நெஜமாதான் சொல்றியா?

வார்த்தைகள் வசமேதுமற்ற
பார்வைகள் பேசும் நொடிகள்
கண்கள் கேட்கும் காதல் கேள்வி
"நெஜமாதான் சொல்றியா?"

தனிமையில் இருவர் வழி
தயக்கமற்ற காதல் நொடி
முடிவுகளில் தோன்றும் கேள்வி
"நெஜமாதான் சொல்றியா?"

பிம்பம் மறந்த கண்ணாடி துகள்
சிதறி் கிடந்த மணற்திட்டு
உரசிய கால்களை மடிமேல் தாங்கும்
நிமிடங்களில் தோன்றிய எண்ணம்
"நெஜமாதான் சொன்னானோ?"

அமைதியான ஒரு பயணம்
இடைவெளியற்ற விரல்களில் விரல் ஊடல்
காமமற்ற காதலில் தோன்றும் எண்ணம்
"நெஜமாதான் சொன்னானோ?"

ஊர் துரத்திப்போன நொடிகள்
உறவு வெறுத்துப்போன சமயம்
துன்பம் தொடர்ந்து வந்த நேரம்
விதி விட்டவழி ஓட்டம்
தோற்று சாய்கையில்
எமை ஏந்திய தோள் கொண்டவன்
இனி
காலங்கள் ஒன்றாக கடப்போமென வாசகம் காதுகளில்
பழைய அசரீரியாய் ஒலித்துச்செல்ல
கண்ணீர் துடைத்த கையோடு தோன்றிய எண்ணம்
"அவன் நெசமா தான்டா சொன்னான்"

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி