Skip to main content

உணர்ந்து தெரிந்து புரிந்து போராடலாம்.. வா தோழா!!!

#AmendPCA

நாம் இங்கு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் அதிகமாக பார்க்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. PCAல் எதற்காக திருத்தம் கொண்டு வரவேண்டும்? PCA என்பது Prevention of Cruelty to Animals என்று வருகிறது. பெயரே புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருப்பதால் அடுத்த கட்டத்திற்கு நகருவோம்.

2014ல் நீதிமன்றம் காளை மாடுகளை பொது இடங்களில் வித்தை காட்டும் விதமாக வைத்து செயல்படுத்துவது அனுமதிக்க முடியாது. அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற போட்டிகளுக்கு தடை விதித்தது.

இது வித்தையா என்று நீங்கள் கேட்கலாம். Performing Animals என்னும் கோட்பாடுகளுக்கு கீழ் இது வித்தை என்று சொல்லப்படுகிறது. அது சரி… காளை எப்பொழுது இதில் சேர்க்கப்பட்டது? அதற்கு முன்னர் 1991ல் சுற்றுசூழல் அமைச்சகம் கரடி, குரங்கு, புலி, நாய், சிறுத்தை போன்ற மிருகங்கள் கூண்டில் அடைக்கப்பட்டோ, பழக்கப்படுத்தி காட்சி மிருகங்களாக்குவதோ தவறு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அப்போதைய சர்கஸ் எதிர்த்து வந்தது ஒரு புறம் இருக்கட்டும். இந்த சட்டத்தில் 2011ல் அப்போதைய சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை விட்டார். அது என்ன? ஒன்றும் பெரிய சட்டமில்லை – அந்த முன்னால் சொன்ன மிருகத்தின் வரிசையில் காளையையும் இணைத்துக்கொண்டார்.

அந்த இணைப்பை திருத்த சொல்லி தான் நாம் AmendPCA என்று போராடிக்கொண்டிருக்கிறோம்.

#BanPETA

சரி. இருக்கட்டும். ஏன் பீட்டா மீது நம்மவர்க்கு கோபம்? பீட்டா – வெளிநாடுகளில் கருணை கொலை என்னும் பெயரில் அவர்கள் தெருவில் இருந்து எடுத்த 98 சதவீத நாய்களை கொன்றுவிட்டது, பீட்டா போர்வை போர்த்திய திருடன் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக பத்தாண்டுகளுக்கு மேலாகவே எதிர்ப்புகள் உள்ளன. 2008ம் ஆண்டிலிருந்தே எதிர்ப்பவரும், ஆதரிப்பவரும் மாறி மாறி அடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். 1960 PCAன் ஆக்ட் படி காளை கொடுமைபடுத்தபடுகிறது என்னும் குற்றசாட்டு இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றம் புது புது ஜல்லிக்கட்டு விதிமுறைகளை விட்டு தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தந்தது. இந்த விதிமுறைகள் ஜல்லிக்கட்டின் வீரியத்தை அழிக்கிறது என்று மக்கள் சொல்லினும் – இருந்துவிட்டு தான் போகட்டுமே என்னும் போக்கும் உண்டு.

சரி அது தான் நீதிமன்றம் சொன்னதை கேட்கிறோமே என்று நீங்கள் சொல்லலாம். ஆம்.. ஆனால் இந்த இடத்தில் தான். 2011ல் பீட்டா உள்ளே குதிக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்த்து அது களம் காணுகிறது. 2011னா? இது எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று மேலே தேடாதீர்கள். நானே சொல்கிறேன். இதே ஆண்டு தான் காளைகள் Performing Animals ஆக இருக்கமுடியாது என்னும் லிஸ்ட்டில் இணைக்கப்பட்டது. அதை தான் நாம் மேலே பார்த்தோம். முக்கியமாக இந்த சட்ட திருத்தை மேற்கோள் காட்டி தான் ஜல்லிக்கட்டை நீதிமன்றம் தடை விதித்ததே. 2012ல் எழுபதுக்கும் மேற்பட்ட விதிமுறைகளோடு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அதன் பின்னர் ஆண்டுகளில் அந்த விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றபடவில்லை என்றும் பீட்டா கணக்கு காட்டி – ஜல்லிக்கட்டு தடையை வாங்கியது.

அப்படி என்றால் இந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது? பீட்டாவிற்காக தானா? இதில் பீட்டாவின் சூழ்ச்சி இருக்கிறதா? பணம் விளையாடி இருக்கிறதா? பீட்டாவின் சர்வதேச அரசியல் நோக்கங்களாக நாம் முன்னே பல விசயங்களை அறிந்திருக்கிறோம். இதனால் தான் நாம் பீட்டாவை எதிர்க்கிறோம். அவர்களுக்கே தடை விதிக்க சொல்கிறோம்.

#DissolveAWBI

2016ல் சுற்று சூழல் அறிக்கையை மாற்றி மத்திய அரசு ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடுத்த போதிலும் பீட்டா AWBI (Animal Welfare Board of India) இன்னும் இதற்கான சான்று கொடுக்கவில்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டு நடக்கும் முன்னே தடுத்துவிட்டது. அது ஏன் AWBI சான்று கொடுக்க வேண்டும்?

நமக்கு ஆரம்பத்தில் இருந்து தலைவலியாக இருக்கும் அந்த காளை மாட்டை சேர்த்த லிஸ்ட்டில் ஏதேனும் திருத்தம் கொண்டுவரவேண்டுமானால் அதற்கு AWBIன் அனுமதி வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்கிறது. AWBI அனுமதி தந்தால் தான் அதில் எந்த திருத்தம் வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்.

AWBI ஒரு விதத்தில் பீட்டாவிற்கு சப்போர்ட் செய்துக்கொண்டிருக்கிறது. மேலும் பீட்டாவிற்கு வேண்டுமென்றே சாதகமாக இருக்கிறது என்பன போன்ற பல காரணிகளை முன்வைத்து – ஒரு வெளிநாட்டு அமைப்புக்கு துணைபோகும் AWBI தேவையில்லை என்று அதை கலைக்க நாம் முன் வைக்கிறோம்.

இவை தான் நாம் போராடும் காரணிகள். இவை இல்லாமலும் பலவை இருக்கலாம். நான் அறியாதவை சிலதும் இருக்கலாம். என் சிற்றரறிவுக்கு எட்டியவை மட்டும் இங்கே.

சரி.. எல்லாம். ஜல்லிக்கட்டு பற்றி பீட்டா சமர்பித்தவைகளில் ஒரு வீடியோ இங்கே கீழே இருக்கிறது. பாருங்கள்… நாம் நமது பாரம்பரியம் என்று போற்றினாலும் நாம் கொஞ்சம் ஒழுங்கீன நடவடிக்கைகள் எடுப்பதும் இங்கு அவசியம் ஆகிறது என்பதை இதை பார்த்த பிறகு நாமும் உணரலாம்.

https://www.youtube.com/watch?v=coZvTRHt2m4

முதல் முறையாக இளையோர் கூட்டம் பெருந்திரளாய் கூடி வந்திருக்கிறது. அதற்காகவாவது இந்த போராட்டம் வெற்றி பெற்றாகவேண்டும். அப்படி வெற்றி கிட்டயாகின், அடுத்து நாம் நம் காளைகளை பாதுகாக்கவேண்டியதும் நம் கடமை என்பதை போராடும் நாம் மறந்துவிடகூடாது.

குறிப்பு: நான் சொன்னவை நான் படித்து அறிந்தவை மட்டுமே. ஏதேனும் என் செய்திகளில் தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள். நன்றி

- தம்பி கூர்மதியன்


Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…