Posts

Showing posts from August, 2016

சா'தீ' வெறி

’அவன் சாதி என்ன நம்ம சாதி என்ன… அது….’ என்று ஒரு முறை இழுத்துவிட்டு யோசித்துக்கொண்டே  ’அதெல்லாம் சரி வராது. அத்துவுடுங்க…’ என்றார் சின்னசாமி.
‘ஐயா… சின்ன பசங்க…’ என்று இழுத்தார் பெருவுடத்தான்.
‘அதான்.. அதான் நானும் சொல்லுறேன். சின்ன பசங்கல.. எது சரி எது தப்புனு தெரியாது. நாம தானே சொல்லணும்’
‘ஐயா கரு வேற உருவாகிடுச்சு..’ என்று பெருவுடத்தான் சொன்னதும் சின்னசாமி அதிர்ந்தார். முதுகை சொரிந்தார். யோசித்தார். தலையை ஆட்டினார்.
‘ஒண்ணுமில்ல… அழிச்சிரலாம். இது… அந்த அண்ட சாதி பயக ரத்தமும் நம்ம ரத்தமும் ஒண்ணு சேந்தா எப்படி இருக்கும். சொல்லு பாக்குவோம்.. இல்ல அந்த புள்ள நல்லா தான் இருக்குமா என்ன… இல்ல பெருவுட.. அழிச்சிடு.. அது தான் சரி…’
‘ஐயா….’ என்று இழுத்தார்.
‘அழிக்கிற. அப்பரம் அத்துவுடுற… இல்ல.. மொத்த குடும்பத்தையும் நான் அழிச்சுருவேன். என் சாதிய அசிங்கபடுத்துற எந்த நாயும் எனக்கு ஒண்ணு தான். அது என் சாதியிலயே கெடந்தாலும்’ கோபமாக சொல்லிவிட்டு சின்னசாமி விருட் விருட்டென வீட்டுனுள் நுழைந்து போனார்.
அவரின் மகன் தோட்டத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் ஆசைப்பட்டான் என்று புல்லட் வண்டி வாங்கி கொடுத்தி…

காதல் காத்திருப்பு

அந்த கானகத்தின் நடுவே அன்னத்தாமரை போல அவள் வீற்றிருந்தாள். ஆகாய தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்திருந்த குளத்தின் ஓரத்தில் உட்கார்ந்து ஒரு கையை குளத்தில் இட்டு தண்ணீரை எடுத்து எடுத்து விட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவளது பார்வை தூரத்து மரங்களின் நடுவே இருந்தது. அந்த இடமே சுற்றி மரங்களால் சூழப்பட்டிருந்தது. இலைகள் செழுமையின் எடுத்துக்காட்டாக மின்னி ஆடிக்கொண்டிருந்தன. கிளிகளுக்குள் காதல் பேச்சுக்கள் அந்த கானத்தில் அங்குமிங்கும் கேட்டுக்கொண்டே இருந்தன. ஆண் கிளி பெண் கிளியை வசம் செய்ய துறத்தும் போல இருந்தன. இலைகள் சில உதிர்ந்தன. கீச்சுகள் அதிகமாயின.
மெதுவாக எழுந்தாள். சுற்றி அந்த இடத்தை பார்த்தாள். மெதுவாக அந்த குளத்தின் ஓரத்திலே நடந்தாள். ஒரு சுற்றில் குளத்தில் அருகே பொடிசு கூண்டில் இருந்தது. அதன் அருகே உட்கார்ந்தாள். கூண்டிலில் கையை மெதுவாக விட்டாள். ஒரு சங்கு மணி மாலையை எடுத்து பார்த்தாள். மெல்லியதாய் சிரித்தாள்.
நினைவுகள் புரண்டன…
‘கண்ணே… உனக்காக நான் தொடுத்து வந்த மாலை..’ அவன் இடப்பக்கம் இடுப்பில் சொருகியிருந்த சங்கு மாலையை எடுத்து நீட்டினான். அவள் அவனை பார்க்கவில்லை. வெட்கம்க…

ஒத்துழையாமை..

’பெரிய புள்ள இன்னைக்கு ஆட்டம் வரலயா..’ கேட்டார் ரங்கநாதர்.
‘அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்…’ சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்தார் சுந்தர சுவாமிகள். சுந்தர சுவாமிகளின் மகன் அவரை பிடித்துத்தொங்கிக்கொண்டே வந்தான்.
‘அப்பா.. அப்பா… நானும் வருகிறேன்பா.. என்னையும் அழைத்து செல்லுங்கள் பா..’ சொல்லிக்கொண்டே வந்தான்.
ரங்கநாதர் அவனை பார்த்து. ‘கண்ணா.. .சின்ன பசங்கலாம் வரக்கூடாது. பயம் வரும். இரவு நேரத்தில் கெட்ட கனவுகள் வரும். பெண்கள் கூட கிடையாது. அம்மாவும் வீட்டில் தானே இருக்கிறார்கள். அமைதியாக இருக்கவேண்டும்..’ என்றார் அமைதியாக. சுந்தர சுவாமிகள் மகன் தலையை தொங்கலில் இட்டு ஓரமாக நின்றான் அமைதியாக.
’நீங்கள் செல்லுங்கள் ரங்கா… இவனை இப்படி விட்டு வர எனக்கு மனமில்லை..’ சுந்தர சுவாமிகள் வருத்ததுடன் சொன்னார். ரங்கா பாவமாக இருவரையும் பார்த்தார். மகன் சட்டென சிரித்தான்.
‘நீங்கள் செல்லுங்கள் அப்பா. எனக்கு வருத்தமில்லை. ஆனால் நீங்கள் வந்த பிறகு எனக்கு என்ன நடந்தது என்று விவரிக்க வேண்டும்’ அன்பு கட்டளை இட்டான். சுந்தர சுவாமிகள் ஒருமுறை அவனை பார்த்தார். பிறகு அவன் தலையை கோதி கொடுத்துவிட்டு வேகமாக …

ருத்ர ஆட்டம்

ஒற்றை முழங்கு - உர்ராம் பறையின் அடிப்பெருக்கு – டரடரடர டரக் டரக் பாதமடங்கா பாறையில் நாட்டிய ருத்ரம் வேக காலங்களின் விசித்திரங்கள் கால்களின் போக்கின் ஒரு காட்டுவாசி..!!!!
டமரு டமுரு சத்தம் டடங்கு டடங்கு டடங்கு.. அடங்காது.. சலங்கை எழுப்பும் ஒரு சத்தம் ஜல் ஜல் ஜல்… முடியாது..
எரியும் பிணமிடை கால்களும் உடன் எரியும் நாட்டிய நடனத்தின் ஒரு உயிர் அரங்கு அரங்கு ஆடிகிழிக்குது பாதம் இரண்டும் பம்மி மறையுது உலகம் மாறி உருலதுடிக்குது காற்று காற்று கானலாகுது டர்ராம் டர்ராம்… அகோரி அகோரி ஆடிவருகிறான் உயிரைகொள்ள தேடிவருகிறான் காற்றின் வாசம் பற்றி வருகிறான்.. டர்ராம் டர்ராம்… ட்ரூ.. ட்ரூ… ஒலி இழுப்பின் கண்கள் விரிய தொடங்குது.. அகோரி அகோரி அகோரி நடனம் இழுத்து இழுத்து முண்டி வருகிறான் இமையம் காலில் தாங்கி வருகிறான் கடலடி தேடல் காட்சி தெரிகுது நடனக்கூச்சல் தேடி வருகுது.. அகோரி அகோரி அகோரி ஆட்டம்…
ருத்ரம் ருத்ரம் கோபம் வருகுது உணர்ச்சி உடம்பில் சிலுப்பி வருகுது ரோமம் எல்லாம் முண்டி நிற்குது மூன்றாம் கண் திறந்து கிடக்குது… ஆரோரோ அத்திமம் சத்தம் ருத்ரம் ருத்ரம்.. இது ஒரு ருத்ர தாண்டவம்..
சலங்கை கால்கள் தரையில் இல்லை கால்கள் இரண்டும் தலையில்…

காதல் கசியும் நொடிப்பொழுதினிலே..!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த ரயில் புறப்பட தயாராக நின்றது. அவன் வேக வேகமாக ஒவ்வொரு பெட்டியாய் ஏறி ஏறி இறங்கினான். இடையில் வந்த அத்தனை பேரையும் மின்னல் வேகத்தில் கடந்தான். அப்படி ஏறிச்சென்ற ஒரு பெட்டியின் தூரத்தில், ஜன்னல் ஓரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அவன் ஒரு பெருமூச்சு வாங்கினான். அவனின் வேகம் குறைந்தது. மெதுவாக அவள் பக்கம் சென்றான்.
‘ஹே..’ என்று சொல்லிவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான். அவள் அவனை பார்த்துவிட்டு மீண்டும் மாற்று பக்கம் திரும்பிக்கொண்டாள்.
‘என்கிட்ட சொல்லாம கூட கிளம்பிட்டல..’ என்றான் இன்னும் மூச்சிரைத்துக்கொண்டே. அவள் பக்கத்தில் இருந்த ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தான். அவன் இருந்த தாகத்திற்கு அந்த மொத்த பாட்டிலையும் குடித்து முடித்துவிட்டு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டே அவளை பார்த்தான்.
‘வா.. கீழ இறங்கு. நான் உன்ன அப்பரமா அனுப்பிவிடுறேன்..’ என்றான். அவள் கேட்கவில்லை. அவன் பக்கமும் அவள் திரும்பவில்லை.
‘இங்க பாருடி… எதுவா இருந்தாலும் கீழ இறங்கி பேசிக்கலாம்..’ என்றான் இன்னும் அழுத்தமாக. அவள் மீண்டும் பதிலெ…