Posts

Showing posts from December, 2016

களம் காணீர்

’நகுலா… நகுலா…’ அந்த காட்டு பகுதியில் ரகு கத்திக்கொண்டே ஓடினான். ஒரு மர மறைவிலிருந்து நகுல் வெளிப்பட்டான். அவனை பார்த்த நொடியில் ரகு ஒரு பெருமூச்சு விட்டான்.
அடுத்த நொடி இரண்டு குச்சிகளில் நடுவில் ஒரு குச்சியில் முயல் தோலுறித்து தொங்க, கீழே நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தது.
‘சைவரு… கிழங்கு எதையும் காணல.. இதான் இன்னைக்கு.. கோச்சுக்காதம்முடே…’ நகுல் ரகுவை பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னான்.
‘பொறவு.. விசயம் காதுக்கெட்டுச்சா?’ நகுல் மீண்டும் கேட்டான். இன்னும் ஒரு கையால் முயல் கறியை உருட்டிக்கொண்டே.
ரகு பக்கத்தில் இருக்கும் ஒரு அலுமினிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காட்டோடையின் தண்ணீரை நிரப்பினான். ஓடை ஓர ஆலமர வேரையும், பக்கத்திலிருந்த சிறு இலைகளையும் பிய்த்துக்கொண்டான். அடுத்து ஒரு நீண்ட நெடிய மரத்தின் கீழ் கிளையை கத்தியால் வெட்டினான்.
மேலாதிய பட்டையை சீவிக்கொண்டே பேசினான்.
‘கம்பேனி முடிவெடுத்துட்டாங்க’ என்றான். இன்னும் சீவிக்கொண்டே.
‘என்னானு…’ நகுல் கேட்டான்.
‘நாளைக்கு அறிவிப்பு வரும். அப்போ தெரியும்…’
‘இத சொல்ல தான் வந்தியா…?’
‘இல்ல… இனி எனக்கு வெளிய வேலை இல்ல. நாம இந்த போராட்டத்த ஆரம…

ஆயுத்தம் கொள்க!

ஆம்... 
கடல் சீறிக்கொண்டு தான் இருந்தது
மரங்கள் கொஞ்சம் குழந்தையாய் சாய்வு விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தன..

தேமேவென்று விழுந்துக்கொண்டிருந்த 
மழை நீருக்கு ஒரு ஆடல் ஆட்டம் பழக்கிக்கொண்டிருந்தது..

ஆள் தூக்கி இல்லை..
தகர வாகன தூக்கி இல்லை...
பல ஆண்டுகளாய் நிழல் காத்த, 
உயிர் காத்த,
பல உயிர் இருப்பிடமான
மரம் தூக்கிகள்..

ஆம்...
இவை மரம் தூக்கிகள்!

மனமகிழ்வோடு முதல் முறை மரம் நடுதலில்
நான் பூரித்து நின்ற என் முதல் மரத்தை
நானே என் கைகளால் வெட்டி தூர எரிந்தேன்...

தகரங்கள் பறந்தன
கம்பங்கள் வேறு இடத்தில் நட்டுன்று நின்றன
சில உயிர்களும் கொடுத்தானது..

வீதியில் இறங்கி நடக்கையிலே
உயிரை பிடித்துக்கொண்டு நிற்கிறேன் பாரடா!
யென கிளை மரங்கள் தோலுரித்து 
கண்ணீர் மழை சொட்டு வடிக்குதே!

மரமே
கிளையே! 
நன் உயிரே!
நின் உயிரை மீள்வதோ 
மாற்று,
நின் உயிர் புதுமை கொணர்வோ
கனா கொண்டிருக்கிறேன்...
வீதிகளில் இறங்கி
நின் உயிர் மீட்கும் ஆயுத்தம் கொண்டிருக்கிறேன்..!

மீள்வோம்...
வேரோடிய மரமெல்லாம் 
நிலைப்பெற அற்று உருப்பெற உழைப்போம்
வாரும் தோழரே!!!

-தம்பி கூர்மதியன்

என் கவி - பாரதி!

பாரதி ஒரு தேசிய கவிஞன். விடுதலை முழக்கங்களை எழுப்பியவன் என்னும் போக்குகளை கடந்த ஒரு பாரதி இருக்கிறான். அந்த காலத்தை ஒருமித்தமாக கொண்ட இரு தமிழர்கள் – சுப்பிரமணிய பாரதி மற்றும் சீனிவாச இராமானுஜம். இருவர் மீதும் எனக்கு என்னவோ தீராத காதல் உண்டு.
மட்டுறுத்தப்பட்ட சமூகமாக அந்த காலக்கட்டத்தில் இருந்தவர்கள் தாழ் இன மக்கள் மட்டுமல்ல. மேலை சமூகமென சொல்லப்படுபவரும் கூட அங்கு மட்டுறுத்தப்பட்டவராய் தான் இருந்தார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் நான் நினைக்கும் இருவர் தான் இவர்கள். ஒருவர் தனக்காக தம் குலத்தடுப்பை மீறினார். மற்றொருவர் நாட்டுக்காக மீறினார். நாட்டுக்காக மீண்டுவந்தவன் தான் பாரதி. என் கவிஞன்.
பொதுவாக பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கும் மனப்பாட செய்யுளும், அவர் எந்த ஆண்டு பிறந்தார், அவர் மனைவி பெயர் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு கொட்டாவி தான் வரும் எனக்கு. எல்லாவற்றிலும் ஒரு உட்கருத்து புதைந்து இருக்கிறது, அதை கூடங்கள் கற்பிக்காது நம் மனமே கற்பிக்கும். நான் இன்று வீதிக்கு இறங்கி போராட நினைக்கையில் என் குடும்பத்தால் மறித்து நிறுத்தப்படுகிறேன். அப்பொழுதெல்லாம் தனிமையான இரவுகளில் பாரத…

முப்பருவ காதல்

ரகு அந்த அமைதியான இரவில் கதை எழுதிக்கொண்டிருந்தான். அவன் மனைவி பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் குழந்தைகள் பள்ளி டூர்க்கு வெளியூர் சென்றிருந்தார்கள். தூக்கத்திலே புரண்ட அவன் மனைவி இன்னும் அவன் பேனாவும் கைகளோடு இருப்பதை பார்த்துவிட்டு கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
‘என்னடா பண்ணுற..?’ அவள் கேட்டுக்கொண்டே எழுந்தாள். அவன் புன்னகையோடு அவளை பார்த்தான்.
‘ஒரு கதை மா…’
‘என்ன கதை…? வழக்கம் போல இந்த கதைக்கும் ஹீரோ ரகு.. ஹீரோயின் சுவாதியா…?’ அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்.
‘உன்னையும் என்னையும் விட்டா.. எனக்கு வேற யாருடி கண்ணம்மா தெரியும்..’ அவன் காதல் பார்வையோடு சொல்ல அவள் சிரித்தாள்.
‘அது சரி… இப்போ உங்க கதை. கொஞ்சம் படிச்சு காட்டுறீங்களா..?’ அவள் கேட்டாள். அவன் தொண்டையை கரகரத்துக்கொண்டான். படிக்க தொடங்கினான்.
---
ரகு அந்த பூங்காவின் வாசலிலே அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான். தூரத்திலிருந்து சுவாதி சிரித்த முகத்தோடு ஓடி வந்தாள். அவன் உர்ரென்றே நின்றுக்கொண்டிருந்தான்.
‘ஹே.. ரகு சாரி டா.. லேட் ஆகிடுச்சா..’ அவள் கேட்டாள். அவன் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். அவள் தோப்புக்கரணம் போடு…