Skip to main content

Posts

Showing posts from May, 2015

எதிர்பார்ப்பும்... ஏக்கமும்...

காலையிலிருந்து அவள் அதிகமான வேலை செய்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சிறு சிரிப்பும் இல்லை. ஏன் அவ்வாறு இருக்கிறாள் என்று அவளை கேட்க அங்கு யாரும் இல்லை. வேலை செய்து முடித்துவிட்டு அவள் அந்த படுக்கை அறையில் சென்று படுத்தாள். சமையலறையில் சமைத்துவிட்டு அம்மா வந்து எதிரில் நாற்காலியில் அமர்ந்தார். அவரை பார்த்ததும் அவள் எழுந்து அமர்ந்துக்கொண்டாள். அம்மா இவளோடு பேசவில்லை. இவள் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘அம்மா…’ என்றாள். பதில் இல்லை. மீண்டும் அழுத்தமாக ‘அம்மாஆ…’ என்றாள்.
அம்மா சிடுசிடுவெனும் முகத்தோடு அவளை திரும்பி ‘என்ன’ என்றார்.
‘வீட்டை பெறுக்கிட்டேன்… சாமான விளக்கிட்டேன்… துணியெல்லாம் மடிச்சு வச்சுட்டேன்…’ என்று இழுத்தாள்.
‘என்ன சொல்ல வர்ற’ என்றார் அம்மா கடினமாக.
‘இல்லமா… பசிக்குது சாப்பிடவா?’ என்றாள் பாவமாக. அம்மா அடுத்த வார்த்தை பேசவில்லை. அவரின் முகத்தில் இருந்து கடுகடுப்பு மறைந்தது. அம்மா பட்டென பதறியவறாய் போய் சாப்பாடு போட்டு தட்டில் பிசைந்து எடுத்துக்கொண்டு வந்தார். அவர் கண்கள் சற்று கலங்கிபோயிருந்தது. அம்மாக்கொண்டு வந்த தட்டை அவள் கையில் வாங்கினாள். அம்மா தாமாகவே ஊட்டி விட…