருத்தமான குரலில். அவர் சொன்ன மாத்திரத்தில் அவள் எழுந்து…