Skip to main content

Posts

Showing posts from February, 2016

நெஜமாதான் சொல்றியா?

வார்த்தைகள் வசமேதுமற்ற
பார்வைகள் பேசும் நொடிகள்
கண்கள் கேட்கும் காதல் கேள்வி
"நெஜமாதான் சொல்றியா?"தனிமையில் இருவர் வழி
தயக்கமற்ற காதல் நொடி
முடிவுகளில் தோன்றும் கேள்வி
"நெஜமாதான் சொல்றியா?"பிம்பம் மறந்த கண்ணாடி துகள்
சிதறி் கிடந்த மணற்திட்டு
உரசிய கால்களை மடிமேல் தாங்கும்
நிமிடங்களில் தோன்றிய எண்ணம்
"நெஜமாதான் சொன்னானோ?"அமைதியான ஒரு பயணம்
இடைவெளியற்ற விரல்களில் விரல் ஊடல்
காமமற்ற காதலில் தோன்றும் எண்ணம்
"நெஜமாதான் சொன்னானோ?"ஊர் துரத்திப்போன நொடிகள்
உறவு வெறுத்துப்போன சமயம்
துன்பம் தொடர்ந்து வந்த நேரம்
விதி விட்டவழி ஓட்டம்
தோற்று சாய்கையில்
எமை ஏந்திய தோள் கொண்டவன்
இனி
காலங்கள் ஒன்றாக கடப்போமென வாசகம் காதுகளில்
பழைய அசரீரியாய் ஒலித்துச்செல்ல
கண்ணீர் துடைத்த கையோடு தோன்றிய எண்ணம்
"அவன் நெசமா தான்டா சொன்னான்"-தம்பி கூர்மதியன்

சிரிப்பின் காத்திருப்பு

ஒரு கடற்கரை ஓரம்
காலடி பதியா தூரம்
கடந்து சென்றிட வேண்டும்..உரசும் கைகள் மீண்டும்
இணைந்து கடந்திட வேண்டும்
காலம் கழிப்போமடி..நீளும் சாலைகளோடு
நான் நீந்திட வேண்டும்
கடற்பரப்பின் சாலைகள்
அங்கு முளைத்தெழும் தோரணை பாரடி..மேகத்தளங்களில் தினம்
நான் நடந்திட வேண்டும்
மேகத்தின் பொன்விரிப்பு
இறுகிக்கொள்ளும் அழகை பாரடி..இருவிழி மூடிய சொப்பன கூறுகள்
தினம் தினம் ஆயிரம் ஆசைகளை
நிரப்பி நிதம்பி கிடக்கும்
இன்ப சிரிப்பு முகத்தில் காணடி..அங்கே ஓர் விழி
இங்கே மறு விழி
இமையாது நொடிகளில்
இசைவீணை வாசிக்குதடி...சாலை கைகோர்ப்பு
பேருந்தில் அருகருகே இருக்கை
நகர்த்த முடியா நொடி முட்கள்
கடந்து போன நேரங்களும்
கடத்த கூடிய நிமிடங்களும்
நினைவுகளில் ரீங்காரம் இட்டு செல்ல
கண்கள் குளமாக்கும்
உதட்டு சிரிப்பின் காத்திருப்பு..!-தம்பி கூர்மதியன்