கருப்பிலே வண்ணக்கலவை!

திசைகள் மாற்றிக்கொண்டு
பட்டாம்பூச்சியின் சிறகுகள் பறக்கிறது!

கொஞ்சம் கீழ்குனிந்து
கொஞ்சம் தாண்டி குதித்து
கொஞ்சம் பக்கவாட்டிலும்
கொஞ்சம் நிதானித்தும்
அது பறந்து பறந்து செல்கிறது…!

வழியெங்கும் அதன் வண்ணத்தை
அள்ளித்தெளித்து செல்லும் வண்ணத்துப்பூச்சியின்
வண்ணம் அங்கு படரவில்லை..
முழுதாய் கருமை..

மனமுடைந்த பூச்சி
மீண்டும் வந்திசை நோக்கி திரும்புகிறது
கருமையிடம் வண்ணம் தெளிக்க..

பலமுறை தெளிப்பின்னும்
கருமையில் வண்ணம் படரவில்லை.
புரியுமனமொன்று பெற்ற வண்ணத்துப்பூச்சி
கருப்பின் இடத்திலே இருந்து
வண்ணமயமாக்குகின்றன..

ஒதுக்கப்பட்ட கருப்பில்
மேற்பட்ட வண்ணம் தெளிக்கப்படவேண்டாம்
வாழவேண்டும்..
கருப்பை வண்ணமாக்க..
பிறவர்ணங்கள் வாழவேண்டும்..


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..