மிதம் கொளல் கவி(?)வரி

மிருகங்களை துன்புறுத்தாதீர்

கானகத்தின் நடுவே
ஒரு பெரிய தார்சாலை திட்டம்
பணிகள் நடக்கையில்
இடையில் சிறுபணியிடை மிருகங்கள்..
சில விரட்டப்பட்டும்..
சில சுடப்பட்டும்..
சில கடத்தப்பட்டும்..!

முடிவாய் பலபலத்த தார்சாலை ஓரத்திலே
மிருகங்களை துன்புறுத்தாதீர் என்னும் பலகை.

அமைச்சர் மிருகம்

சக உரிமை, பெண்ணியம், பெண் மரியாதை
விடாமல் பேசிய அமைச்சர் வீட்டில்
நேற்று தான்
வெறி தாங்காது - கட்டில் கால்கள் முறிந்து விழுந்தன..

தூக்கம்

அன்று தூங்கிக்கொண்டிருந்தேன்
தூங்காமல் இருப்பது போல கனவு கண்டேன்..
விழித்து பார்த்தேன்...
தூங்கவே மாட்டேங்குறியேடா.. அம்மா கடிந்துக்கொண்டாள்..!

காக்கை மனிதன்

நான் உண்டுபோன மிச்சத்தை காக்கைக்கு வைத்தேன்
அருகில் உட்கார்ந்த காக்கை என்னையே உற்று பார்த்தது
நானும் பார்த்தேன்.. அது உண்ணவில்லை..
சரியென்று திரும்பி நடந்தேன்...
சட்டென வைத்த சாதத்தை கவ்விக்கொண்டு பறந்தோடியது!!
மனிதனின் சாதனை போல.. அதுவும் பெருமிதம்கொண்டிருக்கும்..!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..