கருமையழகு

கருமையிற் கருவுடல்
கருஞ்சேரும் கற்கடவுள்!

பாலும் தேனும்
கொஞ்சம் சந்தகம் பூசி
பூ சொரிந்து
நூலாடை அணியப்பெற்று
அழகியல் பார்வையின் பதிகம் பெறுகிறாள்.

அப்பெண்ணை,
இது மேட்டுக்குடி
நீ தீட்டு தடியாள்
கருவண்டு நிறத்தாள்
அழகில்லை என வெறுத்தவன் அவன்.
அன்று,
அந்த கருமை கற்கடவுளை
குறவ வள்ளியை
அலங்கறித்து நிற்கையில்
ஆயிரம் புன்னகை மனதினுள்
ஆயிரம் பூரிப்பு உடம்பினில்
பார்த்து.. லயித்து.. கிடந்து.. சிரித்து..
சொல்கிறான்,
‘அழகிய பதுமையவள்’

கல்லுக்கும் உண்டோ அழகு
அக் கருமை பெண்ணுக்கு ஏனோ இல்லை
அழகு நிறத்தில் இல்லையடா மடையா
அழகு குடியில் இல்லையடா மடையா
அவள் மனதில் உள்ளதடா!!
லயித்து நின்ற செவிடன் காதுகளில்
தூரத்து புரட்சி சொற்கள் எப்படி கேட்கும்.
அதுவும் ஆஹாகாரம் பாடும் மந்தைகள் நடுவே..

கருமையழகை பாடிக்கொண்டான்
மாடு மேய்த்துகொண்டே!
அவன் மாட்டுக்கு சொல்லிக்கொண்டே!!

கருமையழகை பாடிக்கொண்டான்…!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..