சிரிப்பின் காத்திருப்பு

ஒரு கடற்கரை ஓரம்
காலடி பதியா தூரம்
கடந்து சென்றிட வேண்டும்..

உரசும் கைகள் மீண்டும்
இணைந்து கடந்திட வேண்டும்
காலம் கழிப்போமடி..

நீளும் சாலைகளோடு
நான் நீந்திட வேண்டும்
கடற்பரப்பின் சாலைகள்
அங்கு முளைத்தெழும் தோரணை பாரடி..

மேகத்தளங்களில் தினம்
நான் நடந்திட வேண்டும்
மேகத்தின் பொன்விரிப்பு
இறுகிக்கொள்ளும் அழகை பாரடி..

இருவிழி மூடிய சொப்பன கூறுகள்
தினம் தினம் ஆயிரம் ஆசைகளை
நிரப்பி நிதம்பி கிடக்கும்
இன்ப சிரிப்பு முகத்தில் காணடி..

அங்கே ஓர் விழி
இங்கே மறு விழி
இமையாது நொடிகளில்
இசைவீணை வாசிக்குதடி...

சாலை கைகோர்ப்பு
பேருந்தில் அருகருகே இருக்கை
நகர்த்த முடியா நொடி முட்கள்
கடந்து போன நேரங்களும்
கடத்த கூடிய நிமிடங்களும்
நினைவுகளில் ரீங்காரம் இட்டு செல்ல
கண்கள் குளமாக்கும்
உதட்டு சிரிப்பின் காத்திருப்பு..!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!