முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

மகளே!
புரளுதும்
முட்டி கால் பதித்தலும்
தத்தை நாட்டிய நடையிலும்
உயிர் சிரிப்பை கூட்டிக்கொண்டாய் மகளே!

உனை மடிமீது கிடத்தியே
இரவின் தூக்கங்கள் தொலைக்கையில்
நம் அக்கத்தின் குளத்தவளைகள்
சிரிப்பு கூட்டிக்கொண்டதை அறிவாயோ?
என் நெஞ்சகம் சாய்ந்து
உன் உறக்கத்தின் போது
தலை கோதலை கண்டு
பல்லி ஒன்று ‘உச்’கொட்டிதையும் அறிவாயோ?

உன் ,
முதல் பல் முளைவும்
முதல் நடையும்
முதல் சிரிப்பும்
முதல் வார்த்தையும்
முழுதாய் சேர்த்து பத்திரப்படுத்தியிருக்கேன்…
உன் பொக்கை வாய் நினைவுகளை
நான் பொக்கைகொள்ளும்போது சேர்த்து சிரிப்பதற்காக..!

முதல் நாள் பள்ளி..
நாளை முதல் நாளாய்
புது உலகம்…
தாமரை மொட்டின்
ஒவ்வொரு இதழும் பிரித்து மலராய்
உருக்கொள்ளும் நாட்கள் இவை..
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்…

நம்மை பிணைக்கும் மொழியையும்
நம்மை தாங்கும் பூமியையும்
நம்மை இயக்கும் உலகையும்
அறியபோகிறாய் நீ…

மறையும் மஞ்சள் நிற மண் கண்டிருக்கிறாய்..
கருமையும் செம்மையும் வெள்ளையுமாய்
மணற்கூட்டம் வந்து உன்னை பிரமிக்க வைக்க போகிறது!

இனம் மொழி மானம் பேணுதலாய்
உயிர் நீத்த பல வீரமகளீர் பாடம் சொல்லப்போகிறது..

கலை காவியம் விளையாட்டு
உலகின் பல்முகம் காட்டி பிரம்மாண்ட உலகு
உனை சீண்ட காத்திருக்கிறது!

மகளே! என் செல்வமே!
உந்தன் இம்முதல் காலடி
உனக்கு அறிவையட்டுமன்றி
போட்டிகளையும் வஞ்சகதையும் சூழ்ச்சியையும் முன்வைக்கும்
எட்டி மிதித்துவிடு கண்ணே!
அவை நமக்கு வேண்டாம்…
உலகத்தின் தேவையின் மனிதம் பயக்கும்
விஞ்ஞானம் கூடிய மெய்ஞான அறிவைக்கொண்டு
சிறகடித்திடுவாய் செம்பூவே!!!

கற்றலன்றி… கற்பித்தலும் அறிந்து
ஊரார் மட்டுமன்றி…
உன் அப்பனுக்கும் கற்பிப்பாயா கண்ணே!

அட…
அப்பனின் ஆசைகள் கிடக்கட்டும்..
உன் ஆசை உருவாக்கிட
முதல் அடி எடுத்துவையம்மா.. உன் பள்ளிக்கு!

-தம்பி கூர்மதியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..