எதிர் கேள்விகள் வேண்டும்

சிறைவிட்ட ஒரு கூடு
மனம் விட்டு பறக்க மறுக்கிறது.
வீசிக்கொள்ளும் காற்று ஏனோ
வீசாமலிருக்க காரணம் தேடுகிறது.!

கற்போறை உலகம் நேசும்
பொன் பெற்போறை ஊரும் பேசும்
என நாளும் தினமும் திண்கழிப்பதா?

வீண்வாதம் ஏனோ வேண்டாம்
விடுதலையும் ஏனோ வேண்டாம்
உரிமை குரலும் வர மறுப்பதேன்?

வேண்டுவதை கேட்கா உலகு
வெந்துனையும் நெஞ்சுரமுமற்ற
கூடுகள் கூட்டம் பறந்து திரியுதே!

கொச்சை வழிந்து நிரையுதே
இதில் கொழிக்கும் எச்சை உலகமோ?
எதிர்வற்ற பேடிசமூகம்
நிறைந்து நிற்கும் உலகமோ?
வேண்டாம் வேண்டாம் இந்த மாண்பிலா போக்கு
தினம் கேள்விகள் கேட்கும் மாண்புகள் வேண்டும்!!

திட்ட வீதியில் இறங்கும் போதினிலே
தினம் கேள்விகள் வேண்டும் மனதினிலே
இது சரியோ தவறோ போட்டியிலே
தினம் தவறை எதிர்த்து கூவிடடா..

எச்சம் மீளட்டும் உலகு
உனை சுற்றும் நாற்றத்தை விரட்டு
உலகை மிரட்டும் நரகத்தை எதிர்கேள்விகள் கேட்டு பழகு!

போராடிடுவோம் இந்த பாரினிலே – தினம்
போராடிடுவோம் இந்த பாரினிலே
நித்தம் உரிமையை தேடி என்றும்
அந்த அநீதியை எதிர்த்து என்றும்
அந்த தவறை மிதித்து என்றும்
எதிர் கேள்விகள் கேட்டு போராடிடுவோம்…!


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!