Posts

Showing posts from April, 2016

பெண்மை போற்றுதும்

இரவுகள் விழித்துக்கொள்ளும்
ஒரு சலன சத்தம்
அங்கு கிழித்தோடும் வழியெல்லாம்
காதுகளில் அலறிக்கொண்டிருக்கிறது..!

ஒரு சமயம் ஆக்ரோஷமாக
மறுசமயம் பயம்கொண்டதாக
சிலசமயம் நடுங்கி
அங்கே ஒலியின் அரங்கேற்றம் நடக்கிறது..!

சலங்கையில்லா ஒரு நாட்டியமாக
கண்கள் இல்லா பார்வையாளரோடு
உணர்வுகள் இல்லா வாத்தியங்கள் சேர
ஒரு அகோர தாண்டவம் ஆடிவருகுது..!

கண்கள் பரிபோன பின்பு
கலை காண ஆசையொன்று
அடிவயிற்றை பிசைந்துக்கொண்டு
பீறி வருகுது..!

தேடலும் ஓடலும் முடிவறுந்து
அங்கே மங்கிய ஒலியை பிடித்துக்கொண்டு
ஆற்உயர ஒரு அடிமரம்
துயர்பிடித்து ஏறி வருகுது..

சத்தங்கள் மடிந்த ஒரு ஓசை நிலவரம்
ஒலியிழந்து அங்கு ஒடிந்துபோன சோகமென்ன?
கண்ணிழந்த ஊரெங்கும் ஒரே கவலைபேச்சு...

உமிழ்நீர் உரமென வாங்கிய எச்சில் உலகம்
மாறாய் என்ன எதிர்பார்ப்பு வேண்டும்...
துடைத்து தூர எரிந்து
உன்செயல் பார்த்திட நடந்திடு கண்ணே..!!!

நரிகளும் நாய்களும் மேயட்டும்
உன் நரைத்துயர் ஒரு முறை மீறட்டும்
கடைசி எம்முயிர் போகட்டும்
தினம் விழுந்தது போதும் எழுந்திடு கண்மணி..!

பெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்
ஒலி மங்கிய பின்னும் பெண்மை போற்றுதும்
அண்மை உணர்தினினும் பெண்மை போற…

முடிவல்ல என புரியும் மனம் வேண்டும்...!

சிவன் சிவமாகிய கதையுண்டு..
மனதில் உருவம்க்கொண்ட சிறு உணர்வுண்டு.!
காலங்கள் தேடும் ரௌத்திரம்
அவன் கண்களில் இருப்பதாய் கதையுண்டு...
வாழ்க்கையை தேடும் பயணங்களில்
சமயம் அவன் எண்ணம் படரும் களமுண்டு..

அத்தனைக்கும் ஒரு முடிவுண்டு
அதை அடித்தொழிக்கும் ஒரு வழியும் உண்டு..!

காலம் கடந்து சுற்றும் காலசக்கரம்
தினம் காலை பிடித்து தொங்குது தொங்குது...!

கட்டுக்குள் முடிவொன்று பிறக்கும்
அந்த முடிவுக்கும் நாளை விடியல்கள் பிறக்கும்
முடிவுகள் உண்மையில் முடிவல்ல- அவை
எழுந்திடும் இன்னொரு தொடக்கத்தின் விடியல்...

மனம் அங்கொன்றும் இங்கொன்றும் பறக்கும்
புதிதாய் - கிடைத்தை எல்லாம் கூத்தாடி மகிழும்
நாளுக்கு பின்னர் வெறுக்கும்
அங்கு கிடைத்தது எல்லாம் அதே, மனதும் தான் வெறுக்கும்...

புதுமைகள் தேடும் உலகம்
இங்கு அழிந்தது எல்லாம் மீண்டும் புதிதாய் பிறக்கும்..

முடிவுகள் ஒன்றொன்றாய் மலரும்
மலரும் முடிவுகள் எல்லாம் மாற்றாரின் விடியல்.
புரியும் மனமிங்கு தாராய்
உரக்க மனதில் ஒலிக்கும் ஒலியை பூட்ட
புரியும் மனமிங்கு தாராய்...

மனம் நினைக்கும் வாழ்வை பற்றும்
வலிமையிங்கு தாராய் - அற்று
அவ்வலியை தாங்கும் மனமிங்கு தாராய்...!

முடிவ…

மெச்சூர்டு காதல்...

ராகுலுக்கு அன்று அங்கு செல்லவே விருப்பமில்லை. அன்று அவனது உயிருக்கு உயிரான நண்பனின் திருமணம். தனது மற்ற நண்பர்களின் வற்புறுத்தலால் அவன் கிளம்பினான். அந்த மண்டபத்திற்கு செல்லும் வழியெல்லாம் அவன் மனம் அலைப்பாய்ந்துக்கொண்டே இருந்தது. அவன் அந்த மண்டபத்திற்குள் நுழைந்து நேராக மணமேடைக்கு சென்றான். அவன் வருவதற்கு தாமதமானதை மனதினுள் முனகிக்கொண்டு அவனை சீக்கிரம் வரச்சொல்லி தன் அருகிலே நிறுத்திக்கொண்டான் மாப்பிள்ளை நண்பன்.
‘என்ன உனக்கு கிழிக்கிற வேல? நீ தான் என் கூடவே நிக்கணும்னு சொல்லிதானே இருந்தேன்’ என்று ராகுலிடம் கடிந்துக்கொண்டே வருபவர்களை பார்த்து புன்னகை செய்துக்கொண்டிருந்தான். ராகுல் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்தான். 
‘என்ன... அவ வந்தா என்ன? நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சுருந்தா அவள நான் கூப்பிட்டிருக்க கூட மாட்டேன்டா... ஏன் இப்படி பண்ணுற?’ நண்பன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே ராகுலின் கண்கள் அந்த மண்டபத்தில் இருக்கும் ஆட்களை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. அவன் மணமேடையை விட்டு கீழே இறங்க முற்பட்ட சமயம் அவனின் கைகளை இறுக பிடித்து இங்கேயே இருக்கும்படி அழுத்தினான் அவன் நண்…