ருத்ர ஆட்டம்

ஒற்றை முழங்கு - உர்ராம்
பறையின் அடிப்பெருக்கு – டரடரடர டரக் டரக்
பாதமடங்கா பாறையில் நாட்டிய ருத்ரம்
வேக காலங்களின் விசித்திரங்கள்
கால்களின் போக்கின் ஒரு காட்டுவாசி..!!!!

டமரு டமுரு சத்தம்
டடங்கு டடங்கு டடங்கு.. அடங்காது..
சலங்கை எழுப்பும் ஒரு சத்தம்
ஜல் ஜல் ஜல்… முடியாது..

எரியும் பிணமிடை
கால்களும் உடன் எரியும்
நாட்டிய நடனத்தின் ஒரு உயிர்
அரங்கு அரங்கு ஆடிகிழிக்குது
பாதம் இரண்டும் பம்மி மறையுது
உலகம் மாறி உருலதுடிக்குது
காற்று காற்று கானலாகுது
டர்ராம் டர்ராம்…
அகோரி அகோரி ஆடிவருகிறான்
உயிரைகொள்ள தேடிவருகிறான்
காற்றின் வாசம் பற்றி வருகிறான்..
டர்ராம் டர்ராம்…
ட்ரூ.. ட்ரூ…
ஒலி இழுப்பின் கண்கள் விரிய தொடங்குது..
அகோரி அகோரி அகோரி நடனம்
இழுத்து இழுத்து முண்டி வருகிறான்
இமையம் காலில் தாங்கி வருகிறான்
கடலடி தேடல் காட்சி தெரிகுது
நடனக்கூச்சல் தேடி வருகுது..
அகோரி அகோரி அகோரி ஆட்டம்…

ருத்ரம் ருத்ரம் கோபம் வருகுது
உணர்ச்சி உடம்பில் சிலுப்பி வருகுது
ரோமம் எல்லாம் முண்டி நிற்குது
மூன்றாம் கண் திறந்து கிடக்குது…
ஆரோரோ அத்திமம் சத்தம்
ருத்ரம் ருத்ரம்.. இது ஒரு ருத்ர தாண்டவம்..

சலங்கை கால்கள் தரையில் இல்லை
கால்கள் இரண்டும் தலையில் உண்டு
சூலம் ஒன்று கைப்பற்றி நிற்குது
ஜடாமுடி அவன் முகம் மறைக்குது..
புலித்தோளும் புவிஅடையும்
அவன் கால்கள் ஏனோ சுற்றி திரியுது…

ஆரோகரம் அச்சோகரம் முரட்டு முக்தி
சுற்றி உருண்டோடும் ஒரு அகோர ஆட்டம்…
ஆட்டத்தின் முடிவாய் விரிந்துக்கொள்ளும் அவன் முகம்
அது ருத்ர தாண்டவம்..

கண்ணில் காணும் ருத்ர தாண்டவம்..!

- தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!