ஆயுத்தம் கொள்க!

ஆம்... 
கடல் சீறிக்கொண்டு தான் இருந்தது
மரங்கள் கொஞ்சம் குழந்தையாய் சாய்வு விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தன..

தேமேவென்று விழுந்துக்கொண்டிருந்த 
மழை நீருக்கு ஒரு ஆடல் ஆட்டம் பழக்கிக்கொண்டிருந்தது..

ஆள் தூக்கி இல்லை..
தகர வாகன தூக்கி இல்லை...
பல ஆண்டுகளாய் நிழல் காத்த, 
உயிர் காத்த,
பல உயிர் இருப்பிடமான
மரம் தூக்கிகள்..

ஆம்...
இவை மரம் தூக்கிகள்!

மனமகிழ்வோடு முதல் முறை மரம் நடுதலில்
நான் பூரித்து நின்ற என் முதல் மரத்தை
நானே என் கைகளால் வெட்டி தூர எரிந்தேன்...

தகரங்கள் பறந்தன
கம்பங்கள் வேறு இடத்தில் நட்டுன்று நின்றன
சில உயிர்களும் கொடுத்தானது..

வீதியில் இறங்கி நடக்கையிலே
உயிரை பிடித்துக்கொண்டு நிற்கிறேன் பாரடா!
யென கிளை மரங்கள் தோலுரித்து 
கண்ணீர் மழை சொட்டு வடிக்குதே!

மரமே
கிளையே! 
நன் உயிரே!
நின் உயிரை மீள்வதோ 
மாற்று,
நின் உயிர் புதுமை கொணர்வோ
கனா கொண்டிருக்கிறேன்...
வீதிகளில் இறங்கி
நின் உயிர் மீட்கும் ஆயுத்தம் கொண்டிருக்கிறேன்..!

மீள்வோம்...
வேரோடிய மரமெல்லாம் 
நிலைப்பெற அற்று உருப்பெற உழைப்போம்
வாரும் தோழரே!!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி