மாற்றம் தருவாய் தாயே...!!
அன்பென்று தினமொருமுறையேனும் பகிர்வாய் தாயே…
பொறுமையிழவுலகில் யாம் பொறுத்தலறியேன்
படைத்தலறிந்தாயே எனை பொறுத்தலறிசெய்வாயே..

உட்டட்டும் ஊட்டட்டும் உலகம்
எனை திக்கெட்டும் திசைமாற்திணரறி செய்தறிக
கொட்டட்டும் கொட்டட்டும் உலகம்
திமிறி எட்டிடும் எட்டிடும் மடமம்…
பிழைத்தலறியேன் தாயே
எங்கும் நரையாகிய தர்மம் அறிவாய்…

உத்தமனென போக்கு உலகறிய நடக்கும்
பெருமை பெற்றறியேன் தாயே
மாறாய் இழிவையுற்றிருக்கிறேன் பாராய்…

கனலாய் மனமுருகி போன நிமிடம்
தாயே நீயாகி சரணைடைய வந்தேன்
மறவேன் மறவேன் என்றும்
இந்த மதிக்கெட்ட உலகின் மடமையை மறவேன்
காப்பாயே காளி தாயே
இந்த மதியிழந்தாரின் மதியினை காப்பாயே நீயே..

தூற்றறட்டும் உலகமென தடமேறி நான் நடவேன்
உயிர் மாசற்ற பண்பை பார்க்க
தினம் நடைவேறி செல்கின்றேன் காண்பாய்…

ஒன்றோடொன்றாய் உலகம் உருல
எனை மாறாய் ஒன்றாய் படைத்தாய் ஏனோ?
மதிக்கொண்ட நானும் மடையனாய் ஆனேன்
மகிழ்வினை கேளா தாயே…
இந்த மடையனை பாராய் நீயே..!!

அழியுது அழியுது உலகு
இங்கு பழியது சுமக்குது மனது
தூர் தூர்த்திட தூர்த்திட பாராய்
நான் அழிபெறுமுன்னேம்
உன் செவியுறு பெறுவாயோ தாயே..
உன் செவியுறு பெறுவாயோ!!!

கட்டட்டும் கட்டட்டும் உலகு
தினம் – சுற்றி திரிந்து சிரிக்கட்டும் உலகு
பட்டடும் பட்டடும் நாளும்
எங்கும் – தூரம் இல்லை என உணர்ந்திடும் உலகு…

எட்டி பறித்திட துணியார்
தினம் மாண்டுண்டு மழியும் நாளொன்று உண்டு
நான் மாண்டுண்டு மழியும் நாளொன்று உண்டு..
மாற்றங்கள் வேண்டும் மனது
மழியும் நாளுக்கு முன்னர் மாற்றமும் கண்டோ??
காணசெய்வாய் நீயே – என்
கனிவாகிய தாயே…

காலம் எண்ணி உந்தன் காலில் சரணடைவேன்..

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!