Posts

Showing posts from November, 2016

ஈகோ - கோ..!

அவள் அலுவலகத்தின் வெளியே அவன் நின்றுக்கொண்டிருந்தான். பலதரப்பட்ட மனிதர்கள் மாறி மாறி அவனை கடந்து சென்றனர். தூரமாக அந்த கண்ணாடி பில்டிங்கில் இருந்து அவள் வெளிப்பட்டாள்.
சங்கடத்தோடு வராத சிரிப்பை வரவைத்துக்கொண்டு அவன் கையை உயர்த்தி காட்டினான். அவள் மேலும் கீழும் தலையை ஆட்டிக்கொண்டே அவன் அருகில் வந்தாள். இருவரும் பக்கத்தில் இருக்கும் சாலையோர பூங்காவிற்கு சென்றனர்.
‘சொல்லுங்க.. என்ன விசயம்’ அவள் உர்ரென்று கடினமான குரலில் கேட்டாள். அவன் விசித்திரமாக நிமிர்ந்து அவளை பார்த்தான்.
’இல்ல.. அது.. கொஞ்சம் நம்ம விசயம் பத்தி பேசணும்..’ என்று அவன் சொன்னதும் அவள் முறைத்து பார்த்தாள். ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
‘இனி பேச என்ன இருக்கு?’
‘தெரியல.. ஆனா பேசணும்..’
‘இங்க பாருங்க… இதுல பேச ஒண்ணும் இல்ல. எனக்கு வேலை இருக்கு.. ஏதோ பாக்கணும்னு சொன்னீங்களேனு வந்தேன்… இதுக்கு அப்பரம் என்னைய தொந்தரவு செய்யாதீங்க..’ சொல்லிவிட்டு அவள் திரும்பினாள். அவன் அவளது கையை பிடித்தான். அவள் வெறுப்பாய் உதறிவிட்டு வேகமாக நடந்தாள்.
’தேங்காத கண்ணு.. உனக்காக அழுக பாக்குதுடி… ஒரு பத்து நிமிசம் டி..’ அவன் கத்தினான். வேகமான அவள் கால்கள…

கேள்வியில் தங்கியிருக்கும் விடை..

ஆற்றின் நடுப்பரப்பில்
கைப்பற்றும் நடைப்பயணம்
அசைவெங்கும் அற்றி
மனம் தாங்கும் நிலைக்கொளல்!

கண்கள் ஊடாய்
வார்த்தைகள் பரிமாற்றம்...
ஆயிரம் கேள்விகள்!

விழிகள்..
திசைகளை தேடியல்ல
வழிகளை தேடி..
பயணிக்க!
விடையற்ற சிரிப்பில்
மீண்டும் தொடரும்
மெல்லியதோர் நடைப்பயணம்...

அந்த ஆற்றின் நடுப்பரப்பில்
ஆற்றை தேடி..

சில சமயங்களில்!
விடைகள் கேள்விகளில் தான்
தொங்கிக்கொண்டிருக்கும்..
இது புரியாத மனம்.. தேடிக்கொண்டிருக்கிறது!!!

-தம்பி கூர்மதியன்

இதுவல்ல தொலைநோக்கு.!

சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் நீயா நானா விவாதம் நடைப்பெறுகிறது. அதில் ஒரு இளைஞர் குஜராத்தின் முதலமைச்சராக மோடியின் வளர்ச்சி பாதையை பற்றி சிலாகித்து பேசினார். அதை கேட்ட சிறப்பு விருந்தினரில் ஒருவர்,
‘இதான். இது தான் இந்த காலத்து யூத். எதையும் மேம்போக்கா, மீடியா என்ன கண்ணோட்டத்த முன்ன வைக்குதோ அத மட்டுமே புடிச்சுட்டு திரியிறாங்க’ என்று கோபம் கொண்டார். அவர் சுட்டி காட்ட நினைத்தது மோடியின் ஆட்சியின் கீழ், குஜராத் - வளர்ச்சி என்னும் பாதையில் எவர்களை நசுக்கிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது என்பதை தான்.
மோடி என்னும் மாயை இந்தியா முழுதும் பரவி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு இந்திய அரசியலையும், வாழ்வாதாரங்களையும் புரட்டி போடும் ஒரு அறிவிப்பு வருகிறது. ஒரு வாரம் முன்னர் தான் சம்பளம் வாங்கி வாய் முழுக்க புன்னகையோடு மொத்த பணத்தையும் எடுத்து வந்து அம்மாவிடமும், மனைவியிடமும் கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவனின் சிரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பு.
சிப் இருக்கிறது, சிப்ஸ் இருக்கிறது என்று வழமையாக பரவும் வதந்திகள் மு…

பிறப்பு - தகப்பனாகிய நான் எழுதும்.. *1

மகளே! நீ கருவிலே உருவாகிக்கொண்டிருப்பதை உன் அம்மை என் காதோரத்தில் நாணப்புன்னகையில் சொல்வாள்.. நான் முதலில் தகப்பம் உணரும் நொடி அது!
உன் காதுகள் மலருமுன்னே நான் உன்னோடு பேச ஆரம்பித்திருப்பேன்.. உன் கண்களில் ஊடே எனை காணும் கனவுகள் பல கண்டுக்கொண்டிருப்பேன்..
என் அலுவலக சீண்டல்களையும் நான் தினம் கடந்து வரும் மனிதர்களையும் உன் அம்மையூடாய் உன் காதுகளில் சொல்லி வைப்பேன்..
எட்டி தவழ்ந்து நீ என்னை பிடிக்க அம்மையின் வயிற்றை கிழிக்க போடும் எத்து தாளங்களை என் முகம் புதைத்தும் என் காதும் கண்களும் புதைத்தும் நான் ஏங்கி காத்துக்கொண்டிருப்பேன்…!
மாதங்கள் கழியும்… என் குரல் உனக்கு பழக்கமாகும்..! செல்லமே! என நான் அழைக்கையில் அம்மையின் வயிற்றை நெட்டித்தள்ளி என்னிடம் பாய்ந்திட துடிப்பாய் நீ..! அம்மை வயிற்றினூடாய் உன் கன்னத்திலே அப்பொழுதே முதல் முத்தம் பதித்திடுவேன்!
நீ என் உலகத்தை ஆக்கிரமித்தாலும் என் உலகத்தை உருவாக்கி தந்தவள் உன் அம்மை..! அவள் வலியற்று சிரிக்கும்படியே நீ உலகத்தை ரசிக்க வருவாய்..
உண்மையாக சொல்கிறேன்..! அன்று மட்டும் தான் உன் அழுகையின் போது நாங்கள் ஆனந்த குளிர்பெறுவோம்.
ஊர் கூடி வரும்.. பெண்ணை போற்றும் நம் பூமி ஏனோ …