Posts

Showing posts from March, 2017

வறட்டு பூமியாக்கும் வளர்ச்சி எதற்கு?

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. இந்தியா ஒரு விவசாய பூமி. இதுபோன்ற வாசகங்களை காற்றில் எழுதி வைக்கும் நிலை வந்துவிட்டது. விவசாயத்திற்கு தேவையான உள்ளீடும் சரி வெளியீடும் சரி இங்கு அந்தரத்தில் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது. ஒரு இடம் எதில் உயர்ந்து இருக்கிறதோ அங்கு தான் அவனை முடக்க வேண்டும். வளர்ச்சி என்னும் பொறி வைத்து, அவனின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்க வேண்டும். அதை தான் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
ஏர் உழும் நாட்டு மாடுகளை அழிக்கும் திட்டம், ஹைபிரிட் விதைகள், நிலத்தை அழிக்கும் பூச்சிக்கொள்ளி மருந்துகள், பாய்ச்ச வேண்டிய தண்ணீரின் தட்டுப்பாடு என விவசாயத்தின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பறக்கிற பறவையின் ரெக்கையை உடைத்துவிட்டு பறக்கிற போல வீடியோ கேம் தயாரித்து பறவையை விளையாட சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நம்மை ஆட்டி வைக்கும் ஆட்கள்.
வளர்ச்சி அடிப்படையை அழித்து வரக்கூடாது. அப்படி வந்தால் அது வளர்ச்சி இல்லை. இந்தியாவின் மொத்த அடிப்படையே விவசாயம் தான். இயற்கை நமக்கு அளித்த கொடை கொஞ்சநஞ்சமல்ல. அதை மீறி நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மையி…