Posts

Showing posts from August, 2015

மனதின் பார்வை...

முடிந்து போன சாலையிலே நடந்து போகிறேன்…!
என் எழுத்துக்கள் பிரிந்திருக்கும் நிமிடங்களை கோர்த்து வைத்திருக்கிறேன் சேர்ந்தபின் மீண்டும் கடப்பதற்கு..
சமூக மாற்றம் நினைக்கிறேன் என்னை அதனோடு இணைத்துக்கொண்ட சமூகத்தை எண்ணி நகைக்கிறேன்..
நிழல்களின் உருவத்தில் வெண்மை படருமா என்று வெண்ணிலாவையும் என் நிழலையும் மாறி மாறி பார்த்துவருகிறேன்..
அலைகளோடு கடல்ஓரமாய் நான்கைந்து நடை நடந்து பார்க்கிறேன்… தொட்டுவிட்டு ஓடும் கடலையோடு நான் விளையாடுகிறானா அல்லது அலை என்னோடு விளையாடுகிறதா என்று எனக்குள்ளே கேள்வி உண்டாகிறது..!
சமயங்களில் தோன்றும் வாழ்வும் அப்படிதான்… தொட்டு செல்லும் நிமிடங்களை எல்லாம் துரத்தி செல்லாமல்.. சிரித்துவைத்துவிட்டால் கடலோடு சூழாமல் – சிறு விளையாட்டாய் முடிந்துபோகுமே என்று தோன்றும்..
வாழ்க்கை பார்வை சம்பந்தமானது தான்… இருவிழி காணும் பார்வையற்று ஒருமனம் காணும் பார்வையானது..!
மனம் காணும் பார்வையை நோக்கி இருவிழி பார்வையோடு நடந்துபோகிறேன்…
முடிவுகளில் வரும் கற்பனை சுமந்துக்கொண்டு…
-தம்பி கூர்மதியன்

மாற்றம் வேண்டும்..... தெளிவாக..!

இந்த நாடே சென்ற வாரம் சுதந்திர தினத்தை கொண்டாடியது. சுதந்திரம் வாங்கிவிட்டோம் வாங்கிவிட்டோம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து நாம் பிதற்றிக்கொண்டிருக்கிறோம். வழமையாக அனைவரும் கேட்பது போல எங்கு இருக்கிறது சுதந்திரம்? இரவில் பெண் தனியாக நடந்தால் தான் சுதந்திரம். ஊழல் அழிந்தால் தான் சுதந்திரம் என்று நாம் சாராது மற்றவனை குறை சொல்வதிலே இங்கு  அனைவரின் கவனம் இருந்தது.
சிக்னலில் நிக்காமல் செல்லும் ஒருவனை காவல் துறை அதிகாரி மடக்கி பிடிக்கிறார். அதற்கு அவன் சொல்லும் பதில், ஊரில் பெரிய பெரிய தவறை செய்பவனெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சிக்னலை மதிக்கவில்லை என்னும் ஒரு சிறிய குற்றத்துக்கு பிடிக்கிறீங்களே என்கிறான். ஊரில் எல்லோரும் பெரிய தப்பு செய்கிறான் நான் சின்ன தப்பு செஞ்சுகுறேனு சொல்லுறது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். முதலில் நீ நீயாக இரு. ஒரு மனிதனாக இரு. மற்றவனிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதுவாக நீ இரு. அப்பொழுது தான் உலகு மாறும்.
ஊழல் ஒழிய வேண்டும் என்று இங்கு சொல்லும் ஒவ்வொருவரும் ஊழலுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். பெட்ரோல் பங்க்கில் நீ பெட்ரோலுக்காக கொடுக்க…

என் காதல் - காதலாகி நின்றேன்....

நாட்கள் கடந்தோடின…!
நாங்கள் இருவரும் பேசாத நாட்கள் என்று ஒன்று இல்லாமல் போனது. பயிற்சி சமயத்தில் ஆரம்பத்தில் நான் கொஞ்சம் மந்தமாக தான் இருந்தேன். விருப்பமில்லாத இடம் என்னும் காரணத்தால். ஆனால் நாட்கள் செல்ல செல்ல செயல்முறை பயிற்சிகள் தொடங்கப்பட்டது. கம்ப்யூட்டரில் கோடிங் அடிக்க வேண்டும் என்று சொன்னவுடன்- உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அந்த பழைய கோடிங் பைத்தியக்காரன் விழித்துக்கொண்டான்.
கம்ப்யூட்டரில் C, C++, Java, Cobol, VB Script, Java Script என சிலவகைகளில் எனக்கு பயிற்சி அதிகம். நான் விரும்பி படித்தவைகள் இவை. கல்லூரியில் சொல்லிக்கொடுத்ததை தாண்டி நானாக தேடி தேடி சிலவற்றை கற்றேன். இங்கு பயிற்சியில் கோடிங் செய்யவேண்டும் என்று கேட்க, நானும் ரொம்ப விருப்பமாக உட்கார்ந்தேன். அதன் பிறகு எல்லாமே ஒரு பிடிப்போடு செய்தேன். அவ்வபோது என்னவள் வந்து சொல்லுவாள், ‘ஒரு கம்பேனி உன்ன தூக்கிப்போட்டதா இருக்க கூடாது. நீ ஒரு கம்பேனிய தூக்கி போட்டதா தான் இருக்கணும்… உனக்குள்ள திறமை இருக்கு… உன்ன மத்தவங்க கேவலமா பாக்க நீ வழிகொடுக்காத’ என்று அவள் சொல்லுவாள்.
ஒரு பெண் வந்து சொல்லிவிட்டாள். உள்ளுக்குள் உத்வேகம் பி…

புதிய தளங்கள்

என் அக்காவின் மகள்கள் இருவரின் நாட்களை பதிக்கும் இடமாக இரண்டு புதிய தளங்களில் அவர்களை பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அவர்களுக்கு எதிர்காலத்தில் எழுதவேண்டும் என்னும் எண்ணம் வரும்பொழுது அவர்கள் வாழ்க்கையை தாங்கி என்னோடு அனுபவங்களை அவர்களுக்கு பரிசாக அளிக்கும் எண்ணமுண்டு. அதன் ஆரம்பமாக இன்று இரண்டு தளங்கள் தொடங்கி இருக்கிறேன்.

இனியா - http://iniyawrites.blogspot.in/

இலக்கியா - http://ilakkiyawrites.blogspot.in/

இனி. அவர்களின் வாழ்க்கையை தாங்கும் என்னுடைய அனுபவங்களை அதில் தொடர்ந்து பதிப்பேன்.

நன்றிகளுடன்,
தம்பி கூர்மதியன்

என் காதல் - என்னவளின் வீட்டில்....

அன்று ஒரு வெள்ளிக்கிழமை…
காலையில் எழுந்து வழக்கம்போல அலுவலகம் கிளம்பி வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போதே என்னவளிடமிருந்து அழைப்பு. அவளுக்கு உடம்பு முடியவில்லை, இன்று அலுவலகம் வரமாட்டேன் என்றாள். சரி என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன்.
அவளது விடுதியை கடந்தே என் அலுவலகம் போகும்படி இருந்தது. அன்று அவளது விடுதிக்கு அருகில் சென்றதும் அவளை அழைத்தேன். அவளுக்காக காத்திருக்கிறேன் பார்த்துவிட்டு அலுவலகம் செல்கிறேன் என்று சொல்லி அவளை வெளியே அழைத்தேன். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். என்ன ஆனது என்று கேட்டேன். உடம்புக்கு முடியவில்லை, ஜூரம் என்றாள். மருத்துவமனைக்கு அழைத்தேன். அவள் வர மறுத்துவிட்டாள். வேறு என்ன பண்ணவேண்டும் என்று கேட்டேன். ஊருக்கு போகலாம் என்று இருப்பதாய் சொன்னாள். முடியுமா என்று கேட்டேன். கஷ்டமா தான் இருக்கு, இருந்தாலும் போனா சரியாகிடும் என்றாள். சிறிது நேரம் யோசித்தேன். என் கையில் இருக்கும் அலைப்பேசியை எடுத்தேன், எங்கள் அலுவலக பயிற்சியாளருக்கு அழைப்பு விடுத்தேன்.
‘நித்யா… எனக்கு உடம்பு முடியலங்க… இன்னைக்கு லீவ் வேணும்…’
‘ஓகே ராம்… டேக் கேர்…’ என்று அவர் சொன்னார். நான் இணைப்ப…

என் காதல் - என்னவளோடு பயணங்கள்...!

நாட்கள் சில கடந்தோடின. எங்கள் பேச்சுக்களிடையே அவள் அவ்வபோது என்னை வெளியில் எங்கேனும் அழைத்து செல்லும் படி கேட்பாள். நான் அதை தட்டி கழித்துக்கொண்டே இருந்தேன். பின்பு ஒரு நாள் அவள் ஊருக்கு செல்லும் பொழுது நான் அவளை பேருந்து நிலையம் வரை வண்டியில் அழைத்து செல்லுகிறேன் என்று சொன்னேன். அவள் கேட்காமல் இம்முறை நானாக வந்து சொல்ல, அவள் மனதிற்குள் ஏதோ நினைத்துக்கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள். உதட்டில் ஒரு கேலி சிரிப்பு இருந்தது.
‘சரி.. மேடம் கேட்டுட்டே இருக்கீங்கனு தான் கூப்பிட்டேன். நீங்க பஸ் புடிச்சு கஷ்டபட்டு போகணும்னா போங்களேன்.. யார் தடுத்தா..’ என்று அவள் பார்வைக்கு நான் பதில் சொன்னேன். அவள் இன்னும் கேலி சிரிப்பு சிரித்தாள்.
‘நீ வரவே வேண்டாம்… நான் ஆபிஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போறேன்.. சரி கேட்டுட்டே இருக்கியே.. சும்மா ரவுண்டு போல கூட்டிட்டு போலாம்னு பாத்தா, ஓவரா பண்ணுற’ வயதான பாட்டி போல நான் புலம்பிக்கொண்டிருந்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அன்று அலுவலக நேரம் முடிந்தது. நேராக என்னை பார்த்து.
‘போலாமா?’ என்றாள்.
‘எங்க? நான்லாம் எந்த பொண்ணையும் வண்டியில ஏத்…

என் காதல் - பிள்ளையார் சுழி...!

நான் இந்த ஐடி கம்பேனியில் சேரும் ஒரு நாள் முன்னர் தான் என் அக்காவிற்கு இனியா பிறந்திருந்தாள். நான் எல்லோரோடும் சகஜமாக பழக ஆரம்பித்த பிறகு எனக்கு அங்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், என்னைப்போன்று எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் படித்து வந்திருந்தவர்களும். அவர்களை தவிர்த்து இருவர். ஒன்று அனிதா. மற்றொன்று என்னவள்.
அனிதா எதுவாக இருந்தாலும் சகஜமாக பேசி உடனுக்குடனே தன் விருப்பத்தை சொல்லும் பழக்கமுடையவள். அக்காவின் குழந்தையை பார்க்கவேண்டும் என்று அவள் கேட்டாள். அன்று வீட்டிற்கு சென்றதும் அனிதாவுடன் வீடியோ சாட்டில் குழந்தையை காண்பித்தேன். அடுத்த நாள், வழக்கம் போல இந்த கதை ஆபிஸில் ஓடிக்கொண்டிருக்க என்னவள் மட்டும் ஒரு ஓரத்தில் அமைதியாக எந்த பேச்சிலும் ஈடுபடாமல் இருந்தாள்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்து, அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் அவளை அமைதியாக்க அவளுக்கு அருகில் எனது நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துக்கொண்டேன். என்றும் இல்லாமல் படிப்பதாய் பாவலா காட்டிக்கொண்டிருந்தாள். என் தொண்டையை கரகரத்து காண்பித்தேன். அவள் கண்டுக்கொள்ளவில்லை. அவளது கம்ப்யூட்டரை லாக் செய்தேன். லாக் செய்த கம்ப்யூட்ட…

முற்றியது கம்ப்யூட்டரால் அல்ல..

காற்றில் கைகோர்த்து 
செம்மண் பாதையில் நடைபயணம்
பாலைவனமெங்கும் தண்ணீர் மயக்கம்..
வானில் இறைசுட்ட தோசை
எனை சுட்டுக்கொண்டிருக்க..
என் நிழல் என்னூடே கண்ணாம்மூச்சி ஆடுகிறது..
வெள்ளிவாசல் தேவதை விண்ணைமுட்டி வருகிறாள்..
வானத்து நட்சத்தரமாய் என் நிழல் பற்றி மலர்கிறாள்..
கண்ணை திறந்த நான்..
மெல்லிய சிரிப்போடு 
கம்ப்யூட்டரை காணாது 
என் கண்ணம்மாவையே நினைத்து கிடக்கிறேன்...
இம்முறை பைத்தியம் முற்றியது
கம்ப்யூட்டரால் இல்லை..
என் கண்ணம்மாவால்.

-தம்பி கூர்மதியன்

எதிர்கால கனவுகள்...

வெண்மேக கூந்தலோ வெண்மை நிறந்தளிரோ காணும் இமைகொட்டா கண்மிளிரும் காந்தகமோ..! சேவை இவர்சொட்டாய் – என் சுடரொளிந்த தேவதையே.!
காணும் முகமெல்லாம் நீயாய் பொய் பிதற்றலறியா நீயே வருவாயா நெகிழும் தினம் சொப்பனமே..!
அன்பே – என் அமுதே தேனே – இனி கரும்பே கொஞ்சும் வார்த்தையறியா நான் மிதமாய் கொஞ்சியதோ கண்ணம்மா என்றுனையழைத்தே..!
பூவிற் வாசமுண்டு மழை மணலுக்கு வாசமுண்டு மனிதருக்கும் வாசமுண்டு அழகே..! தேவதை வாசம் நானறியேன் அது உன் வாசமென பிதற்றலறியேன்..!
நாளை வாழ்க்கை ஒன்று நம்மை காணுகின்றேன்..! உற்றார் உறவினர் சூழ உன் கழுத்தின் என் முடிச்சு..!
பருவம் கடந்து முகப்பருக்கள் மறைந்து பெருத்த நான் இன்னும் பூரித்துபோகலாம் மகிழ்வு பெருவெள்ளம் கண்ணீர் பொறையோடி தாலி மேடையெங்கும் தண்ணீரோட்டம் கொள்ளபோகிறது..
அவனோ .. அவளோ.. எனும் பேச்சு அவர்கள் என்றாகி போகும்..! அவர்களாய் நீயும் நானும் சுண்டும் விரல் கோற்று பெருமித நடையொன்று போடுகிறோம்..!!
கனவு கலைந்தெழுகையில் மெல்லிய சிரிப்பு… தனியாய் அந்த மின்சார ரயிலில் எதிர்காலம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்..!

-தம்பி கூர்மதியன்