எதற்காக இந்த வரி திணிப்பு?

பெட்ரோலிய விலை நிர்ணயம் பற்றி படித்துக்கொண்டிருந்தேன்.

ஜன., 1 2017ன் படி ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கும் க்ரூடு ஆயில்- சுத்திகரிப்பின் பின்னர் 31.54 ரூபாய்க்கு வந்து நிற்கிறது. புரியும்படி சொல்லவேண்டுமாயின் நாம் போடும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை உற்பத்தி விலை 31.54 ரூபாய்கள் தான்.

இதன்பிறகு இந்த விலையில் தான் அரசாங்கும் உள்ளே புகுந்து ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

அதன்படி இதன் மேல் செலுத்தப்படுவது கலால் மற்றும் வாட் வரிகள். ஜன.,1ன் கணக்கு படி 21.48 ரூபாய் கலால் வரியாக கட்டப்படுகிறது

கலால் வரி என்றால் என்ன?

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்கள் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி தான் கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, பொருளின் தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும்.

Source: http://tamil.goodreturns.in/classroom/2014/12/what-is-the-difference-between-excise-duty-sales-tax-003394.html

வாட் வரி பற்றி நாம் அறியாதது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் இந்த வாட் வரி இந்த படத்தில் தில்லிக்கு கணக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. 15.01 ரூபாய்கள் வரியாக கட்டப்படுகிறது. மொத்தம் 31.54 ரூபாய் பெட்ரோலை வாங்க - நாம் 36.49 ரூபாய் வரியாக கட்டிக்கொண்டிருக்கிறோம். நூறு சதவீதம் மேல் வரி.

அந்நிய நாடுகளில் இருந்து க்ரூடு ஆயில் இறக்குமதி விலை குறைந்த போதிலும் அதை நாம் அனுபவிக்க முடியாமல் தொடர்ந்து இந்த அரசாங்கங்கள் நம் மேல் வரியை திணித்துக்கொண்டிருக்கின்றன.

2004ல் 3.46 ரூபாயாக இருந்த டீசலின் கலால் வரி 2017ல் 17.33 ரூபாயாக இருக்கிறது அவலத்தின் அவலம். இங்கு வரிகள் மக்களின் நலனுக்கா அல்லது அவர்கள் உயிரை குடித்து பெருமுதலாளியும், அரசியல்வாதிகள் மகிழ்வாக இருப்பதற்காகவா என்பது புரியவில்லை.

இன்றும் மக்களின் மீது அக்கறை இருக்கிறது என்று சொல்லும் அரசாங்கம் இந்த வரிகள் முறையாக எதற்கெல்லாம் உபயோகபடுத்துகிறது அதற்கான தேவைகள் என்ன.. எப்படி மீண்டும் இவை மக்களை வந்து சேர்கிறது என்னும் கணக்கை சமர்பித்தாக வேண்டும். மக்களின் பார்வைக்கு இவை வெளிச்சமாக்க வேண்டும்.

ஒரு எரிப்பொருளின் விலை நமது அத்தியாவசிய தேவை அனைத்தையும் மாற்றிவிடும் என்பது நாம் அறிந்ததே. ஒருவேலை, இந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைந்தால் அவை நாம் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் அவை எப்படி மதிப்பு கூட்டாக அமையும் என்பதையும் நான் சொல்ல தேவையில்லை.

மக்களுக்கான அரசாங்கம் என சொல்லிக்கொள்ளும் மத்திய அரசாங்கம் - ஏதேனும் முடிவு எடுக்குமா?


தரவு மற்றும் படம் சோர்ஸ்: http://www.mycarhelpline.com/index.php?option=com_latestnews&view=detail&n_id=417&Itemid=10

Comments

  1. ஆண்ட அரசு,ஆளும் அரசு ,மாநில அரசு ,மத்திய அரசு எல்லோருமே இந்த கூட்டுக் கொள்ளைக்கு துணை போகின்றன !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..