கரையே கரைமீறாதே!

ஒரு வட்டாற்று பாதையில்
நகர்ந்து புரண்டு வரண்டாது ஓடுகிறது தண்ணீர்.
அதன் கரைகள்
இறுக்கமாக பின்னப்பட்டிருக்க வேண்டும்
அரிப்புகள் இல்லாமல்
ஆணியடித்தார் போல நிற்கிறது..!

கரைகளே அப்படித்தான்
நன்கு இறுகியே இருங்கள்
கரையுடைவின் ஊர் அழிவுறும்
போகும் வழியெல்லாம் தண்ணீர் வலியுறுத்தும்.!

பிடிக்கொண்ட மணல்
தடம்கொண்ட வகையாற்
சுரண்டும்பொழுதிலே
கரை உடையும் நாள் வரும்
ஊர் அழியும் நாளும் வரும்!!

கரையே!
நீ மெல்லியதாய் இரு மனதிலே
நீ கடுமையாய் இரு உடலிலே
கட்டுக்குள் சிக்குண்டு கடந்துவிடு
மாறாய் உடைக்கொள்ளாதே!!
ஊர் சிதை வேண்டாம்
கட்டுக்குள் சிக்குண்டே இரு…


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!