எதிர்கால கனவுகள்...

வெண்மேக கூந்தலோ
வெண்மை நிறந்தளிரோ
காணும் இமைகொட்டா
கண்மிளிரும் காந்தகமோ..!
சேவை இவர்சொட்டாய் – என்
சுடரொளிந்த தேவதையே.!

காணும் முகமெல்லாம்
நீயாய் பொய் பிதற்றலறியா
நீயே வருவாயா நெகிழும்
தினம் சொப்பனமே..!

அன்பே – என் அமுதே
தேனே – இனி கரும்பே
கொஞ்சும் வார்த்தையறியா
நான் மிதமாய் கொஞ்சியதோ
கண்ணம்மா என்றுனையழைத்தே..!

பூவிற் வாசமுண்டு
மழை மணலுக்கு வாசமுண்டு
மனிதருக்கும் வாசமுண்டு
அழகே..! தேவதை வாசம் நானறியேன்
அது உன் வாசமென பிதற்றலறியேன்..!

நாளை வாழ்க்கை ஒன்று
நம்மை காணுகின்றேன்..!
உற்றார் உறவினர் சூழ
உன் கழுத்தின் என் முடிச்சு..!

பருவம் கடந்து
முகப்பருக்கள் மறைந்து
பெருத்த நான் இன்னும் பூரித்துபோகலாம்
மகிழ்வு பெருவெள்ளம்
கண்ணீர் பொறையோடி
தாலி மேடையெங்கும்
தண்ணீரோட்டம் கொள்ளபோகிறது..

அவனோ .. அவளோ.. எனும் பேச்சு
அவர்கள் என்றாகி போகும்..!
அவர்களாய் நீயும் நானும்
சுண்டும் விரல் கோற்று
பெருமித நடையொன்று போடுகிறோம்..!!

கனவு கலைந்தெழுகையில்
மெல்லிய சிரிப்பு…
தனியாய் அந்த மின்சார ரயிலில்
எதிர்காலம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்..!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!