பெண்மை போற்றுதும்

இரவுகள் விழித்துக்கொள்ளும்
ஒரு சலன சத்தம்
அங்கு கிழித்தோடும் வழியெல்லாம்
காதுகளில் அலறிக்கொண்டிருக்கிறது..!

ஒரு சமயம் ஆக்ரோஷமாக
மறுசமயம் பயம்கொண்டதாக
சிலசமயம் நடுங்கி
அங்கே ஒலியின் அரங்கேற்றம் நடக்கிறது..!

சலங்கையில்லா ஒரு நாட்டியமாக
கண்கள் இல்லா பார்வையாளரோடு
உணர்வுகள் இல்லா வாத்தியங்கள் சேர
ஒரு அகோர தாண்டவம் ஆடிவருகுது..!

கண்கள் பரிபோன பின்பு
கலை காண ஆசையொன்று
அடிவயிற்றை பிசைந்துக்கொண்டு
பீறி வருகுது..!

தேடலும் ஓடலும் முடிவறுந்து
அங்கே மங்கிய ஒலியை பிடித்துக்கொண்டு
ஆற்உயர ஒரு அடிமரம்
துயர்பிடித்து ஏறி வருகுது..

சத்தங்கள் மடிந்த ஒரு ஓசை நிலவரம்
ஒலியிழந்து அங்கு ஒடிந்துபோன சோகமென்ன?
கண்ணிழந்த ஊரெங்கும் ஒரே கவலைபேச்சு...

உமிழ்நீர் உரமென வாங்கிய எச்சில் உலகம்
மாறாய் என்ன எதிர்பார்ப்பு வேண்டும்...
துடைத்து தூர எரிந்து
உன்செயல் பார்த்திட நடந்திடு கண்ணே..!!!

நரிகளும் நாய்களும் மேயட்டும்
உன் நரைத்துயர் ஒரு முறை மீறட்டும்
கடைசி எம்முயிர் போகட்டும்
தினம் விழுந்தது போதும் எழுந்திடு கண்மணி..!

பெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்
ஒலி மங்கிய பின்னும் பெண்மை போற்றுதும்
அண்மை உணர்தினினும் பெண்மை போற்றுதும்
சிலர் அரியார் மனதிலும் விதைப்போம் நெஞ்சம்
பெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்..!!!

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!