Posts

Showing posts from January, 2017

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

உணர்ந்து தெரிந்து புரிந்து போராடலாம்.. வா தோழா!!!

#AmendPCA
நாம் இங்கு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் அதிகமாக பார்க்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. PCAல் எதற்காக திருத்தம் கொண்டு வரவேண்டும்? PCA என்பது Prevention of Cruelty to Animals என்று வருகிறது. பெயரே புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருப்பதால் அடுத்த கட்டத்திற்கு நகருவோம்.
2014ல் நீதிமன்றம் காளை மாடுகளை பொது இடங்களில் வித்தை காட்டும் விதமாக வைத்து செயல்படுத்துவது அனுமதிக்க முடியாது. அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற போட்டிகளுக்கு தடை விதித்தது.
இது வித்தையா என்று நீங்கள் கேட்கலாம். Performing Animals என்னும் கோட்பாடுகளுக்கு கீழ் இது வித்தை என்று சொல்லப்படுகிறது. அது சரி… காளை எப்பொழுது இதில் சேர்க்கப்பட்டது? அதற்கு முன்னர் 1991ல் சுற்றுசூழல் அமைச்சகம் கரடி, குரங்கு, புலி, நாய், சிறுத்தை போன்ற மிருகங்கள் கூண்டில் அடைக்கப்பட்டோ, பழக்கப்படுத்தி காட்சி மிருகங்களாக்குவதோ தவறு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அப்போதைய சர்கஸ் எதிர்த்து வந்தது ஒரு புறம் இருக்கட்டும். இந்த சட்டத்தில் 2011ல் அப்போதைய சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை விட்டார். அது என்ன? ஒன்றும் பெ…

எதற்காக இந்த வரி திணிப்பு?

Image
பெட்ரோலிய விலை நிர்ணயம் பற்றி படித்துக்கொண்டிருந்தேன்.
ஜன., 1 2017ன் படி ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கும் க்ரூடு ஆயில்- சுத்திகரிப்பின் பின்னர் 31.54 ரூபாய்க்கு வந்து நிற்கிறது. புரியும்படி சொல்லவேண்டுமாயின் நாம் போடும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை உற்பத்தி விலை 31.54 ரூபாய்கள் தான்.
இதன்பிறகு இந்த விலையில் தான் அரசாங்கும் உள்ளே புகுந்து ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அதன்படி இதன் மேல் செலுத்தப்படுவது கலால் மற்றும் வாட் வரிகள். ஜன.,1ன் கணக்கு படி 21.48 ரூபாய் கலால் வரியாக கட்டப்படுகிறது
கலால் வரி என்றால் என்ன?
நம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்கள் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி தான் கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, பொருளின் தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும்.
Source: http://tamil.goodreturns.in/classroom/2014/12/what-is-the-difference-between-excise-duty-sales-tax-003394.html
வாட் வரி பற்றி நாம் அறியாதது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் இந்த வாட் வரி இந்த படத்தில் தில்ல…