Posts

Showing posts from July, 2016

இராமசாமி அண்ணன்...

எங்கள் ஊரில் எங்கள் தெரு எப்பொழுதும் சீராகவே தான் இருக்கும். வரிசையாக வீடுகள் இருக்கும். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் சீரான இடைவெளி இருக்கும். அது ஒரு நீண்ட தெரு. தெருவின் ஒரு முடிவில் ஒரு பெரிய குளம் இருந்தது. மறுபுறம் சிவன் கோவில் ஒன்று இருந்தது.
சிவன் கோவிலின் சாவி எப்பொழுதும் அந்த கோவில் பக்கத்திலே இருக்கும் கண்ணு தெரியாத தாத்தாவிடம் தான் இருக்கும். காலையில் ஒரு ஐயர் சைக்கிளில் வந்து சாவியை வாங்கி, கோவிலை திறந்து பூஜை செய்வார். மாலையில் வந்து ஒருமுறை பூஜை செய்வார். எங்கள் தெருவில் இருக்கும் சிலர், கோவிலை சுற்றி இருக்கும் இடத்தில் மிளகாயை காயபோட்டு விட்டு செல்லுவர். நாங்கள் கோவில் சுவரில் ஏறிக்கொண்டு புளியங்காய் அடித்து தின்றுக்கொண்டிருப்போம். ஏனோ என்றும் நான் அடிக்கும் கல்லில் மட்டும் ஒரு புளியங்காயும் விழாது. அப்பொழுதெல்லாம் இராமசாமி அண்ணனின் தம்பி சிவநேசன் தான் எனக்கும் புளியங்காய் தருவான். ஆனால் அவனோடு சேரக்கூடாது என்று அம்மா சொல்வதால் புளியங்காயை வாங்கிக்கொள்வதோடே எங்கள் சிநேகம் முடிந்துவிட்டது.
அம்மா ஏன் சிவநேசனிடம் சேரக்கூடாது என்று சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது.…

கருமையழகு

கருமையிற் கருவுடல் கருஞ்சேரும் கற்கடவுள்!
பாலும் தேனும் கொஞ்சம் சந்தகம் பூசி பூ சொரிந்து நூலாடை அணியப்பெற்று அழகியல் பார்வையின் பதிகம் பெறுகிறாள்.
அப்பெண்ணை, இது மேட்டுக்குடி நீ தீட்டு தடியாள் கருவண்டு நிறத்தாள் அழகில்லை என வெறுத்தவன் அவன். அன்று, அந்த கருமை கற்கடவுளை குறவ வள்ளியை அலங்கறித்து நிற்கையில் ஆயிரம் புன்னகை மனதினுள் ஆயிரம் பூரிப்பு உடம்பினில் பார்த்து.. லயித்து.. கிடந்து.. சிரித்து.. சொல்கிறான், ‘அழகிய பதுமையவள்’
கல்லுக்கும் உண்டோ அழகு அக் கருமை பெண்ணுக்கு ஏனோ இல்லை அழகு நிறத்தில் இல்லையடா மடையா அழகு குடியில் இல்லையடா மடையா அவள் மனதில் உள்ளதடா!! லயித்து நின்ற செவிடன் காதுகளில் தூரத்து புரட்சி சொற்கள் எப்படி கேட்கும். அதுவும் ஆஹாகாரம் பாடும் மந்தைகள் நடுவே..
கருமையழகை பாடிக்கொண்டான் மாடு மேய்த்துகொண்டே! அவன் மாட்டுக்கு சொல்லிக்கொண்டே!!
கருமையழகை பாடிக்கொண்டான்…!
-தம்பி கூர்மதியன்

வழிவகையற்றாதல்

அவன் அமைதியாக வீட்டின் மாடியில் உலா வந்துக்கொண்டிருந்தான். அவனின் அலைப்பேசி மணி அவ்வபோது ஒலித்து ஒலித்து அடங்கியது. அவன் அதை பொருட்படுத்தாமல் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தான். திடீரென ஏதோ முடிவு எடுத்தவனாய் திரும்பினான். அவனின் அலைப்பேசி மீண்டும் ஒலித்தது. எடுத்து பேசினான்.
‘ஹலோ..’ என்றான்.
‘ஹப்பா.. என்னங்க.. எவ்வளவு நேரம் ஃபோன் எடுக்க..’
‘அதான் எடுத்துட்டேன்ல. சொல்லு..’ என்றான் மிடுக்காக.
‘என்ன சொல்லு. வரலயா? இன்னைக்கு டாக்டர் வர சொன்னாங்கல…’ என்று அவள் கேட்க அவன் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான்.
‘என்னங்க… இருக்கீங்களா?’ என்றாள் இம்முறை அழுத்தமாக.
‘ம்ம்…’
‘என்ன கிளம்பிட்டீங்களா?’
‘இல்ல… நீ வீட்டுக்கு வா..’
‘ஏன்.. என்ன ஆச்சு..?’
‘நீ வீட்டுக்கு வாயேன்..’
‘ஏங்க.. டாக்டர்கிட்ட..’ என்று அவள் இழுக்கும்பொழுதே அவன் தடுத்தான்.
‘நான் மதியமே போயிட்டு வந்துட்டேன். மதியமே போயிட்டு வந்துட்டேன். என்னால உனக்கு ஒரு குழந்தைய தர முடியாதுனு சொல்லிட்டாங்க… போதுமா? நான் அதுக்கு லாயக்கி இல்லனு சொல்லிட்டாங்க போதுமா…’ அவன் அழுகை ஆத்திரம் அடைத்தது. கண்ணீர் கசிந்தது. வார்த்தை தடுப்பட்டது. ‘இன்னும் என்ன கேட்கணும்… …

எதிர் கேள்விகள் வேண்டும்

சிறைவிட்ட ஒரு கூடு மனம் விட்டு பறக்க மறுக்கிறது. வீசிக்கொள்ளும் காற்று ஏனோ வீசாமலிருக்க காரணம் தேடுகிறது.!
கற்போறை உலகம் நேசும் பொன் பெற்போறை ஊரும் பேசும் என நாளும் தினமும் திண்கழிப்பதா?
வீண்வாதம் ஏனோ வேண்டாம் விடுதலையும் ஏனோ வேண்டாம் உரிமை குரலும் வர மறுப்பதேன்?
வேண்டுவதை கேட்கா உலகு வெந்துனையும் நெஞ்சுரமுமற்ற கூடுகள் கூட்டம் பறந்து திரியுதே!
கொச்சை வழிந்து நிரையுதே இதில் கொழிக்கும் எச்சை உலகமோ? எதிர்வற்ற பேடிசமூகம் நிறைந்து நிற்கும் உலகமோ? வேண்டாம் வேண்டாம் இந்த மாண்பிலா போக்கு தினம் கேள்விகள் கேட்கும் மாண்புகள் வேண்டும்!!
திட்ட வீதியில் இறங்கும் போதினிலே தினம் கேள்விகள் வேண்டும் மனதினிலே இது சரியோ தவறோ போட்டியிலே தினம் தவறை எதிர்த்து கூவிடடா..
எச்சம் மீளட்டும் உலகு உனை சுற்றும் நாற்றத்தை விரட்டு உலகை மிரட்டும் நரகத்தை எதிர்கேள்விகள் கேட்டு பழகு!
போராடிடுவோம் இந்த பாரினிலே – தினம் போராடிடுவோம் இந்த பாரினிலே நித்தம் உரிமையை தேடி என்றும் அந்த அநீதியை எதிர்த்து என்றும் அந்த தவறை மிதித்து என்றும் எதிர் கேள்விகள் கேட்டு போராடிடுவோம்…!

-தம்பி கூர்மதியன்

அப்பாவின் கையிறுக்கம்

அந்த அறையின் கதவுகள் மெல்ல திறக்கப்பட்டது. காற்றின் சத்தம் அங்கு அதிகமாக இருந்தது. அடர்மரங்கள் சுற்றி இருந்த அவன் வீட்டில் சுழற்காற்று வீசும் சத்தம் கேட்கதான் செய்தது. பக்கத்திலிருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு கிளை சரிந்து விழுந்திருக்க வேண்டும். சர்றென்று சுவற்றை உரசிக்கொண்டே தொப்பென்று ஏதோ விழுந்த சத்தம் அங்கு கேட்டது.
அவன் படுக்கையிலிருந்து அவசர அவசரமாக எழுந்து லைட்டை ஆன் செய்துவிட்டான். தன் அறையின் கதவை நன்றாக தாழிட்டு கொள்கிறான். டிவியை ஆன் செய்து கொஞ்சம் சத்தம் அதிகமாக கேட்டான். அவன் வீட்டில் அன்று யாரும் இல்லை. தனிமையில், பலமான காற்று, மரங்களில் பிதறல் சத்தங்கள் என அவன் கொஞ்சம் பீதியடைந்திருந்தான். டிவியை இயக்கி தன்னருகில் யாரோ இருக்கும் பிம்பத்தை அவன் உருவாக்கிக்கொள்ள நினைத்தான்.
ஒவ்வொரு சானலாக அவன் மாற்றிக்கொண்டே வருகையில் கவுண்டமணி காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு சானலில் வைத்தான். அவரின் நடிப்பை பார்த்து சூழல் மறந்து வாய்விட்டு அவன் சிரித்துக்கொண்டிருந்த சமயம் சட்டென மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. அவனது பழைய பீதி மீண்டும் குடிக்கொண்டது. தன் அலைப்பேசியை எடுத்து…