Skip to main content

Posts

Showing posts from October, 2015

என் காதல் - தனிமையின் ஆரம்பம்

நான் காதலை சொன்ன பிறகு பல நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை அவள். அடுத்த இரண்டு நாட்களில் அவளின் காதலை என்னிடம் சொல்லிவிட்டாள். அந்த இரண்டு நாட்களும் என்னைவிட்டு அவள் விலகவில்லை. வழமையாக இருப்பது போல் நாங்கள் இருந்தோம். அவள் காதலை சொன்னநொடியில் விண்ணில் பறப்பதாய் உணரவில்லை ஆனால் என்னுள் ஏதோ சிலிர்ப்பு உணர்ந்தேன்.
நாட்கள் கடந்தது. இந்த காதல் எங்களுக்குள் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. முன்பை போலவே தான் இருந்தோம். காதலை சொன்ன சரியான 20ம் நாள் உமா சங்கர் என்னிடம் கேட்டான். என் செயல்களில் மாற்றம் உணர்ந்தானா அல்லது அவளின் செயல்களில் மாற்றம் உணர்ந்தானா தெரியவில்லை. நான் அவளை காதலிக்கிறேனா என்று கேட்டான். நான் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆமாம் என்று சொன்னேன். எனக்கு வாழ்த்துக்கள் சொன்னான்.
அப்பொழுது எல்லோரும் என்னிடம் இத்தனை நாட்களாய் சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டனர். கேட்கும் ஒவ்வொருவரிடமும் முன்பெல்லாம் காதல் இல்லை இப்பொழுது தான் சில நாட்களாக என்று சமாதானம் சொல்லிக்கொண்டு வந்தேன். அவர்களுக்குள் என்னைப்பற்றிய சில அவதூறு பேச்சுகள் இருந்திருக்கலாம். அதுவரை என்னை அண்ணன் என்று அழைத்த அனிதா அதன் பிறகு…