முடிவல்ல என புரியும் மனம் வேண்டும்...!

சிவன் சிவமாகிய கதையுண்டு..
மனதில் உருவம்க்கொண்ட சிறு உணர்வுண்டு.!
காலங்கள் தேடும் ரௌத்திரம்
அவன் கண்களில் இருப்பதாய் கதையுண்டு...
வாழ்க்கையை தேடும் பயணங்களில்
சமயம் அவன் எண்ணம் படரும் களமுண்டு..

அத்தனைக்கும் ஒரு முடிவுண்டு
அதை அடித்தொழிக்கும் ஒரு வழியும் உண்டு..!

காலம் கடந்து சுற்றும் காலசக்கரம்
தினம் காலை பிடித்து தொங்குது தொங்குது...!

கட்டுக்குள் முடிவொன்று பிறக்கும்
அந்த முடிவுக்கும் நாளை விடியல்கள் பிறக்கும்
முடிவுகள் உண்மையில் முடிவல்ல- அவை
எழுந்திடும் இன்னொரு தொடக்கத்தின் விடியல்...

மனம் அங்கொன்றும் இங்கொன்றும் பறக்கும்
புதிதாய் - கிடைத்தை எல்லாம் கூத்தாடி மகிழும்
நாளுக்கு பின்னர் வெறுக்கும்
அங்கு கிடைத்தது எல்லாம் அதே, மனதும் தான் வெறுக்கும்...

புதுமைகள் தேடும் உலகம்
இங்கு அழிந்தது எல்லாம் மீண்டும் புதிதாய் பிறக்கும்..

முடிவுகள் ஒன்றொன்றாய் மலரும்
மலரும் முடிவுகள் எல்லாம் மாற்றாரின் விடியல்.
புரியும் மனமிங்கு தாராய்
உரக்க மனதில் ஒலிக்கும் ஒலியை பூட்ட
புரியும் மனமிங்கு தாராய்...

மனம் நினைக்கும் வாழ்வை பற்றும்
வலிமையிங்கு தாராய் - அற்று
அவ்வலியை தாங்கும் மனமிங்கு தாராய்...!

முடிவல்ல முடிவல்ல இது முடிவல்ல...
இங்கு எதுவும் எதிலும் முடிவல்ல..!
நிகழ்வுகள் ஆயிரம் மாறும்
தினம் காலையில் ஆதவன் உதித்து தான் தீரும்.
வாழ்க்கைக்கு கட்டாயம் இல்லை
நாம் வாழும் வாழ்க்கையே புரியாதபொழுது
வாழ்க்கைக்கு அவமானங்கள் இல்லை.

குடும்பம் ஒரு கட்டமைப்பு
வாழ்க்கை லட்சியம் ஒரு கட்டமைப்பு
நிர்பந்தம், பாசம், எதிர்பார்ப்பு எல்லாம்
சுற்றி திரியும் ஒரு கயிறு...
இறுக பிடித்த கயிற்றில்
இறு முனையும் யார் பிடி என
குழம்பும் மனமிங்கு பாரடா..

எனக்காக நானிங்கு உண்டு
இந்த வாழ்க்கையே ஒரு கனவுலகம் தானே
இனிய இனிக்கை வேண்டும்
தினம் உவர்ப்பை உமிழ்ந்து இனிக்கை வேண்டும்.
எல்லாம் உரைக்கும் மனமிங்கு வேண்டும்
தினம் என்னை உணர்த்தும் மனமே வேண்டும்...!!!

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி