மனதின் பார்வை...

முடிந்து போன சாலையிலே
நடந்து போகிறேன்…!

என் எழுத்துக்கள்
பிரிந்திருக்கும் நிமிடங்களை
கோர்த்து வைத்திருக்கிறேன்
சேர்ந்தபின் மீண்டும் கடப்பதற்கு..

சமூக மாற்றம் நினைக்கிறேன்
என்னை அதனோடு இணைத்துக்கொண்ட
சமூகத்தை எண்ணி நகைக்கிறேன்..

நிழல்களின் உருவத்தில்
வெண்மை படருமா என்று
வெண்ணிலாவையும் என் நிழலையும்
மாறி மாறி பார்த்துவருகிறேன்..

அலைகளோடு கடல்ஓரமாய்
நான்கைந்து நடை நடந்து பார்க்கிறேன்…
தொட்டுவிட்டு ஓடும் கடலையோடு
நான் விளையாடுகிறானா
அல்லது அலை என்னோடு விளையாடுகிறதா
என்று எனக்குள்ளே கேள்வி உண்டாகிறது..!

சமயங்களில் தோன்றும்
வாழ்வும் அப்படிதான்…
தொட்டு செல்லும் நிமிடங்களை எல்லாம்
துரத்தி செல்லாமல்.. சிரித்துவைத்துவிட்டால்
கடலோடு சூழாமல் – சிறு
விளையாட்டாய் முடிந்துபோகுமே என்று தோன்றும்..

வாழ்க்கை பார்வை சம்பந்தமானது தான்…
இருவிழி காணும் பார்வையற்று
ஒருமனம் காணும் பார்வையானது..!

மனம் காணும் பார்வையை நோக்கி
இருவிழி பார்வையோடு நடந்துபோகிறேன்…

முடிவுகளில் வரும் கற்பனை சுமந்துக்கொண்டு…

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..